(தீக்கதிர் நாளிதழில் வெளிவந்த செய்தி – 06/06/2012)
மதுரை சிலைமான் ஊராட்சியில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ஊராட்சி உதவி இயக்குநர் நடத்திய தணிக்கையி ல் தெரியவந்துள்ளது.
திருப்பரங்குன்றம் ஊராட்சிக் குட்பட்ட சிலை மான் ஊராட் சியில் மே மாதம் 2ம் தேதி உதவி இயக் குநர் தணிக்கை நடத்தியுள்ளார். தணிக்கையி ல் கூறியுள்ள தகவல்கள் உள்ளாட்சி அமைப்புகள் எப்ப டி செயல்படுகின்றன என்ப தை அம்பலப்படுத்தியுள்ளது.
சிலைமான் ஊராட்சி மன்றத் தலைவரது கை யொப்பம் மற்றும் தீர்மான எண் குறிப்பிடாமல் பைப் லைன் பழுதுபார்த்தது, மேல் நிலைத் தொட்டி சுத்தம் செய்தது என்ற வகை யில் ரூ.28 ஆயிரத்து 860 செலவு செய்யப்பட்டுள்ளது. பல செலவினங்களுக்கு ரொக்கப் புத்தகத்தில் எந்த விபரமும் இல்லை. செலவுச் சீட்டுகளும் இல் லை. மொத்தமுள்ள 73 செலவுச் சீட்டுகளில் 56க்கு செலவுச் சீட்டு இல்லை.
ஊராட்சிமன்றத் தலை வர், அவருக்கு வழங்கப்பட் டுள்ள அதிகார வரம்பிற்கு உட்படாமல் தன்னிச்சை யாக அதிகார துஷ்பிரயோ கம் செய்து ரூ.14லட்சத்து 88 ஆயிரத்து 326 மதிப்பிற்கு நிதியிழப் பு/கையாடல் செய்துள்ளார் என்று கருதலாம் என சுட்டிக்காட்டியு ள்ள தணிக்கை அதிகாரி, ஊராட்சி நிர்வாகத்தின் அடிப்படை விதிமுறை களைக் கூட கடைப்பிடிக்க வில்லை எனக் குறிப்பிட்டு ள்ளார். தவிர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் சுட் டிக்காட்டியுள்ளார்.
சிலைமான் ஊராட்சி மன்றத் தலைவர் சாகுல் ஹமீது சையது அலி பாத்திமா செயல் பாடு குறித்து தணிக்கை செய்த அதிகாரி, ஊராட்சி நிதியில் ஏற்பட்ட நிதியிழப் பிற்கும், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலர் என்ற முறையில் ஊராட்சித் தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துள்ளீர்கள் என்ற காரணத்தால் ஊராட்சிகள் சட்டம் 1994 விதி எண் 205(1)ன்படி தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. குற்றச்சாட்டு களுக்கு உரிய விளக்கத்தினை 15 தினங்களு க்குள் சமர்ப்பிக்கவேண்டும். விளக்கம் வராத பட்சத்தில், ஆவண ங்களின் அடிப்ப டையில் ஊராட்சிகள் சட்டம் 1994 விதி எண் 205 உட் பிரிவு 1முதல் 11-ன் கீழ் நடவ டிக்கை எடுக்கப்படும் எனத் தெரி வித்துள்ளார்.
அதிமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பின் உள்ளாட்சிகளுக்கு தேர் தல் நடைபெற்று இன்னும் ஓராண்டு பூர்த்தியாகவில்லை. இந் நிலையில் உள் ளாட்சி அமைப்பு ஒன்றில் நடைபெற்றுள்ள முறை கேடு அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. மாவட்டத்தில் இன்னும் சில ஊராட்சிகள் தணிக்கையில் சிக்கியுள்ள தாக தெரியவந்துள்ளது.
wife-uratchi thalaivar,huspand-thunai thalaivar,mams-ontricounsilar