“நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி என, கோவையில் பார்த்தீனிய செடிகளைப் போன்று செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது வட்டித் தொ ழில். இவ்வகை பைனான்சியர் களால் நேரிடப்போகும் ஆபத் து குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட வேண்டும்; இல்லா விடில், கழுத்துக்கு கத்தி வந்து விடும்’ என, எச்சரித்துள்ளது போலீஸ்.
மேற்கண்ட வட்டித் தொழில் செய்யும் பைனான்சியர்களில் பெரும் பாலானோர் சேலம், நாமக் கல், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள். கோவை லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி லட்சம் முதல் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து வட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு, கூலிப்படை தொடர்பும் உண்டு. கடன் வாங்கிய நபர் கள் திருப்பிச் செலுத்த தவறினால் வீட்டுக்குச் சென்று மிரட்டி வாக னம், பொருட்களை அபகரித்துச் சென்றுவிடுகின்றனர் கூலிப்படை யினர். பாதிக்கப்பட்டவர்கள் போ லீசில் புகார் அளிப்பதில்லை. கார ணம், பைனான்சியர்கள் கடன் வழங்கும்போது வாங்கி வைத்து ள்ள வெற்று காசோலைகள். கடனாளி போலீசில் புகார் அளித் தால், வெற்றுக் காசோலைகளில் பல மடங்கு தொகையை நிரப்பி வங்கியில் செலுத்தி விடுகின்ற னர். “கணக்கில் பணமில்லை’ என வங்கி யில் இருந்து எழுத்து மூலமான பதில் வந்ததும் செக்மோசடி வழக் கில் கடனாளியை சிக்க வைக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந் து அலைக்கழித்து விடுவர். இதனால், பைனான்சியர்களுடன் மோ த யாரும் முயற்சிப்பதில்லை. இதையே தங்களது பலமாக கொ ண்டு பைனான்சியர்கள் கொள் ளை வட்டி வசூலிக்கின்றனர்.
நாள் வட்டி: இந்த முறையிலான வட்டி சிறு வியாபாரிகள் மத்தியி ல் பிரபலம். காலையில் பைனா ன்சியரிடம் 1,000 ரூபாய் கடன் கோரும் வியாபாரிக்கு 900 மட்டு ம் வழங்கப்படும் (ஆயிரம் ரூபாய் க்கு ஒரு நாள் வட்டி ரூ.100. இந்த தொகையை முன் கூட்டியே பைனான்சியர் பிடித்தம் செய்து கொண்டு கடன் தருவார்). கடன் பெற்ற நபர் காய்கறி, பழங்களை மார்க்கெட்டில் மொத்த விலைக் கு வாங்கி தள்ளுவண்டியில் மா லை வரை வியாபாரம் செய்வதன் மூலம் முதலீட்டுடன் சேர்த்து 1,500 ரூபாய் வரை ஈட்டுவார். அதில் 1,000 ரூபாயை பைனான்சிய ருக்கான கடன் தொகையாக அடைத் துவிட்டு 500 ரூபாயை லாப மாக கருதுவார். இவ்வகை வட்டித் தொழில் பெரும்பாலும் கடை வீதி, காய்கறி, பழ மார்க்கெட் பகுதி களில் அதிகம் நடக்கிறது.
வார வட்டி: கோவை நகர் மற்றும் கிராம பகுதிகளில் “மைக்ரோ பைனான்ஸ்’ என்ற பெயரில் வார வட்டிக் கு கடன் வழங்கும் பைனா ன்ஸ் ஏஜன்ட்க ள் அதிகரித்துள்ளனர். இவர்கள் கை வினைஞர்கள், மகளிர் குழுவினர், டெய் லர்கள், பெட்டிக் கடைக் காரர், துணி வியாபாரம் செய்வோர் என சிறிய அளவி லான தொழில் செய்வோருக்கு இரண்டா யிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் தருகி ன்றனர். கடன் தொகை யில் 15 சதவீதத்தை முன் கூட்டியே பிடித் தம் செய்து கொள்ளும் ஏஜன்ட்கள், மீத தொகையை மட்டுமே வழங் குவர். கடன் பெற்றவர், 10 வாரங்களில் நிலுவையின்றி வாரம் ஒரு முறை தொகையை செலுத்திவிட வேண்டும். இவ்வா று கடன் வழங்கும் ஏஜன்ட்கள், தொடர்ச்சியாக பல ஆண்டுகள் தங்களுடன் தொடர்பு வைத்திருக்கும் நபர்களுக்கு மிகவும் அதிக ப்படியான கட ன் தொகையை வழங்கி விடுகின்றனர். முன்னர் வாங்கிய கடனை அடைக்கும் முன்பே, மீண்டும் கடன் கொடுத்து அவர்களை நெருக் கடிக்கு உள்ளாக்கிவிடுகின்றனர். கடன் தொகை யை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது, தற் கொலைகளும் நிகழ்ந்து விடுகின்றன.
மாத வட்டி: இவ்வகை கடன், வர்த்தகர் மற்றும் தொழில் அதிபர்க ளுக்கு நாமக்கல், திருச்செங்கோடு, தேனி, கம்பம் பகுதி பைனான் சியர்களால் வழங்கப்படுகிறது. கடன் கோ ரும் நபரின் வீடு, நிலம், தொழில் நிறுவ னம் தொடர்பான சொத்துப் பத்திரங்களை பிணை ஆவணமாக பெறும் பைனா ன்சி யர்கள் கோடிக்கணக்கில் கடன் வழங்குகி ன்றனர். ஒப்பந்த ஆவணத்தில் கூறியபடி மாதம் தவறாமல் வட்டி செலுத்துவது டன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மொ த்த கடன் தொகையையும் அடைத்து விட வேண்டும். தவறும் பட்சத்தில் சொத் துக்களை இழக்க வேண்டிவரும்.
மீட்டர் வட்டி: நடுத்தர பொருளாதார வசதி கொண்ட ஒர்க்ஷாப் உரிமையாளர்கள், வியாபாரிகள், சிறிய அளவில் ஓட்டல், பேக்கரி நடத்துவோரில் பலரும் மீட்டர் வட்டிக்காரர்களிடம் சிக்கியுள்ளன ர். லட்சம் ரூபாய் கடன் கோரும் நபருக்கு 85,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் (ஆனால், லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கணக்கு). கடன் பெற்றவர் வாரம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 வாரம் செலுத் த வேண்டும். தவறினால், வட்டிக்கு வட்டி போட்டு வசூலிக்கின்றன ர்.
மாதக்கணக்கில் தவணையை திரும்பச் செலுத்தாவிடில் வாங் கிய கடன்தொகை பல மடங்கு பெருகி விடும். இதேபோன்று, கந்து வட்டி பைனான்ஸ் முறையும் கோவையில் தலை விரித்தாடுகி றது. வித விதமான வட்டி வசூலிக் கும் பைனான்சியர்களில் பெரும் பாலானோர் நிறுவன பதிவு சட்டத் தின் கீழ், தங்களது தொழிலை பதிவு செய்யாதவர்கள். இதனால், வட்டி க்கு பணம் பெற்று பாதிக்கப்பட்டோ ரும், பைனான்ஸ் கும்பலிடம் பிணையாக வைத்த சொத்துக்க ளை இழந்தோரும் போலீசில் புகார் அளித்தாலும், சட்ட ரீதியான நிவா ரணம் கிடைப்பதில்லை. இதுவே, வட்டித்தொழில் செய்வோருக்கு பெரும் பலமாகிவிட்டது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய தாவது: கோவை நகரில் கடந்த 2010, ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தம் 2,283 புகார் மனுக்கள் போலீஸ் கமிஷனரிடம் நேரடியாக அளிக்கப்பட்டன. அதில், 584 மனுக்கள் மோசடி மற்றும் பைனான் ஸ் பிரச்னைகள் தொடர்பானவை. கந்துவட்டியால் பாதிக்கப்பட் டதாக 17 பேர் புகார் அளித்திருந்த னர். அனைத்து மனுக்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. கோவை யில் கல்வி, தொழில், வர்த்தக வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வெளிமாவட்டம், வெளி மாநில ங்களைச் சேர்ந்தவர்கள் அதிகள வில் வந்து பிழைப்பு நடத்துகின் றனர். இவர்களில் பெரும்பாலா னோர், தொழில் முதலீட்டுக்காக பைனான்சியர்களின் உதவியை நாடுகின்றனர். அவசரச் சூழ்நிலையில் கடன் பெறுவோர் ஒவ்வொ ருவரும் எப்படியும் திரும்பச் செலுத்திவிடலாம் என்றே நம்பிக் கை கொள்கின்றனர். தொழில் நசிவு ஏற்படும் போது கடனை திருப் பிச் செலுத்த முடியாமல் ஊரை விட்டே ஓடிவிடுகின்றனர் அல்ல
து வாழ்க்கை வெறுத்து தற்கொ லை செய்துகொள்ள துணிகின் றனர். கோவையில் ஆண்டுதோ றும் நடக்கும் தற்கொலை சம்ப வங்களில் 10 சதவீதம் பணப் பிரச்னைகளால் நிகழ்கின்றன. தகுதிக்கு மீறி அதிக வட்டிக்கு கடன் பெறுவது ஆபத்தானது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டா ல் மட்டுமே தப்பிக்க முடியும்.
கோவை நகரில் இதற்குமுன் குறிப்பிட்ட லாட்ஜ்களில் வெளியூர் பைனான்ஸ் கும்பல் முகாமிட்டு, அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வந்தது. இதை பயன்படுத்தி மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களு ம், தொழிலதிபர்களுக்கு கடன் தருவதாக கூறி பணம் பறித்து வந்தனர். தொடர்ச்சியாக லாட்ஜ் களை சோதனையிட்டதன் விளைவாக தற்போது வட்டித் தொழில் செய்யும் வெளி மாவட் டத்தினர் தலைமறைவாகி விட்ட னர். தொழிலதிபர்கள், வியாபாரி கள் தொழில் அபிவிருத்திக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக ளிலோ அல்லது ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவனங்களிலோ கடன் பெறலாம். மற்றபடி, பதிவு செய்யப் படாத பைனான்ஸ் கும்பலிடம் கடன் பெற்றால் கழுத்து க்கு கத்தி வந்து விடும் என்பது மட்டும் உறுதி. இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரி வித்தார்.
– G.JK MEDIA WORKS NEWS TEAM (2011)
Ok