புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்த கலந்துரையாடலில் மாணவ மாணவிகளின் கேள்விக ளுக்கு, அப்துல்கலாம் அளித்த பதில் கள்:
* ஊழலை ஒழிப்பது எப்படி? அதை முழுவதுமாக ஒழிக்க முடியுமா?
“ஊழலுக்கு எதிரான மன மாற்றம், தனி மனித ஒழுக்கம், வெளிப் படையான தன்மையால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்’ என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலா ம் கூறினார்.
* சாதாரண மனிதர் அப்துல் கலாமுக்கும், ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் என்ன வித்தியா சம்?
ஜனாதிபதியாக இருந்த அந் தக் குறுகிய காலத்தில், போது மான போக்குவரத்து வசதி இருந்ததால், 7.5 மில்லியன் மக்களை என்னா ல் சந்தித்து, இந்திய நாட்டின் கனவுகளை இளைஞர்களிடம் விதை க்க முடிந்தது. என்னை பொருத்த வரை மக்களுக்குச் சேவையாற்ற ஜனாதிபதி பதவி நல்ல வாய்ப்பு.
* அணு உலைகளால் உலகிற்கு ஆபத்து. ஆனால் நீங்கள் கூடங் குளம் அணு உலையை ஆதரிக்கிறீர்களே?
ஜப்பான் அணு உலையின் முக்கிய பாகங்கள், கடல் மட்டத்தை விட 2 மீட்டர் உயரத்தில் இருந் தது. சுனாமி பேரலை 9.5 மீட்ட ர் உயரத்திற்கு எழுந்ததால், அணு உலை மூழ்கியது. பெரிய அளவில் கதிர் வீச்சு பாதிப்பில் லை. ஆனால், கூடங்குளம் அணு உலை 15.5 மீட்டர் உயரத் திற்கு அமைக்கப்பட்டுள்ளதா ல், பாதுகாப்பாகவே உள்ளது.
* கிராமப்புறத்தில் டாக்டர்கள் பணிபுரிய வேண்டும் என்பதை கட்டாயமாக்குவது சரியா ?
பிலிப்பைன்ஸ் நாட்டில் 7 ஆயிரம் தீவுகள் உள்ளன. அங்கு எல்லா தீவுகளிலும் டாக்டர்கள் இல்லை. எம். எஸ்.சி., நர்சிங் முடித்து, 4 ஆண்டு பி.எச்டி., ஆராய்ச்சி முடித்தவர்கள் ஒவ்வொரு மருத்துவ மனைக்கும் மூத்த மருத்துவ அதிகாரியாக நிய மித்துள்ளனர். இந்த முறை யை இந்தியாவில் செயல்படுத்தி பார்க்கலாம்.
* இந்தியா, 2020ல் வல்லரசாவது நடைமுறையில் சாத்தியமா?
தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைக ளில் கடந்த சில ஆண்டுகளில் நாம் அபரீத வளர்ச்சியை கண்டுள்ளோம். 2020 எட்டி பிடிக்க இன்னும் 8 ஆண்டுகள் உள்ளது. “விஷன் இந்தியா – 2020′ சாத்தியமானது தான்.
* ஜனாதிபதியை, மக்கள் நேர டியாக ஓட்டுப் போட்டு தேர்ந் தெடுக்க க் கூடாதா?
மக்கள் நேரடியாக ஓட்டுபோட்டு ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பத ற்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தற்போது இடமில்லை. வரும் காலங்களில் மக்கள் நேரடியாக ஜனாதிபதிக்கு ஓட்டு போ ட்டு தேர்ந்தெடுத்தாலும் ஆச் சரியப்படுவதற்கில்லை.
* கல்வி முறையில் தங்களு டைய மாணவர் பருவத்தை யும் தற்போதைய காலகட்டத் தையும் ஒப்பிடுங்களேன்…
எனக்கு சின்ன வயதில் பாடம் நடத்திய ஆசிரியர், பறவை எப்படி பறக்கிறது என்று கரும் பலகையில் விளக்கினார். அதுதான் எனக்கு விண்வெளி சிந்தனை தூண்டியது. கல்லூரியில் படிக்கும்போது, எனது பேராசிரியர் ஒரு வர் கணிதத்தில் சில தீர்வுகளை விளக்கி விட்டு, விடுபட்ட பிற தீர்வுகளை நூலகத்திற்குச் சென்று கண்டு பிடிக்கச் சொல்லுவார். அதுவும் என் ஆராய்ச்சிக்கு வழி வகுத்தது. என் னை பொருத்த வரையில் பாடத் திட் டம் மட்டும் மாணவர்களை உருவா க்கி விடாது. ஆசிரியர்களின் தூண்டு கோ லும் முக்கியம்.
* நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இரு க்கும் ஊழலை ஒழிக்க என்ன வழி?
இந்தியாவில் 200 மில்லியன் குடும்ப ங்கள் இருக்கின்றன. இதில் 60 மில்லியன் குடும்பங்களில் ஊழல் இருக்கிறது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஊழல் கடவுள் கொண்டு வந்தது கிடையாது. ஆகவே வீட்டில் இருந்துதான் இதற் கான தீர்வை காண வேண்டும். அப்போதுதான் ஊழலை வேரோடு ஒழிக்க வேண்டும். ஊழல் செய்த பணத்தில் கார், பைக் உள்பட எந்த பொருட்களை பெற்றோர் வாங் கி கொடுத்தாலும், அதை வாங் கக் கூடாது என்று இளைஞர்கள் உறுதியாக சபத மேற்க வேண் டும். அதுபோல் செய்தால் பெற் றோர்களும் திருந்துவதோடு, ஊழலையும் அறவே ஒழிக்க முடியும். ஊழலை ஒழிக்க லோக் பால் தேவை யானது. அதற்காக லோக் பாலை கொ ண்டு எல்லோரையும் சிறையி ல் அடைத்தால் ஜெயிலில் ஊழல் வந்துவிடும். ஊழலுக்கு எதிரான மன மாற்றம், தனி மனித ஒழுக்கம், வெளிப்படை தன்மையால் மட்டுமே ஊழலை ஒழி க்க முடியும். இவ்வாறு அப்துல் கலாம் கூறி னார்.
thanks to dinamalar
நல்ல தகவல்