Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிடம் மாணவனுக்கு; 2 ம் இடம் 6பேருக்கு ; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1.30 மணியளவில் வெளியானது. தஞசாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் முதலிடமும், 2 வது ரேங்கை 6 மாணவ, மாணவிகளும் , 3 வது ரேங்கை 11 பேரும் பிடித்தனர். சமச்சீர் பாட த் திட்டத்தின்படி நடந்து முடி ந்த முதல் தேர்வு என்பது குறிப் பிடத் தக்கது.

கடந்த ஏப்ரல் – மார்ச் மாதங் களில் நடந்த தேர்வில் 10. 84 லட்சம் மாணவ, மாண விகள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர். தேர்வு முடி வுகளை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்த்ராதேவி இன்று வெளியிட்டார். முடிவு வெளியாவதில் பிரச்னைகளை களைய தேசிய தகவல் மையம் உதவியுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங் கப்பட்டுள்ள பயன்பாட்டுக்கான பெயர் மற்றும் ரகசிய குறியீடு மூலம் அந்தந்த தளங்களில் சென்று தேர்வு முடிவுகளை பதிவிற க்கம் செய்து கொண்டனர். 

பத்தாம் வகுப்பு மறுக்கூட்டல் விண்ணப்பிக்க 5 ம் தேதி முதல் 7 ம்தேதி வரை கால நிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மறுக்கூட்டல் தொடர்பாக ஆங்கில பாடத்திற்கு ரூ. 305- ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205 -ம் வசூலிக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும்.

news in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: