Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"தன் தந்தை செய்த 3 கொலைகளை டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் அம்பலப்படுத்திய பெண்"

3 பேர் கொலையை அம்பலப்படுத்திய முருகனின் மகள் பார்கவி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 

நான் விழுப்புரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த கல் வி ஆண்டில் பிளஸ்-2 படித்து வந்தே ன். 1016 மார்க் எடுத்து உள்ளேன். நான் எங்கள் ஊரை ச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிப ரை காதலித்து வந்தேன். 

பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தே தி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணத்திற்கு என் தந்தை முருகன் எதிர்ப்பு தெரிவித் தார். எனவே நாங்கள் எப்படியாவது ஒன்று சேர வேண்டும் என்று நினைத்தோம். 

தனியார் டி.வி. ஒன்றில் காதலர்களை சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி நடப்பதை அறிந்து அதில் பங்கேற்றோம். அப்போது நிகழ்ச்சி நடத் துபவர்கள் எனது தந்தை, தாயாரையும் வரவழைத்து எங்க ளிடம் பேட்டி எடுத்தார்கள். 

அப்போது நான், எனது தந்தை செய்த தவறுகள் சிலவற்றை கூறி னேன். 3 பேரையும் கொன்று புதைத்ததையும் அப்போ து தெரிவித்தேன். உடனே நிகழ்ச்சி நடத்தியவர்கள் இதுதொடர்பாக விழுப்புர ம் போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டனர். 

போலீசார் உடனடியாக என்னிடம் விசாரணை நடத்தினார்கள். உட னே நான் நடந்தவற்றை சொன்னேன். எனது தந்தை பல தவறுகள் செய்து உள்ளார். என்னிடமே பலமுறை தவ றாக நடக்க முயற்சி செய்து உள்ளார். அவர் செய்யும் தவறுகள் அனைத்தும் எனது தாயார் ராஜேஸ்வரிக்கு தெரியும். ஆனால் அவர் தட்டிக் கேட்டதில்லை. தந்தைக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

– maalaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: