ஏ.பி. நாகராஜன் அவர்களது சீர்மிகு இயக்கத்தில் வெளிவந்து பல சாதனைகள் புரிந்த அகத்தியர் என்ற திரைப்படத்தில் வென்றிடு வேன் உனை நான் வென்றிடு வேன். . . . என்ற இந்த பாடலில் அகத்தியராக வாழ்ந்த சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர்கள், அவரது குரலுக்கு அவரே வாயசைத்து நடித்துள் ளார். திருவாளர் டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களது குரலுக்கு ராவணன் வேடமேற்ற ஆர். எஸ். மனோகர் அவர்கள் மிகவும் அற்புதமாக வாயசைத்து நடித்திருப்பார்.
இருவரில் யார் சிறந்தவர்? என்ற போட்டியில், நடுவராக ஒரு மலை குறிப்பிட்டு, யாருடைய பாடலுக்கும் வாசிப்புக்கும் இந்த மலை உருகுகிறதோ அவரே சிறந்தவர் என்று முடிவெடுத்து, இருவரும் போட்டிப்போட்டு பாடுவார்கள். இறுதியில் யாருடைய பாடலுக்கும் வாசிப்புக்கும் மலை உருகுகிறது என்பதை நீங்களே பாருங்கள். மேலும் இப் பாடலில் ராவணன் பாடும்போது சற்று ஆணவத்தோடு பாடுவது போலவும், அகத்தியர் பாடும்போது, அவை அடக்கத்துடன் பாடு வ து போன்று மெட்டமைத்திரு ப்பார் வயலின் இசைமேதை குன்னக்குடி திருவாளர் வைத்திய நாதன் ஐயா அவர்கள் .
இப்பாடலில் சுமார் 13 ராகங்களின் பெயர்கள் இடம் பெறச் செய்து, அதையும் அந்தந்த ராகத்தின் பெயர் கள் வரும் போது அந்தந்த ராகங்களி லேயே மெட்டில் பாடல் அமைந்து ஒரு ராகமாலிகாவாக நமக்கெல்லா ம் செவிக்கும் கண்ணுக்கும் விருந் தளிப்பார்கள் அந்த மாமேதைகள்.
இப்பாடலில் இடம்பெறும் ராகங்களின் பெயர்கள்
1. நாட்டை
2. பைரவி
3. தோடி
4. ஆரபி
5. ஷண்முகப் பிரியா
6. தர்பார்
7. ஹம்சத்வனி
8. வசந்தா
9. மோகனம்
10. பாகேஷ்ஸ்ரீ
11. காம்போதி
12. கௌரி மனோகரி
13. கல்யாணி
ஏதோ இந்த சிறியவனின் சிற்றறிவுக்கு எட்டியவரை இப்பாடல் பற்றிய தகவல்களை கொடுத்துள்ளேன். இப்பாடல்பற்றிய அரிய தொரு தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால், தங்களது கருத்து க்களின் வாயிலாக அந்த அரிய பொக்கிழங்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். தகவல்களை பகிர்ந்து கொள்ள்ளுமாறு விதை2விருட்சம் தாழ்பணிந்து கேட்டுக்கொள்கிறது.
– விதை2விருட்சம்