Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீண்டும் வலம்வரப்போகும் ராமர்பிள்ளை – வளம்பெறுமா மூலிகை பெட்ரோல் (மாற்று எரிபொருள்)

அஞ்சு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்!

பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாப கத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம். சென்னையில் வசித்தாலு ம் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம் சாபுரத்தில் பிடித்தோம். இன்னும் அதே உற்சா கத்தோடு இருக்கிறார்.

”ஆகஸ்ட் வரைக்கும் காத்திருங்க சார். நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக் கோட்டை நெருங் கிட்டேன்” என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் பேச்சு முழுவதும் அதிரடி சரவெடி.

”நான் சாதாரணக் கிராமத்து மனுஷன். உலகத் தையே வாட்டி வதை க்கிற எரிபொருள் பிரச் னைக்கு என் அறிவுக்கு எட்டுன அளவில் ஒரு பொ ருளைக் கண்டுபிடிச்சு, ‘மூலிகைப் பெட்ரோல் ’னு பேர் வெச்சேன். அப்போ நா டே பரபரப்பாச்சு. நாலு மா நில முதல்வர்களுக்கு மு ன், அதை சோதனை செஞ் சு காட்டினேன். ஆனால் என் வளர்ச்சி பல பேரைப் பயமுறுத்த ஆரம் பிச்சது. ‘நான் ஒரு ஃபிராடு’னு கதை பரப்ப ஆரம்பிச்சாங்க. ‘ராமர் பிள்ளை கண்டுபிடிச்சது பெட்ரோலே இல்லை’னு சொன்னாங்க. சரி, இருக்கட்டும். நான் கண்டுபிடிச்சது பெட்ரோல் இல்லைன்னே வெச்சுக் குவோம். ஆனால், என் கண்டுபிடிப்பை வண்டியில் ஊத்தி னா வண்டி ஓடுதுல்ல… அதனால் வண்டிக்கு எந்த பாதிப்பும் இல்லே ல்ல… அப்புறம் என்ன?

இத்தனைக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் 42 ரூபாய் விற்ற காலத்தில் ஒரு லிட்டர் 13 ரூபாய்க்கு நான் கொடுத்தேன். கொஞ்ச நஞ்சம் இல் லீங்க, 13 லட்சம் லிட்டர் பெட்ரோல் தயாரிச்சு வித்திருக்கேன். அதை க்கூட, ‘பெட்ரோலிய மூலப் பொருட் களைப் பயன்படுத்தி தயாரிச் சுட்டு பொய் சொல்றார்’னு சொன்னாங்க. 42 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி 13 ரூபாய் க்கு விற்க, நான் என்ன லூஸா?

நான் தயாரிச்சு விற்ற 13 லட்சம் லிட்டருக்கும் அரசாங்கத்துக்கு வரி கட்டி இருக்கேன். என்னைத் தப்புன்னு சொல்ற அரசாங்கம், அப்புறம் ஏன் என்கிட்ட வரி வாங்குச்சு. நான் கண்டுபிடிச்ச எரிபொருளுக்கு, ‘மூலிகை பெட்ரோல்’னு பேர் வெச்சதுதான் நான் பண்ண ஒரே தப்பு. இப்போ சொல்றேன், நான் கண்டுபிடிச்சது மூலிகைப் பெட்ரோலே கிடையாது.

அது ஒரு மாற்று எரிபொருள். அதுல என்ன தப்புன்னாலும் சொல்லு ங்க, ஒப்புக்கிறேன். ‘இதைப் போட்டா வண்டி சீக்கிரம் ரிப்பேர் ஆகுது. வழக் கத்தை விட குறைவான மைலேஜ் கிடைக்குது. சுற்றுச் சூழலுக்கு ஆபத் து’ இப்படி எந்தக் குறையையும் என் மாற்று எரிபொருளில் சொல்லவே முடியாது” என்று படபடவெனப் பேசி யவரிடம், ”ஆகஸ்ட் அறிவிப்புப் பற்றி சொல்லுங்களேன்” என்றதும், அடுத் த ஷாக் கொடுத்தார்.

”என் கண்டுபிடிப்பை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டு சேர்க்க ணும்னு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியை சந்திச்சுப் பேசினேன். அவர்கிட்ட என் மாற்று எரிபொருளை சோதனை செஞ்சு காட்டினேன். அதைத்தொட ர்ந்து அண்ணா ஹஜாரே, பாபா ராம்தேவையும் சந்திச்சுப் பேசினேன். இந்த மும்மூர்த்திகளும் என் கண்டுபிடிப்பைப் பார்த்து ஆர்வமாயிட் டாங்க. அதிலும் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர்ஜி, என் கண்டு பிடிப் பைத் தத்து எடுத்துக்கிட்டது போல, எல்லா உதவிகளை யும் செஞ்சார். கிட்டத் தட்ட 1.5 கோடி ரூபாய் செலவில் மாற்று எரிபொருள் தயாரி ப்ப தற்கான இயந்திரம் தயா ராகிடுச்சு.

ஹரித்துவாரில் இருக்கு. சென்னையிலும் இடம் பார் த்தாச்சு. கடைசிக்கட்ட வேலைகள் கொஞ்சம் பாக்கி. அதுவும் முடி ஞ்சதுன்னா, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உற்பத்தி ஆரம்பிச் சுடும். பரபரப்பா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆனா இப்போகூட, ரவிசங்கர்ஜியை சந்திக்கப் போற ஒவ்வொரு தடவையும் அதைத் தடுக்கிறதுக்கு பல பேர் சதி செய்றாங்க. ஒருத்தனை வளரவிடாமக் காலைப் பிடிச்சு இழுத்துவிடுறது ல இத்தனைப் பேர் ஏன் ஆர்வமா இருக்காங்கன்னு புரியலை…” என் ற ராமர் பிள்ளை, அவரது மாற்று எரிபொருள் ஒரு லிட்டர் அஞ்சு ரூ பாய்க்குக் கிடைக்கும் என்று ஆச் சர்யப் படுத்துகி றார்.

”ஆமா சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர் 13 ரூபாய்னு வித்தேன். இப்போ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. நானும் சில விஷ யங்களைக் கத்துக்கிட்டேன். அதனால ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க் குத் தயாரிக்கலாம்.

வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு ரூபாய் வரும். இப்போ ஒரு லிட்டர் 70 ரூபாய். இந் தக் காசுக்கு 14 லிட்டர் மாற் று எரிபொருள் போடலாம். நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நடைமு றைக்கு வரும்போது எல்லா ம் சரியாகிடும். நிச்சயம் என் னை நிரூபிப்பேன். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் திருப்புமுனையான செய்தியாக இது இருக் கும்!” என்று படபடக்கிறார்..

thanks junior vikatan
thanks bala cuddalore (facebook)

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: