Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"இதழில் கதை எழுதும் நேரமிது . . .!": பாடலின் சிறப்பு – வீடியோ

இதழில் கதை எழுதும் நேரமிது. . . என்று தொடங்கும் இந்த பாடல் கே. பாலசந்தர் இயக்கி, கமல் ஹாசன்,சீதா, ஜெமினி கணேசன், மீசை முருகேஷ், வி.கே. ராம சாமி, மனோரமா உட்பட மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வெளி வந்த உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள‍ இந்த பாடலில் . . .

ஒரு காதலன், தன் காதலியிடம், இனிய மாலைப் பொழுதையும், அமைதியான சூழ்நிலையை சுட் டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல், காதல் கிளிகள் இரண்டு ஜா டை காட்டி பேசுவதை தான் கண்டவுடன் தனக்கு ஏதேதோ நினைவு கள் நெஞ்சில் உதிப் பதையும், தனது காதலியின் கூந்தலை கார் மேகத்துடன் ஒப்பிட்டும், அவளது முகத்தி னை நில வுடன் ஒப்பிட்டு, தன் காதலிக்கு ஐஸ் வைத்து, தன்னு  டன் காதல் உறவாட அழைக்கி றான்.

ஆனால் காதலியோ . .

த‌னது காதலனின் புகழ்ச்சிக்கு மயங்காமலும், அதே நேரத்தில் அவ ன் தன்ன்னுடன் ஒப்பிடும் அனைத்து உவமைகளும் தன்னைவிட உயர்ந்த்தில்லை என்றும் இந்த மனமத லீலைகள் எல்லாம் திரும ணத்திற்கு பிறகுதான் என்பதையும் தமிழ்க்கலாச்சாரத்தின் பெரு மையையும் கூறியுள்ளார். அவன் மனம் புண்படுத்தாமல நாசுக்கா க பாடலில் கூறியிருப்பார்.

இன்னும் சொல்ல‍ப்போனா

கழுவுற மீனில் நழுவுற மீன் என்று தமிழ்ப் பெண்களை குறிப்பிடுவார்கள் நம்மூர் இளைஞர்கள். இந்த ஒற்றை வரியிலிருந்து எத்த‍னை எத்த‍ னை உவமைகளுடன் அலங்க ரித்து அழகான‌ வரிகளால், இளையராஜாவின் மெட்டுக்கு அரிய வகை ரத்தினங்களை பதித்தி ருக்கிறார் அந்த கவிஞர். மேன்மேலு ம் மெருகேற்றுவதுபோல S.P. பாலசுப்பிரமணியம் அவர்களும் சித்ரா அவர்களும் இணைந்து பாடியுள்ள‍ர்.

இந்த பாடல் வசந்தா – லலிதா ஆகிய இரு ராகங்களில் இசைஞானி அவர்கள் இசையமைத்துள்ளார். 

இந்த பாடலை கேளுங்கள் இனிமையை ரசியுங்கள், காட்சியை காணுங்கள்.


– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: