Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேகமாக இதயம் துடிக்கலாமா? – வீடியோ

இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhy thmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.

இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்று போவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக் கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலிவாங்கிவிடும்.

தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போ தே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இத யத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தி ன் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் ‘சைனஸ் நோட்’. இங்கிருந்துதான் இயற்கையான மின் இணைப்பு கள் வழியாக இதயத்தின் மற்ற அறைக ளுக்கும் மின்சாரம் பாய்கிறது. இந்த மின் உற்பத்தி மற்றும் மின் விநியோக த்தில் எங்கேனும் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பிலும் மாறுபாடு ஏற்படு ம். ஒன்று அதிவேகமாகத் துடிக்கும், அல்லது தேவைக்கும் குறைவாகத் துடி க்கும். இதயம் இப்படிச் சீரற்றுத் துடிப்ப தைத்தான் சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்கிறார்கள்.

இதயம் வேகமாகத் துடிப்பதால் என்ன பிரச்னை வரும்?

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial fibrill ation) என்று சொல்லக் கூடி ய இதயத் தின் மேல் அறையில் இருந்து வரும் சீரற்ற அதிவேக மின் உற்பத்திதான் வேகத் துடிப்புப் பிரச்னைக்கு முக்கிய காரணம். 40 வயதுக்கு மேல் நான்கில் ஒருவருக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. பொ துவாக, வயது, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு, புகைப்பழக்கம், அதிக மது அருந்துதல், தைராய் டு, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் காரணமாக வேகத் துடிப் புப் பிரச்னை ஏற்படும். அதிவேகமாக இதயம் துடிக்கும்போது, இத யத்தில் இரு ந்து ரத்தம் பம்ப் செய்து வெளி யேற்றப்படுவதில் ஏற்படும் சிக் கல் காரணமாக ரத்தம் உறைந்து விடும். இப்படிக் கெட்டியான ரத் தம் மூளைக்குச் செல்லும்போது அடைப்பு ஏற்படுவதால், பக்கவா தம் வரலாம். எனவே, இதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச் சை பெறுவது முக்கியம்.

இதயம் வேகமாகத் துடிப்பது ஏன்?

இதயத்தில் நடைபெறும் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்படும் சீரற்றத்தன்மை காரணமாகவே இதயம் வேகமாகத் துடிக் கிறது. இதில் இரு வகைகள் உண்டு. இதயத்தின் மேல் அறையில் தோன்றும் வேகத் துடிப்பால் உயிருக்கு ஆபத்து எதுவும் கிடையா து. அதுவே, கீழ் அறையில் இருந்து தோன்றினால், உயிருக்கு ஆபத் து நேரலாம். இந்தப் பிரச்னை சிலருக்குப் பிறவியிலேயே இருக்கு ம். அதன் பாதிப்பு வாழ்நாளில் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். படபடப்பு, சோர்வு, மூச்சு வாங்குத ல், நெஞ்சு வலி போன்றவை இதன் அறிகுறிகள்.

இதனைக் கண்டறிவது எப்படி?

இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் தோன்றும்போது, ஈ.சி.ஜி. பரி சோத னை மூலம் கண்டறிந்துவிடலாம். முடியாதபட்சத்தில், 24 மணி நேரக் கண்காணிப்பு கருவி மூலம் கண்ட றியலாம். இந்தக் கருவியைச் சட் டைக்கு உள்ளே வைத்துக்கொண்டு வேலை செய் யலாம். 24 மணி நேரத்துக்குப் பிறகு அதில் உள்ள ‘சிப்’பில் இருந்து தகவலைப் பதிவிறக்கம் செய்து, இதயத் துடிப்பி ன் போக்கைத் தெரிந்துகொள்ள முடியும். இதுதவிர, ‘ஈவென்ட் ரெக் கார்டர்’ என்று ஒரு கருவி உள்ளது. இரண்டு வாரங்கள் வரையிலும் இதில் தகவல்கள் பதிவாகிக்கொண்டு இருக்கும். வேகத் துடிப்பு அறிகுறி தோன்றுகிறபோது ஈவென்ட் ரெக்கார்டரை ஸ்விட்ச் ஆன் செய்தால், இதயத் துடிப்பு விவரங்க ளை அது பதிவுசெய்துவிடும். இந்தப் பதிவுத் தகவல்களை செல்போன் தொ ழில்நுட்பத்தின்படி எங்கு இருந்து வே ண்டுமானாலும் டாக்டருக்கு அனுப்பிப் பார்க்கச் செய் யலாம். இவை யாவும் முடியாத பட்சத்தில் ‘எலக்ட்ரோ ஃபிசி யாலஜிஸ்டடி’  என்ற பரிசோதனையி ன் மூலமாகவும் பிரச்னை என்ன என் பதைக் கண்டறிய முடியும். உடலுக்கு ள் குழாயைச் செலுத்தி, செயற்கை முறையில் இதயத்தில் மின் தூண்ட லை உருவாக்கி, அப்போது அதன் செ யல்பாட்டைக் கண்காணித்து, பிரச்னை யைக் கண்டறியும் முறை இது.  

இதற்குச் சிகிச்சை என்ன?

இந்தப் பிரச்னைக்கு மாத்திரை – மருந்துகளின் மூலமும்  ரேடியோ ஃப்ரீக்வெவன்ஸி அபலேஷன் என்ற முறையின் மூலமாகவும் இர ண்டு வகையான சிகிச்சைகள் அளி க்கப்படுகின்றன. அதிவேக இதயத் துடிப்பு உள்ளவர்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் மருந்து – மாத்திரை களால், பிரச்னையைக் கட்டுப்படுத் த முடியும். அப்படியே கட்டுப்பட்டா லும், அவர்கள் வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக்கொள்ள வேண் டும். அப்படி எடுத்துக்கொண்டாலு ம், மருந்தின் பக்க விளைவுகளை அனுபவிக்க நேரிடும். பல ஆண்டுக ளுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடச் சொல்வது சரியான ஆலோசனை யாக இருக்காது. எனவே, தேவை க்கு அதிகமாக மின் தூண்டல் உள்ள இடங்களை ரேடியோ ஃப்ரீக் வென்ஸி மூலம் அழிக்கும் சிகிச் சையைப் பரிந்துரைப்போம்.

இதயம் குறைவாக துடிக்கும் பிரச்னை எதனால் வருகிறது? அதன் அறிகுறிகள் என்ன?

இதயம் தேவைக்கும் குறைவா க துடிப்பதற்கு வயது அதிகரிப்ப து காரணமாக இருக்கலாம்; பிற ந்ததில் இருந்தும் இருக்கலாம். நினைவு இழந்து மயக்கம் போ ட்டு விழுவது, மூளைக்குப் போ துமான ஆக்சிஜன் கிடைக்காத தால் ஏற்படும் கிறுகிறுப்பான மயக்கம், சோர்வு, மூச்சு வாங்குதல் போன்றவை இதன் அறிகுறிகள். இதற்கு மருந்து மாத்திரையால் பலன் இல்லை. ‘பேஸ்மேக்கர்’தான் ஒரே தீர்வு!”

 { { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: