Wednesday, June 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சின்ன‍தாய் ஒரு பேட்டி – நம்ம‍ சின்ன‍ ஜெனிலியாவுடன் . . . .!

சின்ன‍தாய் ஒரு பேட்டி – நம்ம‍ சின்ன‍ ஜெனிலியாவுடன்! என்ன‍ங்க யாருன்னு தெரியவில்லையா? அட, சித்து +2வில் நடித்த‍ நம்ம‍ சாந்தினி தாங்க! ஆமாம், நடிகை ஜெனிலி யாவின் முகச் சாயலுடன் இவர் இருப்ப‍ தால், கோடம்பாக்க‍ம் வட்டாரத்திலும், இவ ரது ரசிகர்களும் இவரை சின்ன‍ ஜெனிலியா என்றே அழைக்கி றார்கள். 

இயக்குநர் கே. பாக்யராஜின் அறிமுகங்கள் சோடை போக மாட்டார்கள். இதற்கு முந்தைய உதாரணங் கள் ஊர்வசி, சுலக்ஷனா, கல்பனா போன்று ஏராளம் பேர் உண்டு. அண்மை உதாரணம் சாந்தினி.

‘சித்து +2’ வில் அறிமுகமான சாந்தினி. சொல்லிக் கொள்கிற நடிப்பு வாய் ப்புள்ள படங்களாக மட்டும் தேர்வு செய்து ஓசைப் படாமல் முன்னேறி வருகிறார். பாக்யராஜ் படங்களில் கதா நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். வெறுமனே மரத்தை ச் சுற்றிவந்து டூயட் பாட கதாநா யகி நடிகைகளைப் பயன்படுத்த மாட்டார். அந்த பாரம்பரியத்தி ல் வந்ததாலோ என்னவோ சாந்தி னியும் படத்தேர்வுக்கு முன் கதைத் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.

சர்ச் பார்க் கான்வென்டில் படித்த போதும். ஆதர்ஷ் வித்யாலயா வில் படித்தபோதும் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் ஒரு பொறுப் புள்ளமாணவியா கவே அமைதியாக இருந்திருக் கிறார் சாந்தினி. மேடையேறி மைக் பிடித்து பேசியதில்லை. ஓரிரு முறை நடன நிகழ்ச்சியி ல் ஆடியதோடுசரி. மற்றபடி படி ப்பு தவிர பிறவற்றில் ஆர்வம் காட்ட பதவராகவே இருந்திருக் கிறார்.

ப்ளஸ்டூ முடித்தபின் ஒரு நண் பர் மூலம் சென்னை போட்டி யில் கலந்து கொண்டார். அதற் கான முன் தயாரிப்பு பயிற்சிக ளில் ஈடுபட்ட போது சாந்தினி யின் மனப்பான்மையே மாறிப்போ னது. மேடையேறப் பயந்த அவர்.மிஸ் சென்னை போட்டியில் கல ந்து கொண்டது. கேட்வாக் போனது எல்லாம்நம்பமுடியாத அதிச யம் தான். போட்டியில் இரண்டா வதாக வந்தார். அது மட்டுமல்ல ‘மிஸ் போட்டோ ஜெனிக்’காகத் தேர்வானார். நல்ல முகவெட்டு கொண்டவர் என்ற அங்கிகாரம் கிடைத்தது எதிர்பாராத மகிழ்ச்சி. இந்த தகுதியில்தான் பாக்யராஜின் அறிமுக வாய்ப்பு வந்த து.

மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டது விளம்பர வாய்ப் புகளை அள்ளித்தரும் என்றனர் சிலர். ஆனால் முத லில் வந்தது சினிமா வாய்ப்புதான். அது தான் ‘சித்து +2’ ஒரு பிரபல இயக்குநர். திரைக்கதையில்பெயர் பெற்றவர் ஒருவரின் ப்டத்தில் நடிக்கிற பெருமையுடன், திருப்தியு டன் முதல் படத்தில் நடித்தார். படம் பார்த்து பலரும் பாராட்டினார்.

முதல் படத்திக்குப் பின் சாந்தினியை விள ம்பர வாய்ப்பு கள் தேடி வர ஆரம்பித்தன. இவர் நடித்த இரண்டாவது படம் ‘படித்து றை’ படப்பிடிப்பு முடிந்து விட்டது. முதல் படத்துக்கு மாறாக கிராமத் துப்பெண் வேடம் இதற்கிடையே ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்தன. குறிப்பாக போத்தீஸ் விளம்பரங்களில் இவர் பிரபல முகமாகிவிட் டார். 

பீமா ஜுவல்லரி,அப்பல்லோ கம்ப்யூட்டர்ஸ் உள்பட ஏகப்பட்ட டெக்ஸ்டைல்.ஜுவல்லரி விளம்பரங்களில் நடித்தவர். இவர் சென் னை மட்டுமல்ல தமிழக பிற நகரங்கள் மட்டு மல்ல 

சிங்கப்பூர்,துபாய் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விள ம்பர மாடலிங் செய்துள்ளார். அண்மையில் துபாயிலுள்ள சென் னை ஜுவல்லரிக்காக படப்பிடிப்பில் கலந்துக் கொண் டிருக்கிறார்.

