Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இசைஞானி இளையராஜாவின் இணையதளம் விரைவில் . . .

பாடல்கள் மூலம் பட்டிதொட்டி எங்கும் இசை விருந்து கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக் கிளி தொடங்கி இன்று வரை ரசிகர்க ளை இசை மழையால் நனைத்துக் கொ ண்டிருக்கிறார். இசைஞானியின் 68வது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்களின் முன்னிலையி ல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச் சியில் இயக்குனர்கள் ஆர். கே. செல்வ மணி, மனோஜ்குமார், கெளதம் வாசு தேவ மேனன், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் அசோக், இறையன்பு ஐ.ஏ.எஸ்., கவிஞர் முத்துலிங்கம் ஆகியோ் கல ந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ் ச்சியில்  இளையராஜாவிற்கு என்றே இணையதளம்  ஒன்றை துவங்கியுள்ளார். இந்த இணைய தளத்தில் இசை பற்றிய சந்தேகங்க கேள்விகளுக்கு இளையராஜா பதில்; சொல்லவிருக்கிறார்.

ஆர்.கே.செல்வமணி.

நான் செம்பருத்தி படத்திற்கு 7 பாடல்கள் இசையமைக்க வேண்டியி ருந்தது, அதற்காக அவரை பலமுறை தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது . அவருக்கு இருந்த பிசியான நேரத்தில், ஒரு மணிநேரத்தில் ஏழு பாடல்களையும் முடித்து கொடுத்துவிட்டார். எனக்கு அப்பா போல அவர். அவருக்காக தொடங் கும் இந்த இணையதளம் மிக பெரிய உதவியாக இருக்கும்.

டி. சிவா

இளையராஜா சாரின் வாழ்த்தில் வளர்ந்தவன் நான். என் திருமண த்தில் தொடங்கி யுவனை அறிமுக படுத்த வாய்ப்பு கொடுத்தார். இப் படி என் எல்லா வளர்ச்சியிலும் இளையராஜாவிற்கு மிகபெரிய பங்கு உண்டு. ஆரோக்கியத்துடனும் நலமோடு வாழ இறைவ னை வேண்டிகொள்கிறேன்.

கவிஞர் முத்துலிங்கம்

1973 ல் வெளிவந்த பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் இசைய மைப்பாளர் ஜி.கே. வெங்க டேஷ் அவர்களுக்கு உதவியாளராக இருந்தவர் இளையராஜா. தஞ்சாவூர் சீமையிலே என்று நான் எழுதிய முதல் பாடலுக்கு மெட்டமைத் தவர். ஒரு கவிஞனுக்கு இதைவிட பெருமை வேற என்னவாக இருக்க முடியும். நூற்றாண்டுகாலம் பேருடனும், புகழுடனும் நோயின்றி வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்.

இறையன்பு ஐ.ஏ.எஸ்.( பாடலாசிரியர்)

இன்றைய நாளில் இளையராஜாவின் இணை யதளம் உருவாவது பெரும் மகிழ்ச்சியாகவுள் ளது. வளர்ச்சியடைபவர்கள் வயோதிகர்கள் ஆவதில்லை. இந்த வகையில் இளையராஜா வும் இளமையோடு இருக்கிறார். இளையரா ஜா இந்த இசையால் , கருணையால், பரிவால் நிரம்பி வழிகிறார்.உலகமெங்கும் இசையை பரவ செய்த இளையராஜா இன்னும் பல்லாண் டு காலம் வாழ வாழ்த்தி விடை பெறுகிறேன்.

இயக்குனர் கெளதம் மேனன்

ராஜா சார் பிறந்தநாளுக்கு எனக்கு கிடைத்த பரிசு 8 .அத்தனையும் பட்டு பரிசு, நான் இயக்கி வெளிவரவுள்ள நீ தானே என் பொன் வசந் தம் படத்தில் அவரோடு வேலை பார்த்ததில் 10 படம் செய்த அனுபவ த்தை பெற்று தந்தது. பாடல்களில் எத்தனையோ வகைகள் உண்டு, இந்த பாடல்கள் எந்த வகையிலும் இல்லாம ல் இளையராஜாவை புது அடையாளம் காட்டு ம் விதமாக அமைந்துள்ளது. அவரோடு பணி புரிந்த இந்த நாட்கள் இசையின்மீது எனக்கு புது தாகத்தை ஏற்படுத்தி யுள்ளது. அவரது இசைப்பயணம் என் படத்தின் புது அத்தியாயத்தை தொடங்கும் என நம்புகிறேன்.

மனோஜ் குமார்.

எங்கள் ஊர் மண் வாசத்தை உலகுக்கு எடுத்து சென்ற இசை கலை ஞன் இளையராஜா. பாரதிராஜா சார்பிலும், என் ஆத்தா சின்ன தாயி ஆசீர்வாதத்திலும் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன்.

கார்த்திக் ராஜா

இசையை எனக்கு புரிய வைத்தவர் என் தந்தை இளையராஜா என் சின்ன வயசுல ஒரு படத்திற் காக நான் போட்ட பின்னணி இசையை கேட்டு விட்டு இது அம்மா பயனுக்கான இசை. காதலு க்கான டியுன் அல்ல அது உனக்கு வரும் போது புரியும் என்றார். இப்படியாக உறவு முறைகளுக் கென்று ஒரு இசை உண்டு என்று அன்று தான் தெரியும். இப்படிபட்ட இசையை கொடுப்பவர் என் அப்பா தன என்று நினைக்கி றேன்.

பவதாரணி

நான் அப்பாவை மிக அதிகமாக நேசிக்கிறேன். அப்பாவிடம் உரிமையோடு அதிகமாக சண் டைபோடுவதும் நான்தான். அப்பாவுக்கு பிறந் த நாள் வாழ்த்துகள்.

இளையராஜா.

பொதுவா நான் என் பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. இந்த வருடம் இந்த நாளில் என்னுடைய இணையதளம் துவங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. பொதுவா இணையதளம் என்ப தில் எனக்கு உடன் பாடில்லை. இணை க்கும்தளம் என்று வேண்டுமானால் சொ ல்லலாம். என் என்றால் உங்களையும், என்னையும் இணைக்கும் தளம். எனக்கு ம் தெரிந்ததை இசை மீது ஆர்வம் உள்ள வர்கள் அவர்களின் சந்தேகங்களுக்கு , கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பு கிறேன். எனக்கு தெரிந்தவை என்னோடு போக விரும்பவில்லை. மற்றவர்களுக் கும் சொல்லிவிட்டு போக நினைக்கிறே ன். இதன் மூலம் உங்களை சந்திக்கவுள் ளேன், விளக்கம் சொல்ல உள்ளேன் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும் ஆர்வமாக உள்ளேன். வெகு விரைவில் என்னுடைய இணையதளத்தின் முகவரி, கேள்வி அனுப்பும் முறை இப்படி எல்லா வற்றையும் விரைவில் தெரிவிக்கிறேன் என்று பேசி முடித்தார் இளையராஜா. 

– dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: