முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தம் ஆகியுள்ளார். கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோ ரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பொன்குமரன் இயக்கவுள்ள இப்படத்திற்கு யோகனந்த், எம்.வி பன்னீர் செல்வம் ஒளிப் பதிவு செய்கிறார். சுந்தர் சி பாபு இப்படத்திற் கு இசை அமைக்கிறார். கன்னடத்தில் வெளி யாகி வெற்றி பெற்ற படம் சாருலதா. இந்த படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. குளோபல் ஒன் ஸ்டுடியோ புரோடக்ஷன் சார்பில் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி தயாரிப்பில் விரைவில் இப்படத்திற்கான படப் பிடிப்பு துவங்க உள்ளது.
செய்தி – விதை2விருட்சம்