போத்தீஸ் விளம்பரம் பார்த்து மூன்று படங்கள் வந்துள்ளன. தமி ழில் நகுலுடன் ‘நான் ராஜாவா கப் போகிறேன்’ இதை இயக்குபவ ர் ப்ருத்வி.இவர் வெற்றி மாறனின் உதவி இய க்குநர். இப் படத்துக்கு வெற்றி மாறன்தான் வசனம் எழுதுகிறார்.இதுதவிர இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புகள்.

‘நான் ராஜாவாகப் போகிறேன்’ வித்தியாச மான ஆக்ஷன் படம். இதில் நான்சட்டக் கல் லூரி மாணவியாக நடிக்கிறேன். திருநெல் வேலி ஸ்லாங் பேசும்என் கேரக்டர். ‘புதுசாக இருக்கும்’ என்கிறார் சாந்தினி.

எதாவது படிப்பதைவிட படைப்புக்கு வழி செய்யும் படிப்பை தொ  டர வேசாந்தினிக்கு விருப்பம். அதனால் எத்திராஜ் கல் லூரியில் விஸ்காம் சேர்ந்தார். படித்துவிட்டு ஏதாவ து விளம்பரக் கம்பெ னியில் கிரியேட்டிப் பகுதியில் வேலையில் சேரத் திட்டமிட்டிரு ந்தார். அதற்குள் சினிமாவும், விளம்பரங்க ளும் இவரை முற்றுகை யிட்டு விட்ட ன.

நடிகையான பின் ‘விஸ்காம்’ படிப்பு எந்த வகையிலாவது உத வியாகஇருக்கிறதா?

‘சினிமாவில் பயன்படுத்தப்படும் டெக்னிக் கல் விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. இதற்கு விஸ்காமில் படித்த அடிப்படை விஷங்கள் தான் உதவி செய்தன. திரைக்கதை எது, நல்ல கதை எது என்று தேர் வு, செய்யும்திறமையும் விஸ்காமால் புரிந்து இருக்கிறது’ என்கி றார்.

சினிமாவுக்கு வரும்முன் இந்த துறை பற்றிய கருத்து, கண்ணோட்டம்எப்படி இரு ந்தது?

முன்பு படப்பிடிப்பு என்றால் சாதாரணமாக நினைத்து இருந் தேன். எல்லாவற்றையும் சுலப மாக எடுத்து விடுவார்கள் என்று நினைத்திருந் தேன்.ஒரு பாடல் காட்சியை எடுக்க எவ்வளவு சிரமப்படுகிறார்கள். ஒரு சில வினாடிகள் வந்து செல்லும் காட்சிக்காக எவ்வளவு உழைக் கிறார்கள் என்றுஇங்கு வந்த பின்தான் தெரிகிறது’ என்கிறவர். இப்போது ஏராளமாக படங்கள் பார்த்து நடிப்பு, முகபா வனைகளை உற்று நோக்கி வருகிறாராம்.

சாந்தினியைப் பார்க்கும் பலரும் கேட்கும் கேள்வி… ‘நீங்கள் நடிகை ஜெனிலியா போலவே இருக்கிறீர்களே…? என்பது தானாம்.. அண்மை காலமகிழ்ச்சி இது.

படங்களின் எண்ணிக்கை முக்கி ய மல்ல தரமான கதையும் பாத் திரமும் இருந்தால் தான் படங்களைத் தேர்வு செய்வதாகக் கூறும் சாந்தினிக்குப் பிடித்த நடிகைகள் ஸ்ரீ தேவி, ஜோதிகா நடி கர் ரஜினி சார் தான் நடிப்புக்கு ஸ்ரீதேவி, ஜோதிகா என்றால் ஸ் டைலுக்கு ரஜினி யாம்.

சாந்தினிக்கு பாக்யராஜின் அறிமுகம் என்கிற பெருமையுடன் சொ ந்தக் குரலில் பேசி நடிக்கும் நடிகை என்கிற தகுதியும் கூடுதல் பல மாக இருக்கிறது.

சினிமா விளம்பரம் எது எப்படி… ஒப்பிட முடியுமா?

‘நான் மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்ட போது விள ம்பரங்க ளில் மட்டும் நடித்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் முதலில் பட வாய்ப்பு வந் தது. பிற கு விளம்பரங்கள் வந்தன. விளம்பர மாடலி ங் என்பது ஓரிரு நாட்களில் படப்பிடிப்பு முடி ந்து விடும். வேலை சுலபம். நம க்கு நல்ல புகழும் கிடைக்கும். ஆனால் விளம்பரம் வரும்வரை நம்மை நினைவில் வைத்திரு ப் பார்கள். பிறகு மறந்து விடுவார்கள். சினிமாவில் அறி முகமாகி நல்ல பாத்தி ரங்களில் நடித்துவிட்டால் எந்தக் காலத்துக்கும் நம் மை மறக்க மாட்டார்கள். இரண்டும் இரண்டு வித அனுபவங்கள்’ என்றார் சாந்தினி.

stills by bala 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: