Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்!

குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறா ர். அவர்கள் உணவு விஷ யத்தில் தனிக் கவனம் செலுத்தினால், உடல் தொடர்பா க ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

*சாதாரணமாக தேவைப்படும் கலோரிக ளைவிட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந் த அளவு, ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற் ப மாறுபடும். வேலை செய்யாதவர்களுக் கு தினசரி கலோரி 1800 என்றால், வே லை செய்பவர்களுக்கு 2 ஆயிரம் கலோரிகள் தேவையாக இருக்கு ம். பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடுசெய்ய வேண் டும். அதற்கு கீரைகள், பேரி ச்சம்பழம், கேழ்வரகு, கம்பு, கறிவேப்பி லை பொடி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது தினமும் ஒரு கீரை அவசியம்.

* பிரசவத்திற்கு பிறகான உடல் பராமரிப்பில் பிறந்த குழந்தையி ன் மீதும் அக்கறை செலுத்த வே ண்டும். அந்தக் காலக்கட்டத்தில் குழந் தையின் உணவு தாய்ப்பால் தான் என்பதால், தாய்மார்கள் தங்கள் உணவு விஷயத்தில் தனி க் கவனத்துடன் இருக்க வேண்டு ம். கிடைத்த உணவுகளை எல் லாம் சாப்பிடக் கூடாது. கொழுப் பு சத்துள்ள உணவுகளை தவிர்த் து புரத, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் இதர சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு பால் புகட்டுவதால், கால்சியம் மற்றும் புரதச் சத்து அவர்களுக்கு அதிகமாக தேவைப்படும். அதனால், பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், சோளம் ஆகிய அதிக கால்சிய சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.

* தினமும் குறைந்தபட்சம் 2 டம்ளர் பால் குடிப்பது அவசியம். புரதச் சத்துக்கள் அதிகம் கொண்ட பாதா ம், பிஸ்தா, அக்ரூட், பச்சை வேர்க் கடலை, மீன், முட்டை ஆகியவற் றை உணவாக எடுத்துக்கொண்டு வந்தால், அவை சீராக பால் சுரக்க உதவும்.

* தண்ணீர் நிறைய குடிக்க வேண் டும். இது மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் முன் முடிந் தவரை நிறைய தண்ணீர் குடித்து விட்டு பால் புகட்டலாம். இதனால் பால் நன்றாக சுரக்கும்.

*கர்ப்பகாலத்தில் கருவில் குழந் தை இருப்பதால், வயிறு நன்றாக விரிந்திருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவை மெதுவாக சுருங்கும். இந்த சமயத்தில் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள், கிழங்கு வகைகள் மற்றும் தேங்காய் போன்ற உணவுகளை சாப்பிட்டால் வாயு, மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். எனவே பிரசவத்துக்கு பிறகு ஒரு மாத காலம் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அஜீரணத்தை தவிர் க்க இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொ ள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடலாம்.

*சில பெண்கள் தாய்ப்பால் சுரப்பு அதிகம் இல்லாமல் அவதிப்படுவா ர்கள். அவர்கள் சுறாபுட்டுடன் சோம்பு கீரை சேர்த்து சமைத்து சாப்பி டலாம்.
நன்றி – இளமை (அமிர்தா)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: