Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லஞ்சம் தலைவிரித்தாடும் மதுரை அரசு மருத்துவமனை

மதுரை அரசு மருத்துவமனையில் எந்த வார்டுக்கு சென்றாலும், லஞ்சம் வாங்குவதை ஒருசில ஊழியர்கள் கட்டாயமாக்கியுள்ளனர். குறிப்பாக பிரசவ வார்டு பகுதி யில்தான் லஞ்சம் தலைவிரித் தாடுகிறது. பெண் குழந்தை பிறந்தால் ரூ.500, ஆண் குழந் தை பிறந்தால் ரூ.1000 என வசூலிக்கின்றனர். இன்னும் சிலரோ, பெண் குழந்தை பிற ந்தாலும், “ஆண் குழந்தை’ எனச் சொல்லி ரூ.1000 வசூலி த்து விட்டு, உனக்கு பிறந்தது பெண் குழந்தை தான் என பின்னர் கூறு கின்றனர். இது மட்டுமா… வார்டுக்குள் நுழைய லஞ்சம், எக்ஸ்ரே எடுக்க, ஸ்கேன் எடுக்க, ஸ்டிரெச்சரில் அழைத்துச் செல்ல… ஒவ் வொரு பிரிவிலும் பணத்தை அழுது தொலைக்க வேண்டியுள் ளது. ஒரு நோயாளி குறைந்தது பத்து நாட்கள் இங்கிருந்தால், தனியார் மருத்துவமனைக்கு ஆகும் செலவில், பாதிப்பணத் தை லஞ்சமாக தர வேண்டியுள் ளது. குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் வரை வசூல் ஆவதாக புள்ளிவிவரம் சேகரித்துள் ளனர். சமீபத்தில் கலெக்டர், மருத்துவ கல்வி இயக்குனரின் தனித் தனி ஆய்வின்போது நோயாளி கள், அவர்களது உறவினர்களை மிரட்டி ஊழியர்கள் சிலர் லஞ் சம் வாங்குவது தெரிந்தது. “இல் லாத வர்களிடம் பணம் பிடுங்கி னால், உங்கள் வீட்டில் கஷ்டம் வரும்’ என கலெக்டரும், எல்லா வார்டு ஊழியர்களிடமும் அறிவு ரை கூறினார். கையில் காசில் லாமல், அரசு மருத்துவ மனை யே “கதி’ என கதறும், வறுமையில் வாடுபவர்களிடம் பணம் பிடுங்கி னால், அவர்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா? லஞ்சம் வாங்கு பவர்களு க்கே இது வெளிச்சம்.

news in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: