Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களுக்கு ஆறுதலான ஆய்வறிக்கை – பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் வசிக்க‍ விரும்புவதாக ஆய்வில் தகவல்

தனியாக வசிப்பதை விட கூட்டுக்குடும்பமாக வசிப்பதையே பெரும் பாலான பெண்கள் விரும்புகி ன்றனர் என்று சமீபத்திய ஆய் வு ஒன்றில் தெரியவந்துள்ளது. திருமண இணையதளம் நடத் திய கணக்கெடுப்பு ஒன்றுக்கு பதிலளித்த பெண்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே சிறந்த து என்று பதிலளித்துள்ளனர்.

சாதி டாட் காம் எனப்படும் திரு மண இணையதளம் புதிய சர் வே ஒன்றை மேற்கொண்டது. சர்வேயில் பங்கேற்ற பெண்களிடம் ஏராளமான கேள்விகளை கேட்டனர். திருமணத்திற்குப் பின் கூட்டுக் குடும்பமாக வசிப்பீர்களா? தனிக்குடித்தனமாக இருக்கவே விரும்பு வீர்களா? நகரங்களில் வசிப்பீர்களா? கிராமங்களில் வசிக்க விருப்ப மா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் 54 சதவிகித பெண்கள் மாமியார் மாமனார் போன்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசிப்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளன ர். அதேபோல 21 சதவிகித பெண்கள் நியூக்ளியர் செட் அப் போல இருப்ப தை விரும்புகின்றனராம். அதாவது தம்பதியர் ஜாலியாக தனியாக வசி ப்பதே இந்த செட் அப்.

21 சதவிகித பெண்கள் கிராமங்களில் வசிப்பதை விட நகர்புறங்களி ல் வசிப்பதையே விரும்புகின்றனராம். மாமியார் மருமகள் சண்டை எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது என்று எண்ணற்ற இளம் பெண்கள் தெரிவித்துள்ளனர். 20 பேர் வரை கொண்ட கூட்டுக் குடும் பத்தில் வசிக்கவும் தயாராக இருப் பதாக கூறியுள்ளனர். இதற்கு கார ணம் கூட்டுக்குடும்பம் என்றால் மிகப்பெரிய சப்போர்ட் கிடைக்கு ம் என்றும் அவர்கள் தெரிவித்துள் ளனர்.

தன் கணவர் தன் குடும்பம் என்று சுயநலமிகளாக மாறிவரும் சூழ் நிலையில் பெரும்பாலான பெண் கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக் கு ஆதரவாக வாக்களித்திருப்பது சற்றே ஆறுதலான விசயம்தான்.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: