Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம்! உப்பை குறைத்தால் இதயநோய்! வரும்

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல் லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கி ன்றனர் மருத்துவர்கள். உணவுப் பொரு ட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறு த்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என் று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிய வந் துள்ளது.

எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று கூறாமல் வருகிறது மாரடைப்பு நோய். இதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்க ளை கேட்பதும் தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள் ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத் துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக உப்பைக் குறைத் துக்கொள்வதே மாரடைப்பு முதலான இத யநோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத்தகவல் அதிர்ச்சிகரமான தகவ லை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டென் மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல் கலைக்கழக மருத்துவமனை யில் 40,000 பேரிடம் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்து க் கொள்வோரின் உடலில் 2.5 சத வீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள் ளது.

இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தி ல் ரெனின் என்ற புரதமும், அல்டோ ஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் அதிகளவில் சுரந் து, உயர் ரத்த அழு த்தத்தை ஏற்படு த்தியுள்ளது.

“உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்கு ப் பதி லாக புகைப்பிடித்தல், மது அருந்து தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல் லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று இந்த ஆய்வை மேற் கொண்ட ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் தெரிவி த்துள்ளார்.

6 கிராம் உப்பு

“நாளொன்றுக்கு உணவில் சராசரியா க 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்” என்று இருதய நிபு ணர்கள் சங்கத்தின் அறிவியல் ஆலோசகர் கெய்த் பெர்டிணாண்ட் தெரிவித்துள்ளார். இந்த கருத்து மே ற்படி ஆய்வு முடிவிற்குச் சாதகமான தாகவே உள்ளது.

உணவில் தொடர்ச்சியாக உப்பின் அளவினைக் குறைத்துக் கொ ண்டு வருவது உடல் நலத்துக்கு ஆரோக்கி யமானதில்லை. அவர வர் உடல் எடைக்கேற்ப, தினசரி ஒரு குறிப்பிட்ட அளவாவது உப்பை உணவி ல் சேர்த்துக் கொள்வதே உடல் ஆரோக் கியத்துக்கு நல்லது என்கின்றனர் மருத் துவர்கள். அதே சமயம், “உணவில் உப் பைக் குறைப்பதால் இருதய நோய் ஏற் படுவதற்கான வாய்ப்பில்லை” என்று பேராசிரியர் கிரஹாம் மெக்கிரி கோர் தெரிவித்துள்ளார்.

உப்போ, சர்க்கரையோ எதையுமே உண வில் அளவாக சேர்த்துக் கொண்டால் ஆபத்தில்லை.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: