Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதுகாப்புக்குப் பயன்படும் என்றுதான் இன்ஷுரன்ஸ் எடுக்கிறோம்! ஆனால் . . .

பாதுகாப்புக்குப் பயன்படும் என்றுதான் இன்ஷுரன்ஸ் எடுக்கிறோ ம்… ஆனால், அதில் கொஞ்சம் கவனம் பிசகிவிட்டாலும் நமக் கே வில்லங்கமாக முடிந்துவிடு ம். அப்படி சில இன்ஷுரன்ஸ் சிக்கல்கள் பற்றி…

‘‘நல்ல கண்டிஷனான வண்டி… பார்ட்டி வெளியூருக்கு மாற்றலாகி போவதால்தான் விற்கிறார். வாங்கிக்கறீங்களா?’’ என்றார் வந்தவர் ராகுலிடம். மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்த ராகுலுக்கு முழு த் திருப்தி.

‘‘பேப்பர் எல்லாம் சரியாக இருக்கி றதா?’’ என்று அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டார் ராகுல். ஏனென்றால் அவர் சென்னை உய ர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரி டம் உதவியாளராக இருந்தார். அதனால் சட்டப்படி எல்லாம் சரி யாக இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கினார்.

பேப்பரை எல்லாம் காட்டிய பார்ட்டி, ‘‘சார்… வண்டி மச்சான் பேரில் இருக்கு… இதோ அவர் எழுதிக்கொடுத்த சேல்ஸ் ஸ்லிப்… இந்த ஸ்லிப்பை வைத்து நீங்கள் வண்டியை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்’’ என்றவர், மோட்டார் சைக்கிளுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு வண்டியைக் கொடுத்து விட்டார்.

ராகுலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு ச் சென்று பெயர் மாற்றும் முயற்சி யில் இறங்க, வண்டி நம்பரைப் பார்த் தவுடன் அந்த அதிகாரி, ‘‘என்ன தைரி யம் இருந்தால் திருட்டு வண்டியை ரெஜிஸ்டர் பண்ண கொண்டு வருவே!’’ என்று சட்டையைப் பிடிக்க, ராகுலுக்கு அதிர்ச்சி.

விவரத்தைச் சொல்லி எஸ்கே ப் ஆகி வண்டியை விற்றவரை ப் பிடித்தார். ‘‘என்னய்யா… திரு ட்டு வண்டியை என் தலையில் கட்டப் பார்க்கிறியா?’’ என்றபடி ராகுல் அவரை விரட்ட, அவரு க்கும் அதிர்ச்சி! இருங்க… என் மச்சானைக் கேட்கிறேன் என்று மச்சானுக்கு போன் போட… அவர் மழுப்பலாக பதில் சொல் ல, தப்பு அவரிடம் தான் என்பது புரிந்துபோனது.

பெங்களூருவில் வேலை பார்த்த மச்சான், அங்கு ஓட்டிக் கொண்டி ருந்த தன் வண்டி காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்து விட் டு, வண்டியை மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டார். மச்சான் தானே என்பதால், இவரும் பெயர் மாற்றாமல் ஓட்டிக்கொ ண்டிருந் திருக்கிறார்.

அந்த எஃப்.ஐ.ஆ&ரை வைத்து இன்ஷுரன்ஸ் க்ளைம் செய்து, அதை வைத்து புது வண்டி ஒன் றையும் வாங்கி விட்டார்!

நடந்த தில்லுமுல்லுகளை ராகு ல் போலீஸிடம் கொண்டுபோக, இப்போது சட்டரீதியான நடவடி க்கை மேற்கொள்ளப்பட்டிருக்கி றது.

இன்ஷுரன்ஸ§க்கு ஆசைப்பட்டு தப்பு செய்தவர் நிலைமை இப்படி இருக்க, லீவுக்கு ஆசைப்பட்ட ஒரு மனிதர் இன்ஷ¨ரன்ஸ் விஷயத் தில் இழந்து நின்ற பரிதாபக் கதை இது!

அரசு ஊழியரான சுந்தரம் நல்ல திடகாத்திரமான உடல் வாகு கொண்டவர். நண்பர் ஒருவரி ன் வற்புறுத்தலால் லட்ச ரூபா ய்க்கு ஆயுள் இன்ஷுரன்ஸ் பாலிசியை எடுத்தார். அந்த விண்ணப்பத்தில் வழக்கமான கேள்விகளான உடல் உபாதை கள் பற்றிய இடத்தில் தனக்கு எந்த நோயும் இல்லை என்ப தைக் குறிப்பிட்டார். உண்மை யும் அதுதான்!

சுந்தரத்துக்கு நோய் எதுவும் கிடையாது, ஆனால், அடிக்கடி லீவ் எடுக்கும் கெட்டபழக்கம் இருந்தது. இன்ஷ¨ரன்ஸ் எடுத்த ஓராண் டில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, உயிர் பிரிந்துவிட்டது.

எல்லா காரியங்களும் முடிந்தபிறகு அவருடை ய குடும்பத்தினர் இன்ஷ¨ ரன்ஸ் க்ளைம் வாங்கு வதற்கு விண்ணப்பித்தனர். பாலிசி எடுத்து ஓராண்டுக்குள் க்ளைம் என்பதால் விசாரணை யில் இறங்கியது இன்ஷுரன்ஸ் கம்பெனி. சம்பிரதாயமாக அலுவலகத்தில் விசாரித்த போது சுந்தரம் அடிக்கடி விடுமுறை எடுப்பார் என்ற தகவல் தெரிந்திருக்கிறது. அவருடைய விடுமுறை விண்ண ப்பங்க ளைப் பரிசோதித்தபோது, பாலிசி எடுப்பதற்கு ஒரு மாதத் துக்கு முன்பாக நெஞ்சுவலி என்ற காரணத்துக்காக சுந்தரம் 15 நாட்கள் விடுமுறை எடுத்திருந்தார். அதற்கான மருத்துவச் சான்றி தழையு ம் சமர்ப்பித்திருந்தார்.

உண்மையில் நண்பர் திருமணத்துக் காக விடுமுறை எடுத்த சுந்தரம், போ லியாக மருத்துவச் சான்றிதழ் கொடு த்து விடுப்பு எடுத்திருந் தார். ஆனால், சுந்தரம் தனக்கு ஏற்கெனவே இருந்த நெஞ்சு வலியை மறைத்து பாலிசி எடுத்து நிறுவனத்தை ஏமாற்றி விட்ட தாகக் காரணம் காட்டி, க்ளைம் தர மறுத்துவிட்டது இன்ஷுரன்ஸ் நிர்வா கம்.

எவ்வளவோ போராடியும் பலனில் லை. விளையாட்டு எத்தனை வினையாகிவிட்டது பார்த்தீர்களா?!

இந்தச் சம்பவங்கள் குறித்து விளக்கம் தருகிறார், யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸின் பொதுமேலாளர் வி.சேகர். 

‘‘பொதுவாக வாகனங்களை யாரிடமிருந்து வாங்கினாலும், உடனே அந்த வாகனத்தின் மீதான உரிமை மாற்றம் (Ownership Transfer)  குறித்த விஷயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இதில், தனது மைத்துனரிடமிருந்து வண் டியை வாங்கியவர், அப்போதே பெயர் மாற்றம் செய்திருந்தால் அந்த மோசடி அப்போதே அம்பல மாகி இருக்கும். இந்தப் பிரச் னையும் ஏற்பட்டிருக்காது. உறவி ன ராக இருந்தாலும் கூட, எந்தப் பொருளை வாங்கினாலும், அதன் உரிமை குறித்த செயல்பாடுகளை முறையாகப் பின்பற்றினால் எந் தப் பிரச்னையும் வராது.

அடுத்ததில் சுந்தரம் மிக அலட்சியமாக இருந்ததால் அவர் இன் ஷுரன்ஸ் பாலிசி எடுத்தும் பயனற்றுப் போய் விட்டது. பாவம் அவ ரது குடும்பம். இந்த கேஸில் வேறு என்ன சொல்ல இருக்கிறது!

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

2 Comments

 • RAVISANKAR

  I have 34 years of experience in all types of General Insurances and Life and medical insurances also.Out of these 34 years 24 years were spent only in settling all types of insurance claims.If the legal heirs of the person whose death claim was not paid will send the details to me along with scanned copies of all records with them to ravisankar46@gmail.com I will read all the material and try to help them to get the claim from the insurer.No need to pay me even one rupee for this help.But please note that success is not guaranteed.I will try my best to help.
  Ravisankar

 • RAVISANKAR

  One has to be very careful while selling any vehicle.Do not sell the vehicle to a totally unknown person whom you cannot trace later on.Once somebody sold a motor cycle to an unknown person for cash and gave all transfer papers duly signed.
  The vehicle was never registered in the new buyer’s name and was found near a murder spot after a month.The police traced the vehicle to the seller.He suffered for the next one year with the police and was saved( of course after a lot of expenditure) when the real murderer was caught by the police and it was established that the seller of the vehicle had no connection with the murderer or the crime.
  Poor seller lost peace of mind for a year and also a lot of money to get out of the problem.
  Ravisankar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: