Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால் . . .

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால், வி லைவாசி உயர்வோ நாளுக்கு நாள் றெக் கைக் கட்டி பறந்து கொண்டிருக்கி றது. வாங்குகிற சம்பள ம் முழுவதையும் விலையேற்றம் சுர ண்டிக் கொண்டு சென்றுவிட, என்ன செய்து நிலைமை யைச் சமாளிப்பது என்று தவிக்கிறார்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வர்கள்.
 
ஏற்கெனவே பால், பருப்பு, காய்கறி, மின்சாரம் என வீட்டுக்குத் தே வையான எல்லா பொருட்களும் எக்கச்சக்கமாக விலை ஏறிக்கிட க்க, தற்போது பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 7 ரூபாயை உயர்த்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி இருக்கிறது மத்திய அரசு. இந்த விலை உயர்வால் விலைவாசி இன்னும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் வியாபாரிகள்.

இந்தச் சூழலில் எகிறிவரும் விலைவாசியை சமாளிக்க என்ன வழி என நிதி ஆலோசகர் முத்து கிருஷ்ணனிடம் கேட்டோம். பளிச்சென பிராக்ட்டிக்கல் டிப் ஸ்களை அள்ளித் தந்தார் அவ ர். இதோ அந்த வழி கள்:

”விலைவாசி உயர்வை கட்டுப் படுத்துவது அரசாங்கத்தின் கையில் தான் இருக்கிறது. விலை வாசியைப் பொறுத்த வரை இனி அதை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியுமே தவிர, பெரிய அளவில் குறைக்க முடி யாது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந் து வருவதால் விலைவாசி இன்னும் அதிகரிக்கவே செய்யும். பெட் ரோல் விலை இப்போது உயர்ந்திருப்பது கூட இதன் எதி ரொலி தான்.

தவிர்க்கவே முடியாது என் கிற அளவுக்கு வந்துவிட்ட இந்த விலை யேற்றத்தை ச மாளிப்பதற்கான வழிமுறை களை கற்றுக் கொள்வ தே இப்போதைக்கு புத்திசாலித்த னமான முடிவாகும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என் பதை இனி சொல்கிறேன்.

திட்டமிடல்!

விலைவாசி உயர்வை சமாளிப்பதன் முதல்படி செலவுகளை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே . பலரும் இந்த விஷயத்தில் அலட் சியமாக இருக்கிறார்கள். நம்முடை ய வரவு-செலவு குறித்து நமக்கு தெளிவான திட்டம் வேண்டும். கண வன்-மனைவி இருவரும் சம்பாதிப் பவர்களாக இருந்தால், இருவரது ஊதியம் மற்றும் குடும்பத்திற்கு வேறு வகைகளில் வரும் வருமான த்திலிருந்து அவசரச் செலவுகள், உடனடித் தேவைக்கு உரிய செலவு கள், எதிர்காலத் திட்டத்திற்குரிய செலவுகள், கல்வி, மருத்துவச் செலவுகள் போன்றவற்றுக்குப் பண த்தை ஒதுக்கி வைத்துவிட்டு, மீதிப் பணத்தை மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

சிலர் சம்பளத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு பிற சொத்துக்களின் மூலம் வரும் வரு மானத்தை எந்தத் திட்டமும் இல்லாமல் செலவு செய்கிறார்கள். இது மகாதவறு. சம்பளம் தவிர வரும் வருமானம் அனைத்துமே கணக்கில் கொ ண்டு வந்தால்தான் எதிர் காலத்திற்கான சேமிப் பை அதிகப்படுத்த முடியும்.  

சேமிப்பு!

எவ்வளவு பெரிய நெருக்கடியாக இருந்தாலும் சேமிக்கும் பழக்கத் தைக் கைவிடக்கூடாது. பத்து வரு டத்துக்கு முன்பு செய்யப்பட்ட சேமி ப்பு மற்றும் முதலீடுகள் இன்று பெருந்தொகையாக வளர்ந்து நிற்ப தைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதனால் ஒவ்வொரு மாதமும் சேமிப்புக்கான தொகையை ஒதுக்கி விட வேண்டும். இது அவசர காலத் துக்கு மட்டு மல்ல, எதிர்கால பண வீக்க விகிதத்தில் உங்களது செலவு களை சமாளிப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.

ஒரு மாதத்தில் 10% பணத்தைக் குறைந்தபட்சமாக ஒருவர் சேமி க்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் சராசரி சேமிப்பு 20 சதவிகி தத்திற்கு மேல் என்பதால் அந்த அளவுக்கு சேமிப்பதை நம் லட்சிய மாக வைத்துக் கொள்ளலாம்.

வாகனப் பயன்பாடு!

சராசரியாக இரண்டு மாதங்களுக் கு ஒருமுறை பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதை சமாளிக்க நமது சொந்த வாகன ங்களை தேவைகேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடந்து போய் வரக்கூடிய தூரத்தில் இருக் கும் கடைகளுக்குச் செல்ல வண்டி யை எடுத்து செல்லக் கூடாது. வே லைக்குச் சென்று வருவது தவிர சின்னச் சின்ன வேலைகளை சைக்கிள் வைத்தே செய்து முடிக்க லாம்.

உங்கள் பகுதியிலிருந்து வேலைக்கு வரும் நண்பரோடு சேர்ந்து இருவராக அலுவலகம் சென்று வரலாம். அலுவல க பேருந்து வசதியை பயன்படுத்தலாம். அல்லது பொதுப் போக்குவரத்துக்கு பழ கிக் கொள்ளலாம். இதன்மூலம் ஒரு மாதத்தில் 150 ரூபாய் முதல் 400 ரூபா ய் மிச்சப்படுத்தலாம்.  

அவுட்டிங்!

அடிக்கடி ஓட்டல்களுக்கு செல்வ தைத் தவிர்க்க வேண்டும். கண வன், மனைவி, இருகுழந்தைக ள் கொண்ட குடும்பம் ஒருமு றை உணவகம் செல்ல வேண்டு ம் என்றால், குறைந்தபட்சம் 500 ரூபாயாவது செலவிட வேண்டியிருக்கும். இதற்குப் பதிலாக வீட்டிலேயே வித வித மான உணவுகளை தயார் செய் யலாம். பெரிதாக செலவு செய்ய த் தேவை இல்லாத பீச், பார்க் போன்ற இடங்களுக்கு குடும்பத்தோ டு சென்று வருவது செலவைக் குறைக்கும் சிறந்த வழி. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 300 ரூபாய் மிச்சப்படுத்தலாம்.

கடன்கள்!

நமது வருமானத்தை மீறி எந்த சந்தர்ப்பத்திலும் செலவழிக்கக் கூடாது. இப்படி மேலதிகமாக செல வழிக்கும் போதுதான் கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகிறது. இத னால் வட்டி கட்டவேண்டிய கட்டா யம் ஏற்படுகிறது. தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் கட னே கூடாது என்பதே சரியான முடி வு. கடன் வாங்கும்போது நாளைய வருமானத்தை இன்றே செலவு செ ய்கிறோம் என்பதை ஞாபகம் வைத் துக் கொள்ளுங்கள். தேவையில்லா த கடனை வாங்காமல் இருப்பதன் மூலம் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

செல்போன்!

செல்போன் பயன்பாட்டை கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒருவரைத் தொடர் பு கொள்ளும்முன் அவரோடு என்ன பேச வேண்டும் என்று யோசித்து போன் செய்ய வே ண்டும். பண்டிகை நாட்களில் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களு க்கு வழக்கத்தைவிடவும் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவ தால் அன்றைக்கு எஸ்.எம். எஸ். அனுப்புவதைத் தவிர்க்க லாம். ரீசார்ஜ் செய்வதற்கு அவ்வப்போது கிடைக்கும் சலுகைகளையும் சரியாகப் பயன்படு த்திக் கொள்ளலாம். செல்போன் நிறுவனங்கள் வெகுவிரைவில் கட்டண ங்களை உய ரத்தப் போவதாகப் பேச்சு இருப்பதால் இதற்கு இப்போ தே பழகிக் கொள்ளவும். செல்போனை சிக்கனமாகப் பயன் படுத்து வதன் மூலம் மாதத்திற்கு 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.

கிரெடிட் கார்டு!

அவசரத்துக்கென கிரெடிட் கார்டை பயன்படுத்த தொடங்கி இப்போ து எதற்கெடுத்தாலும் கிரெ டிட் கார்டு நீட்டுவது வசதி யான விஷயமாக மாறி விட் டது. முக்கியமாக, கிரெடிட் கார்டை வைத்துக் கொண்டு பெரிய பெரிய மால்களுக்கு ள் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால், நம்மை அறியா மலே நம் கிரெடிட் கார் டை பயன்படுத்தி பொருளை வாங்கிவிடுவோம். எக்காரணத்தைக் கொண்டும் கிரெடிட் கார்டு மூலம் பணத்தை எடுக்கவே கூடாது. கிரெடிட் கார்டின் மூலம் அநா வசியமாக செலவாவதைத் தடுப்பது எப்படி?

கடந்த ஒரு வருடத்தில் கிரெ டிட் கார்டை பயன்படுத்தி, அதற்காக எவ்வளவு வட்டி கட்டியிருக்கிறீர்கள் என்று சின்னதாக ஒரு கணக்கு போ ட்டுப் பாருங்கள். எப்படி குறைத்துப் போட்டாலும் 300 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை வட்டியாக கட்டியிருப்பீர் கள் என்பது புரியும். கிரெடிட் கார்டை உங்கள் கன்ட்ரோலில் வைத் திருந்தால் மாத த்திற்கு 300 ரூபாயை நீங்கள் எளிதாகச் சேமிக்க லாம்.

வீட்டு பட்ஜெட்!

வீட்டிற்குத் தேவையான பலசரக்கு பொருட்களை சில்லறையாக வாங்காமல் மொத்தமாக வாங்கும்போது விலை குறைவாகக் கிடைக்கும். வீட்டுக்கெதிரே கடை இருந் தும், மொத்த காய்கறி அங் காடிகள் உங்கள் வீட்டுக்கு அருகே இருந்தால் அங்கே யே சென்று வாங்கலாம். ஒரு பொருளை எவ்வளவு பயன்படுகிறதோ, அதற்கு மேல் வாங்காமல் இருப்பதே நல்லது.

ஒரு வேளைக்கு எவ்வளவு தேவையோ, அதை மட்டுமே சமைப் பதன் மூலம் உணவுப் பொருட்கள் தேவை இல்லாமல் வீணாவதை தடுக்கலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்குக் குறைந்தது 200 முத ல் 400 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.

மின்சாரம்!

மின்சாரத் தட்டுப்பாடு பெரிய அளவில் இருக்கும் இந்த வேளையில், பணம் செலவானாலும் பரவாயில்லை என இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்றவ ற்றை வாங்கி, வாழ்க்கையை அனுபவிப் பது அவசியமா என்று பார்க்க வேண்டும். குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள் ளும் மின் விளக்குகளை பயன்படுத்த லாம்.

எல்லா நேரத்திலும் ஏசியை ஓட விடா மல், மின்விசிறியை பயன்படுத்தலாம். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் தண் ணீரும் வீணாகாது. மோட்டாருக்கு மின்சாரம் விரயம் ஆவ தும் குறையும். இதன் மூலம் மாதத்திற்கு குறைந்தது 50 ரூபாய் முதல் 300 வரை மிச்சப்படுத்தலாம்.

பகுதி நேர வேலை!

திட்டமிட்டு செலவைக் குறைப்பதோடு, நம் வருமானத்தை அதிகரிக்கவும் முயற் சி செய்யலாம். அந்தந்த பகுதிகளில் அதற் குரிய வாய்ப்புகள் என்ன என்பதை யோசித் து குறைந்தபட்சம் ஒரு நாளில் இரண்டு மணி நேரமாவது ஒதுக்கி, அதற்கு பாடுப ட்டால் உங்கள் வருமானம் நிச்சயம் அதி கரிக்கும். அது சொற்பமாக இருந்தாலும் உங்கள் செலவைச் சமாளிக்கவும், எதிர் காலத்திற்குச் சேமிக்கவும் உதவும்” என்று முடித்தார் முத்துகிருஷ்ணன்.

செலவுகளை சமாளிக்கும் சூப்பர் டிப்ஸ்களை சொல்லி விட்டார் நிபுணர். இனி அதை நடைமுறைப்படுத்த வேண்டியது உங்கள் வே லை!

 { { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: