Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (10/06): நாட்டைக் காப்பாற்றும் நீங்கள், உறவுமுறை பவித்திரங்களை நாசப்படுத்தி உள்ளீர்!

 

அன்புள்ள சகோதரிக்கு —

எனக்கு வயது, 38. என் மனைவிக்கு வயது, 24. எங்களுக்கு திரு மணமாகி, எட்டு மாதங்கள் ஆகின்றன. நான் ராணுவத்தில் பணி செய்து, சமீபத்தில் ஓய்வு பெற்று, வங்கி ஒன்றில், இரவு நேர காவலர் பணி செய்கிறேன். என்னுடைய சகோதரிகளின் திருமணம் நடத்த வேண்டிய காரணங்களால், என்னுடைய திருமணம் மிகவும் தாமத மாக வே நடந்தது. மனைவி, தற் போது கர்ப்பிணியாக உள்ளாள்.

நான் திருமணம் செய்தது, மிக வும் ஏழ்மையான குடும்பத்தில். மனைவியின் தாயார், எங்களுக் கு தூரத்து உறவினர்; எனக்கு ச கோதரி முறையும் கூட. அவர் தன்னுடைய, 15வது வயதில், 35 வயது ள்ளவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னுடைய மாமனார், மும்பையில் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிகிறார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். அவர் சம்பளம், அவரு டைய செலவு மற்றும் அவரது மருந்து, மாத்திரைக்குத்தான் சரியாக இருக்கும்.

ஒரு வாரம் வீட்டில் இருப்பார்; பிறகு மும்பை செல்வார். என் மனை வி பூக்கடை ஒன்றில், வேலை செய்து வருவதால், அந்த வருமான த்தில்தான் தாய், மகளின் காலம் ஓடிக்கொண்டிருந்தது.

நானும் திருமணத்திற்கு பின், மாமனார் வீட்டிலேயே தங்கி@னன். வீட்டில் ஒரே பெண்தான். வேறு துணைக்கு ஆள் இல்லாததால், என் னை வீட்டோடு மருமகனாக்கிக் கொண்டனர். நான், இரவு பணிமு டித்து அதிகாலை, 4.00 மணிக்குதான் வருவேன். மனைவி காலை, பணிக்கு சென்று, இரவு 7.00 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவாள்.
மனைவி சென்ற பின், நான் தூங்க ஆரம்பிப்பேன். இதில் என்ன விஷயம் என்றால், பகலில் பெரும்பாலான நேரங்கள், வீட்டில் நான் மாமியாரோடு தான் இருக்கிறேன். ஆனால், அதிகம் பேச மாட்டார்; கூச்ச சுபாவம் உள்ளவர்.

அவருக்கு, என்னை விட, ஓரிரண்டு வயது கூடுதலாக இருக்கலாம். ஒரு நாள் மதியம், 2.00 மணி இருக்கும். அவசரமாக பாத்ரூம் செல்ல வேண்டியிருந்தது, எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு, திரும்பி வரும் போது, எதேச்சையாக அவரது ரூமை பார்த்தேன். அப்போது தான் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தார் போல. “பிரா’வுடன் இருந்தார்.

சற்று நேரம் தடுமாறி, அங்கேயே நின்று விட்டேன். லேசாக திரும்பும் போது, என்னை கவனித்து விட்டார். வெட்கத்தால் முகம் சிவந்து, சற்றே கோபத்துடன் அவசரமாக, துணியால் மார்பை மூடிக் கொண் டார்.

எனக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு வழியாக யோ சித்து, “சாரி’ சொல்லிவிட்டு, செல்லலாம் என நினைத்து அருகில் சென்றேன். அருகில் சென்றதும், என்னையே, என்னால் கட்டுப்படுத் த முடியவில்லை. நரம்புகள் முறுக்கேறி, ஏதோ செய்ய, திடீரென்று கட்டிப்பிடித்து விட்டேன். ஒரு பக்கம் திமிற, என்னுடைய பிடி இறுக, ஒரு யுத்தமே நடந்தது. முடிவில் மிகவும் பலாத்காரமாக, அவருடன் உறவு கொண்டு விட்டேன்.

அந்த சம்பவத்திற்கு பின், நாங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை.

மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. பேசாமல், மனைவியை தனியே அழைத்து சென்று விடலாமா என நினைத்தேன். 15 நாள் ஆகியிருக்கும், நானே மாமியாரிடம் பேசினேன். “தப்பு செய்து விட்டேன், மன்னித்துக் கொள்ளுங்கள். இதற்குமேல், நான் உங்கள் வீட்டில் இருப்பது சரி இல்லை. அதனால் நான், மனைவியை அழைத் துக் கொண்டு, தனிக்குடித்தனம் சென்று விடுகிறேன்…’ என்றேன். ஆனால், அதற்கு அவர் மறுத்து விட்டார்.

“தவறை நீங்கள் மட்டும் செய்யவில்லை. இருவருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அதனால், நீங்கள் மட்டும் கவலைப்படத் தேவையில் லை. சம்பவம் யாருக்கும் தெரியலையே. நமக்குள்ளேதான் இருக்கி றது. அதனால், வருத்தப்பட வேண்டியதில்லை…’ என்றார்.

எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பிறகு ஒரு நாள் அவரே, என்னை உறவுக்கு அழைத்தார். என்னால் மீறவும் முடியவில்லை; மறுக்க வும் முடியவில்லை; உடன்பட்டேன். இப்படியாக எங்கள் உறவு, நா ன்கு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பகல்பொழுதில், கணவன், மனைவியாகவே இருக்கிறோம். அதிகாலையில், ஒரு சில மணிகளே, மனைவிக்கு இன்பத்தை கொடுத்துவிட்டு, பகல்பொ ழுதில் மாமியாருக்கு கணவராக, எத்தனை நாள்தான் இருக்க முடி யும்?
அவரிடம் கேட்டால், “இப்படியே இருக்கட்டுமே; யாருக்கும் தெரிந்தா ல்தானே அசிங்கம். தெரியாமல் பார்த்துக் கொள்வோம்…’ என்கிறார். “நீங்களும், மகளும் தனியே சென்று விட்டால், தற்கொலை செய்து கொள்வேன்…’ என, மிரட்டுகிறார். இந்த பிரச்னையிலிருந்து, நான் எப்படி மீள்வது. மனைவியிடம் உண்மையை சொல்லி விடலாமா அல்லது மாமனாரையும் அழைத்து, வீட்டோடு வைத்துக் கொள்ள லாமா?

சகோதரியாகிய நீங்கள்தான், இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்.
— இப்படிக்கு
உங்கள் சகோதரன்.
அன்புள்ள சகோதரருக்கு—

உங்கள் கடிதத்தை வாசித்தேன். திருமணத்தின் போது, உங்களுக்கு வயது, உங்களது மனைவி வயதை விட, 14 வயது அதிகம். உங்கள் மாமனாரின் வயதோ, உங்களின் மாமியார் வயதை விட, 20 வயது அதிகம்.

பொதுவாக திருமணங்களில், ஆணின் வயது பெண்ணின் வயதை விட, 3லிருந்து, 5 வரை அதிகமிருக்கும். சமவயதினர் கூட மணம் செய்து கொள்கின்றனர். சில சமயங்களில், மணமகனை விட, இர ண்டொரு வயது அதிகமாக கூட மணமகள்கள் அமைந்து விடுகின் றனர்.

வயது வித்தியாச திருமணங்கள் பல, காமவிகாரங்களையும், சில பல உறவு மயக்க குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. உங் கள் வாழ்க்கையிலும், அதுதான் அரங்ககேறியுள்ளது. நாட்டைக் காப்பாற்றும் பணியில் இருந்த நீங்கள், உறவுமுறை பவித்திரங்க ளை நாசப்படுத்தி உள்ளீர்கள்.

மாமியார் உங்களுக்கு தூரத்து உறவினர், சகோதரி உறவுமுறையும் கூட. மாமியார் என்பவர், இன்னொரு தாய்க்கு சமம். அந்த உயரிய உறவுமுறையை கொச்சைப்படுத்தியுள்ளீர்கள்.

மாமியார் குளித்துவிட்டு ஆடை மாற்றுவதை தற்செயலாகப் பார்த்து விட்ட நீங்கள், என்ன செய்திருக்க வேண்டும்? மின்னல் வேகத்தில், அக்காட்சியமைப்பிலிருந்து விலகி, உங்களது அறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், சாரி சொல்வதாக நெருங்கி, அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்திருக்கிறீர். இதன் மூலம், மாமியாரை வலுக் கட்டாயமாக சேற்றில் தள்ளி, சேற்றில் புரள்வதை ரசிக்க செய்து விட்டீர். நீங்கள், கட்டின மனைவிக்கு மட்டுமல்ல, சொந்த பந்தங்க ளுக்கும், சமூக கட்டமைப்புக்கும் கூட, நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்கள்.

தவறுசெய்த, 15 நாட்களுக்கு பின், மனம் உறுத்தி, தனிக்குடித்தனம் போக முடிவெடுத்திருக்கிறீர். இது பற்றி மாமியாரிடமும் பேசியிரு க்கிறீர். இந்த பேச்சு கூட, உள்நோக்கத்தோடு கூடிய நாடகம் தான். மாமியாரின் உள்ளக்கிடக்கையை ஆழம் பார்த்திருக்கிறீர். மாமியா ரிடமிருந்து நீங்கள் விரும்பின கறுப்பு பதில் கிடைத்திருக்கிறது. கள்ள உறவை, அதே வீட்டிலேயே இருந்து தொடர பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் அத்தை. “மீறி தனிக்குடித்தனம் போனால், தற் கொலை செய்து கொள்வேன்…’ என மிரட்டும் அளவிற்கு, கள்ள உறவில் ருசியும் கண்டுவிட்டார் அவர்.

கர்ப்பிணி மனைவிக்கும், இளமை ஊஞ்சலாடும் அத்தைக்கும் இடையே கிடந்து திண்டாடுவதாய் உங்கள் கடிதம் கூறுகிறது.

இனி, பிரச்னைக்கான தீர்வை யோசிப்போம் சகோதரரே!

மனைவியிடம் உண்மையைக் கூறினால், உங்களை காறித் துப்புவா ள், திருமண பந்தத்திலிருந்து விடுபடயத்தனிப்பாள். பெற்ற தாயே, சக்களத்தியாக வருகிறாளா என்று, தாயாரின் மேல் மண்ணை வாரி த் தூற்றுவாள், இது தேவையா?

அத்தையிடம் அனுமதி கேட்காமல், நீங்களும், உங்களது மனைவி யும் தனிக்குடித்தனம் போவது நல்லது. மும்பையில் டேரா அடிக்கும் மாமனாரை, மருத்துவ பிரதிநிதி வேலையிலிருந்து நிற்கச் சொல் லி, வீட்டையும், அவரது மனைவியையும் கவனிக்க நைச்சிய மாக ஏற்பாடு செய்யுங்கள்.

தற்கொலை அச்சுறுத்தல் கண்டு பயப்பட வேண்டாம். தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டும், 90 சதவீத மக்கள், தற்கொலை செய்து கொள்வதில்லை.

பெற்ற தாயோ, உடன்பிறந்த சகோதரியோ ஆடை மாற்றுவதை பார் த்திருந்தால், தவறாக நடந்திருப்பீரா? நிச்சயம் மாட்டீர். இந்த தெளி வு, அத்தை விஷயத்தில் ஏன் இல்லை? பொருந்தா காமம், உறவு நி லை மீறிய காமம் அருவருப்பானது. இதை நீங்கள், இனி ஆயுளு க்கும் தவிர்க்க வேண்டும். மாமியாருக்கு மகனாய், மருமகனாய் இருங்கள்! உறவுகளில் புனிதத்தை பேணி காப்போம் சகோதரா!

நாளை, மகனோ, மகளோ பிறக்கும் வேளை, சேவல் குணத்தை விட் டொழித்து, நல்ல தந்தையாய் மறு அவதாரம் எடுங்கள் சகோதரரே!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: