Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெஞ்செரிச்சலை தவிர்க்க சில உணவுகள்

சிலருக்கு சாப்பிட்ட உடனே தொண்டையில புளிச்ச ஏப்பம் வரும். ஜீரணமே ஆகாது நெஞ்செல்லாம் எரி யும். இதற்கு காரணம் அசிடிட்டி தான். ‘அசிடிட்டி’ எனப்படும் வயிற்றில் ஏற் படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவு களை உண்ட பின்னர் இத்தகையோரு க்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது இவ ற்றை தவிர்க்க சில உணவுகளை பரி ந்துரைத்துள்ளனர் மருத்துவர்கள்.

ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங் களை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது கட்டுப்படும். அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் ஆப்பிள் ஜூஸ் பருகலாம்.

காய்கறிகளில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டானி போன்றவை வேக வைத்து சாப்பிடலாம். இவை ஆரோக்கியத்தோடு அசிடிட்டி பிரச்சி னைகளை தீர்க்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். உருளைக் கிழங்கு வேண்டுமானால் சாப்பிட லாம் ஆனால் அவற்றை எண்ணெ யில் பொரித்து சாப்பிடக்கூடாது.

வயிற்றில் அமிலத் தொந்தரவு இரு ப்பவர்கள் முட்டையின் வெள்ளைக் கரு, சிக்கன், மீன் போன்றவைகளை உட்கொள்ளலாம், ஆனால் அவற் றை  மசாலா அதிகம் சேர்க்காமல் வேகவைத்து உண் ணவேண்டும்.

ஹெவியான உணவுகளை உட்கொண்டால் மட்டுமே உணவு ஜீரண மாவதில் சிக்கல் ஏற்படும். எனவே கொழுப்பு குறைவான சீஸ், பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் மைதா தவிர்த்து தானியங்களில் செய்த உணவுகளை தாராளமாக உண்ணலாம் என் கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

 { { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply