விஸ்வரூபம் படம் மூலம் தான் ஹாலிவுட் வாய்ப்பே கிடைத்தது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுவரை எந்த ஒரு இந்திய நடிகருக்கும், தமிழருக்கும் கிடைக்காத வாய்ப்பு நம்ம உலக நாயகன் கமல்ஹாசனுக்கு கிடைத் து இருக்கிறது. முதன் முறையாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிப்ப தோடு மட்டும் இல்லாமல் அப்படத் தை இயக்கவும் உள்ளார். மேட்ரிக் ஸ், லார்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப் பாளர் பேரி ஆஸ்போன் இப்படத் தை தயாரிக்கி றார். சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா வை முடித்து சென்னை திரும்பிய கமல், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் இதனை தெரி வித்தார்.
இந்நிலையில், ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்தது பற்றி கமல் கூறியு ள்ளதாவது, நானும், பேரி ஆஸ்போனும் சந்தித்தது தற்செயலாகத் தான் நடந்தது. விஸ்வரூபம் படத்தின் சவுண்ட் மிக்ஸிங் கிற்காக சிங்கப்பூரில் நான் இருந்த போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடை த்தது. ஆஸ்போன் என்னை வந்து சந்தித்தார். என்ன செய்கிறீர்கள், என்ன படம் பண்ணுகி றீர்கள் என்று கேட்டார். பிறகு நான் என்னு டைய விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை அவருக்கு காண்பி த்தேன். இன்னொரு முறை பார்க்கலாமா என்று கேட்டார். நானும் சம்மதித்தேன். பிறகு 2வது முறையும் பார்த்துவிட்டு மீண்டும்
தனது பங்குதாரரை அழைத்து வந்து 3வது முறையாகவும் பார் த்தார். பிறகு சிங்கப்பூரில், விஸ் வரூபம் படத்தின் டிரைலரை வெளி யிட்டபோது ஆஸ்போன் முதல் ஆளாக வந்து அமர்ந்து இருந்தார். பிறகு தான் இருவரு ம் சேர்ந்து படம் பண்ணலாம் என்று என்னிடம் கேட்டார். அத ன்படி இருவரும் இணைந்து பணி யாற்ற உள்ளோம். எனக்கு ஹாலிவுட் வாய்ப்பை பெற்று தந்ததே விஸ்வரூபம் படம் தான். நாங்கள் இணையும் இந்தபடம் நிச்சயம் உலக தரத்துடன் உருவா கும். இப்போதே அதற்கான வேலைகளை தொடங்கிவிட் டேன் என் று கூறியுள்ளார்.
news in dianamalar
Ok