ஜூன் 2012 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
தமிழக அரசின் நூற்றாண்டுக்கிணையான ஓராண்டு சாதனையைப் பாராட்டி அமைச்சர்களும், அதிகாரிக ளும், கட்சி நிர்வாகிகளும், கடை நிலைத் தொண்டரும் பக்கம் பக்கமாக விளம்பர ங்களும், விளம்பர பேனர்க ளும், சுவரொட்டிகளும், வெளியிட்டு ள்ளனர். இதில் நமக்கு எந்த ஆட்சேப னையும் இல்லை. காரணம் அந்த விள ம்பர ங்களுக்கான செலவுகள் எல்லாம் தனிப்பட்ட நபருடையது அல்லது கட்சியுனுடயது.
ஆனால் தமிழக அரசே முன் வந்து, தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநில ங்களின் அனைத்துப் பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக தினந்தோறும் வண்ண விளம்பரங்கள் தன் ஓராண்டு சாதனை (!?) க்காக வெளியிட்டு வருகிறது.
விளம்பரமே! விரும்பாத தமிழக முதல் வர் என்ற சென்ற இதழில் நம் (நம் உரத்த சிந்தனை யின்) பாராட்டை பெற்ற முதல் வரின் இந்த விளம்பரப் புரட்சி யை உரத்து சிந்திக்கும் உண்மையான வாக்காளர்க ளால் ஜீரணிக்கவில்லை முடியவில் லை. பற்றாக்குறை பட்ஜெட் பல்லவி பாடும் தமிழக அரசு இப்படி விளம்பரத்திற்கு பொது மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்வது நியாயம்தானா?
அம்மாவைக் காட்டிலும் பல படிகள் மிஞ் சி உ.பி.யின் முன்னாள் முதல்வர் மாயாவதி, யானை சிலைகளை யும், தன் சிலைகளையு ம் அடிக்கு அடி நிறுவி லக்னோவை சிலை ந(ர)கரமாக்கிவிட்டார். மத்திய அரசும் தன் பங்கிற்கு ஒவ்வொரு துறையிலிருந்தும் அவ்வப்போ து விளம்பரங்களை வெளியிட்டு, நானும் இருக்கே ன்ல என்று மார் தட்டி நிற்கிறது.
பாராட்டு விழாக்கள், சாதனை விளக்கக் கூட்டங்கள், அரசின் கொள்கை விளக்க கூட்டங்கள், சண்டைப் போடவும், வெளிநடப் பு செய்யவும் மட்டுமே செயல்ப டுகிறத சட்டசபை, நாடாளுமன் றக் கூட்டங்கள் . . . இடைத்தேர்தல் என்ற பெயரில் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் நடத்துகிற சட்ட த்திற்குட்பட்ட செயல் திட்டங்கள். . . இவைகளுக்கெல்லாம் , சாமா ன்யனின் வியர்வையுடன் கூடி ய வரிப்பணம் வீணாகத்தான் வேண்டுமா?
வியாபாரத்திற்கு விளம்பரம் தேவை. ஆனால் மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கட மைகளுக்கெல்லாம் . . தர வே ண்டிய உரிமைகளுக் கெல்லா ம் விளம்பரம் தேடுவது நியா யம் தானா?
விளம்பரம், போலி கௌரவம், பாராட்டு என்கிற மோகம் நம் தேச த்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த மோகப்பே யை விரட்டி, தேசத்தை தெளிவுபெற வைக்க உரத்து சிந்திப் போம் . . . உடன் கூடி செயல்படுவோம்.