குழலூதும் கிருஷ்ணர், மாட்டுவண்டி, நடராஜர், மீனவருடன் கூடிய படகு, பூக்கள் என்று கண்ணாடியில் செய்யப்பட்ட சிற்பங்களை, கடைகளில் பார்க்கும் போது, கண்கள் நம்மை யறியாமலே ஈர்க்கும். எப்படித்தான் இது போ ன்ற சிற்பங்களை செய் கின்றனரோ என்று, வி ழிகளை விரிய வைக்கு ம்.
இது போன்ற கண்ணா டி சிற்பங்களை, நீங்க ளே குறைந்த விலை யில் உருவாக்கலாம். அதற்கான வழிமுறை களை சொல்லித் தருகி றார், சென்னை கிழ்க்க ட்டளையைச் சேர்ந்த சீனிவாச ராகவன்.
கண்ணாடி சிற்பங்கள் செய்யும் தொழிலில், கடந்த இருபது ஆண்டு களாக ஈடுபட்டுள்ள இவர், வெளிநாடுகளில் போற்றப்படும் அரு மையான இந்த கலை, இங்கு அழிந்து விடக்கூடாது என்பதற்காக, ஊர், ஊராக போய், குறைந்த கட்டணத்தில் பயிற்சி முகாம் நடத்தி வருகிறார்.
கண்ணாடி சிற்பக்கலை என்பது, தொட்டுப்பார்த்து சரி செய்யும் களிமண் கலை அல்ல, தப்பாக வரைந்தால் அழித்துக் கொள்ளும் ஓவியக்கலையும் அல்ல, முழுக்க முழுக்க உணர்வு பூர்வமாக, அனுபவித்து செய்ய வேண்டிய அற்புதக் கலை. ஒரு முறை கண் ணாடி சிற்பக்கலை செய்யும் அனுபவத்தை உணர்ந்து கொண்டால், பிறகு காலகாலத்திற்கும் இதை விடமாட்டார்கள் என்பது இவரது கருத்து.
இவரது பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள, ஆண்கள், பெண்கள் என்று பலர் வந்தாலும், பெண்கள்தான், அழகான சிற்பங்களை படைக்கின்றனராம். காரணம், இந்த கலைக்கு தேவையான பொறு மையும், ஆர்வமும் அவர்களிடம்தான் உள்ளதாக கூறுகிறார்.
அதுவும், தற்போது தகவல் தொழில்நுட்ப(ஐ.டி.,)வேலையில் இரு க்கும் பெண்கள், இந்த கண்ணாடி சிற்பக்கலையில் ஈடுபடுவதால், மனசு லேசாகி புத்துணர்வு ஏற்படுவதாக உணர்வதாலும், அந்த தர ப்பில் இருந்துதான் அதிகம் வருகின்றனர்.
இந்த கண்ணாடி சிற்பம் செய்வதற்கு, எல்லையே இல்லை. உங்க ளுக்கு கற்பனையும், பொறுமையும், ஆர்வமும் இருந்தால், எத்த னை ஆயிரம் கண்ணாடி சிற்பங்கள் வேண்டுமானாலும் செய்யலா ம். இப்போது இதில், வண்ணம், மெட்டாலிக் என்று நிறைய புது மையான கண்ணாடி சிற்பங்களும் தயாரிக்க முடியும்.
நூறு ரூபாய்க்கு தயாரிப்பு பொருளும், எரிவாயுவும், இரண்டு மணி நேர உழைப்பும் இருந்தால், அருமையான கண்ணாடி சிற்பம் தயா ராகி விடும்.
ஆனால், வருமானத்தின் அடிப்படையில் இல்லாமல், ஆத்ம திருப் திக்காக, மன அமைதிக்காக, நானே செய்த கண்ணாடி சிற்பங்கள் என்று, வீட்டில் வைத்துக் கொள்ளவும், வித்தியாசமான பரிசு கொ டுக்கவும் விரும்பு பவர்கள், சீனிவாச ராகவனை தொடர்பு கொண் டால், கூடுதல் தகவல் கிடைக்கும். அவரது மொபைல் எண்: 9383473210.
***
– எல். முருகராஜ், தினமலர்