Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மறைந்த‌ மூத்த பத்திரிக்கையாளர் "சின்னகுத்தூசி பற்றிய‌ ஆவணப்படமும் உணர்வாளர்களின் உரையும் – வீடியோ

மறைந்த‌ மூத்த பத்திரிக்கையாளர் சின்னகுத்தூசியின் ஆவணப் படத்தின் சில பகுதிகள்…

க‌டந்த (2011) ஆண்டு ஜூன் 1ஆம் தேதியிட்ட‍ நக்கீரன் வார இதழில் அக்ரஹாரத்து பெரியார் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை


க‌டந்த 29-5-2011  ஞாயிறு மாலை சென்னை பெரியார் திடலில் திரா விட இயக்கச் சிந்தனையாளரும் மூத்த பத்திரிகையாளருமான சின் னகுத்தூசி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி  உணர்ச்சி மயமாய் நடந்தது.பெரிய அளவில்  விளம்பரங்கள் செய்யப்படாத நிலையிலு ம்…  “இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு இந்த அளவிற்குக் கூட்டம்  கூடியதில் லை’  என திகைக் கும் அளவிற்கு  அரங்கமும் மாடியும்  நிறைந்து, வெளியிலும் உணர்வாளர்கள் பெரிய அளவிற்குத் திரண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில்  “நக்கீரன்’ தயாரித்த “சின்னகுத்தூசியார் நினைவு மலரை’ திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட, திராவிட இயக்க ஆய்வாளர் “சங்கொலி’ க.திருநாவுக் கரசு பெற்றுக்கொண்டார். சின்ன குத்தூசிக்கு சிகிச்சையளித்த மருத் துவர்கள் சார்பில் பில்ராத் டாக்டர் கண்ணன் மற்றும் நாகேஷ், அவரை மருத்துவமனை யில் அருகில் இருந்து கவனித்துக் கொண்ட பார்த்திபன், கணேசன், சீனிவாசன் போன்றோர் கௌர விக்கப்பட்ட னர். அய்யா சின்ன குத்தூசி குறித்த நினைவுகளை ஆங்காங்கே தொட்டபடி விழாவை, “நக்கீரன்’ மூத்த துணை ஆசிரியர் கோவி. லெனின் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கண்ணீர் கசிய நிகழ்த்தப்பட்ட உணர்வாளர் களின் உரையிலிருந்து….

நினைவு மலரை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்:

ஒரு மகனாக இருந்து தந்தைக்கு ஆற்றவேண்டிய பணிகளை சின்ன குத்தூசி அவர்களுக்கு நக்கீரன்கோபால் அவர்கள் ஆற்றி இருக்கி றார்கள். அந்த வாய்ப்பு எனக்கு மட்டுமல்ல; இங்கு வந்திருக்கிற ஒவ்வொரு வருக்கும் கிடைக்கவில் லையே என்ற ஏக்கம் இருக்கி றது. சின்னகுத்தூசி அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக- சீர்திருத்த க் கருத்துகளைச் சொல்லக்கூடிய- சுயமரியாதை உணர்வோடு நமது கொள்கை களை சுட்டிக்காட்டக் கூடிய ஒரு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந் திருக்கிறார். தலைவர் கலைஞர் ஒருமுறை என் னை அழைத்து, “முரசொலி அறக்கட்டளையின் சார்பிலான கலை ஞர் விருதை இந்தமுறை நம்முடைய பெரு மதிப்பிற்குரிய சின்னகுத் தூசி அவர்களுக்கு வழங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்கள். இதை ஏற்றுக்கொண்டு, சின்னகுத்தூசி அவர்களை நேரிலே சந்தித் து இந்த விருதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தே ன். “இதுவரையில் எந்த விருதையும் பெற்றதில்லை. விருது பெற வேண்டும் என்ற உணர்வும் எனக்கு இருந்ததில்லை. எனவே எனக்கு விருதைத் தந்து தர்மசங்கடத் தை உருவாக்கிவிடக் கூடாது’ என்று என்னிடத்திலே சொன் னார். இதை கலைஞரிடம் சொன்னோம். அவ ர் உடனடியாக முரசொலி அலுவலகத்துக்கு வந்து, சின்னகுத்தூசி யை சந்தித்து, “என் பெயரினால் அமைந்த கலைஞர் விருதை நீங் கள் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார். அப்போதும் சின்னகுத் தூசி மறுத்தார். உடனே கலைஞர், “இல்லை… இல்லை…. நான் உங்களைக் கேட்க வில்லை. உத்தரவு போடுகிறேன். நீங்கள் அந்த விருதைப் பெற்று தான் தீரவேண்டும்’ என்றார். இதன் பிறகுதான், “சரி; நீங்கள் உத்தரவு போட்டதற்குப் பிறகு அதை மீறும் சக்தி எனக் கில்லை. எனவே நான் பெற்றுக் கொள்கிறேன்’ என்று தலைவர் கலைஞரிடம் அவர் சொன்னார். விருதோடு கொடுக்கப்பட்ட பண முடிப்பை திரும்பவும் முரசொலி அறக் கட்டளைக்கே தந்து, “இது பொது நலத்துக்குப் பயன்பட வேண்டும்’ என்று பெருந்தன்மையையு ம் காட்டினார். இதுபோன்ற நிகழ்ச்சி கள் நெஞ்சில் நிழலாடுகிறது. அவர் எதற்கும் ஆசைப்படாமல், எதற்கும் தன்னை அடிமைப் படுத்தி க்கொள்ளாமல் சுயமரியா தைச் சுடரொளியாக வாழ்ந்தவர். அப்படி வாழ்ந்த தன்மானச் சிங்கம் இன்று நம்மிடையே இல்லை.

“நக்கீரன்’ இணையாசிரியர் அ.காமராஜ்:

“நக்கீரன்’ இன்றுவரை வெற்றிகரமாக இயங்குவதற்கும் “நக்கீரனி ல் வரும் கட்டுரைகள் எல்லாம் வெற்றி பெறுவதற்கும் காரணம் சின்னகுத்தூசி சார்தான். 1988-ல் அவரிடம் அறிமுகமான என்னை பட்டை தீட்டி, கூராக்கி, ஓர் அம்புபோல் போர்க் கருவியாக்கிய வரும் சார்தான். அவர் எங்கள் “நக்கீரன்’ குடும்பத்திற்கு அண்ணனா? நண்பனா? ஆசானா? என்னவென்று சொல்ல முடியாத அளவிற்கு அவர் எல்லாமுமாக இருந்தார். அவர் என்னிடம் காமராஜர் பற்றி பேசுவார். பெரியார் பற்றி மணிக் கணக்கில் பேசுவார். அவருடன் மூன்று மணிநேரம் பேசிக்கொண் டிருந்தால் 100 புத்தகங்களைப் படிக்கிற அனுபவம் கிடைக்கும். அவரைப்போன்ற ஓர் அறிவு ஜீவி யை எங்கும் பார்க்க முடியாது. என்மீது அளவு கடந்த அன்பை செலு த்தியவர். மதிய நேரத்தில் நான் களைத்துப்போய் அவர் அறைக்குப் போனால், “நீங்கள் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுங்கள்’ என்பார். நான் தூங்குவேன். அந்தப் பெரிய மனிதர் பக்கத்தில் உட்கார்ந்திருப் பார். அரைமணி நேரம் கழித்து அவரே போய் டீ வாங்கிவந்து, “காம ராஜ் எந்திரிங்க’ என்பார். இப்படி என்மீதும் “நக்கீரன்’ மீதும் அக்கறை யாக இருந்தார். கலைஞரும் அவரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்கு ம் நட்பைக் கொண்டிருந் தனர். கடைசியாக தேர்தல் முடிவுகளுக்கு முன்பு கலைஞர் குத்தூசி சாரைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த போது கண்ணீர் வழிய, சார் அவரை முத்தமிட்டார். கலைஞர் எந்தப் பதட்டமும் இல்லாமல் அதைப் பெற்றுக்கொண்டார். அப்போது கலைஞருக்கு தேர்தல் நிதியாக ஒரு தொகையைக் கவரில் போட்டு சார் கொடுக்க, பதிலுக்கு சாரின் மருத்துவச் செலவுக்காக ஒரு தொ கையைக் கவரில் போட்டு கலைஞர் கொடுத்தார். உன்னத மான இரு மனிதர்களின்  மன ஓட்டத்தை  நான் அங்கே பார்த் தேன். சாரை அவ ர் காதுபட யார் திட்டினாலும் அதை அவர் பொறுத்துக் கொள்வார். ஆனால் கலைஞரை யாராவது விமர்சித்தால் அவர் பொறுத்துக் கொள்ள மாட்டார். அவருக்கு அடங்காத கோபம் வரும். அறை அதிரு ம். அந்த கோபம் ஆக்கபூர்வ மான வாதங்களாக கட்டுரைகளில் வெளிப்படும். ஒரு திருமணவிழாவில் இன்று ஆட்சிபீடத்தில் இருப் பவர், “எந்த சின்னகுத்தூசியாலும் என்னை ஒன்றும் செய்ய முடி யாது’ என்றார் ஆவேசமாக. இதை சாரிடம் நான் சொன்னபோது, “குத் தூசிகள் ஒன்று சேர்ந்தால் மலையையே பிளக்கலாம்’ என்று சிரித்துக்கொண்டே பதில் சொன் னார்.  கடைசி காலத்தில்கூட ஒரு பெரியார் தொண்டனாக சுய மரியாதைக்காரனாகத்தான் அவர் வாழ் ந்தார். அவர் வழியில் என்றும் நான்  சுயமரியாதைக்காரனாக வாழ் வேன்.

ஞானியார் அடிகள் தமிழ்மன்ற அ.நா.பாலகிருஷ்ணன்:

சின்னகுத்தூசி அவர்கள் பிராமணராகப் பிறந்த சூத்திரர். சூத்திரர்களி ன் உயர்வுக்காகவே சிந்தித்தவர். அய்யாவோடு பத்து முறை அவரது ஊரான திருவாரூருக்குப் போயிருக்கிறேன். வி.பி.கே. லாட்ஜில்தா ன் தங்குவார். அங்கு நண்பர்களைத்தான் உறவினர்களாக எண்ணி சந்தித்து உரையாடி மகிழ்வார். அவர் உறவினர்கள் யாரையும் அண் டியது இல்லை. நண்பர்கள்தான் அவருக்கு உறவினர்கள். ஒழுக்கத் திலும் நாணயத்தி லும் சிறந்து விளங்கியவர் சின்ன குத்தூசி. அவர் “அலை ஓசை’ பத்தி ரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரது தந்தை இறந்த செய்தி வருகிறது. உடனே அலைஓசை ஆசி ரியரான வேலூர் நாராயணன் ஒரு காரை ஏற்பாடு செய்து, இறுதி ச்சடங்கு செலவிற்காக 2 ஆயிரம் ரூபாயையும் கொடுத்து அனுப்பி னார். சின்ன குத்தூசி அவர்கள் திருவாரூர் போய் சேருவதற்குள் அவரது நண்பர்களான கோவிந்தராஜன் போன்றோர் தகனம் செய்து விட்டார்கள். உடனே சென்னை திரும்பியவர் வேலூர் நாராயணனி டமே பணத்தை ஒப்படைத்து விட்டார். இப்படி ஒரு மனிதரைப் பார் க்க முடியுமா?.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கோபண்ணா:

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது முதன் முதலாக சின்ன குத்தூசி அய்யாவைச் சந்திக் கும் வாய்ப்பைப் பெற்றேன். அதுவரை திராவிட இயக்கத்தின் மீதான என் பார்வை, இவரது சந்திப்பிற்குப் பின் மாறிவிட்டது. அரசியலில் தெளிவான பார்வையை நான் பெற அவர்தான் காரணம். நடுநிலை என்பதே போலித்தனம் என்று அடி த்துச் சொன்னதோடு, திராவிட இயக்க சார்பு நிலையில் நின்று தனது கருத்துகளை வெளியிட்டார். தனது கருத்து களை மற்றவர் சிந்த னையில் திணிப்பதில் அவர் வல்லவர்; கெட்டிக்காரர். ஆனாலும் தனி மனித வாழ்க்கையில் அப்பழுக் கற்ற பெருவாழ்வு வாழ்ந்தார். திராவிட இயக்கத்தின் மீது தீராப்பற்று கொண்ட அவருக்கு.. தேர்தல் முடிவுகள் பலத்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. உடல் நலிவுற்றிரு ந்த வரின் வில்பவரை அது சிதைத்து விட்டது. தேர்தல் முடிவு வந்த 12-ஆம் நாள் அவரது உயிர் பிரிந்து விட்டது. ஒவ்வொரு பிறந்த நாளு க்கும் திருமண நாளுக்கும் என் மனைவியோடு அவரைப் பார்த்து ஆசி வாங்குவேன். கவரில் பணத்தை வைத்துக் கொடுத்து வாழ்த்து வார். எனது அடுத்த பிறந்த நாளுக்கு நான் யாரிடம் போவேன்?

பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்:

நான்கு தலைமுறை பத்திரிகை யாளர்களுக்கு ஆசானாக- ஆலோ சகராக இருந்து வழிகாட்டியவர் என்றால் அது சின்னகுத்தூசி அவர் கள் மட்டும்தான். 22 வயது இளைஞர்கள் முதல் கலைஞர், நல்ல கண்ணு போன்ற மூத்த தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்க வும், சமநிலையில் எல்லோரை யும் வைத்துக்கொள்ளவும் கூடிய மனநிலை கொண்டவர். முக்கியமானவர்- முக்கியமில்லாதவர் என் ற பேதமெல்லாம் அவரிடம் இல்லை. அவர் அறைக்கு அமைச்சர்க ளும் வருவார்கள்; சாதாரண நிலையில் இருப்பவர்களும் வருவார் கள். இவர்கள் அனைவரையும் சமமாகத்தான் நடத்துவார். பத்திரி கை துறையில் ஒரு ரிஷியாக திகழ்ந்தவர் அவர். ஒரு விஷயத்தை எல்லோருக்கும் புரிகிறவகையில் எளிமையாக எப்படி எழுதுவது என்பதை அவரிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும். எனது கட்டுரை களைப் படித்துவிட்டு… இதை நான்கு வரிகளில் சொல்லக் கூடாது. புரியாமல் போய்விடும். எனவே நான்கு பத்திகளில் எழுதுங்கள் என் று ஆலோசனை சொல்லி எழுத வைத்திருக்கிறார். திராவிட இயக்க த்தின் சொத்து இரண்டுதான். ஒன்று நாக்கு. மற்றொன்று பேனா. இதை வைத்து மட்டும் வளர்ந்தவர் களுக்கு முன்னுதாரணம் சின்ன குத்தூசி அவர்கள்.

சங்கொலி க.திருநாவுக்கரசு:

குத்தூசி பிராமணரே அல்ல. உபநயனம் செய்து பூணூல் போட்டுக் கொள்ளாதவர்கள் பிராமணனே இல்லை என்பார்கள். இந்த வகை யில் அவர் திராவிடர். 16 வயதில் பொது வுடமை இயக்கத்தைச் சே ர்ந்த மணலூர் மணியம்மை யுடன் சேர்ந்து பொதுவு டமை புத்தக ங்களை விற்றவர். பின்னர் பெரியாரால் ஈர்க்கப்பட்டு திராவிட இய க்கக் கொள்கைகளை ஏற்று கடைசி வரை கொள்கைக்காகவே வாழ்ந்தவர். அவர் கட்சிக்காரர் அல்ல; கொள்கைக்காரர். அவருக்கு த் தெரியாத விஷயமே இல்லை. கடைசியாக மருத்துவமனையில் நான் பார்த்தபோது… “ஆரூரானை மறக்கலுமாமே’ என்ற ஈற்றடியை க் கொண்ட தேவாரப் பாடலை தழுதழுப்பாகப் பாடினார். அவர் பாடி ய ஆரூரான்… தியாகராஜசாமி அல்ல; கலைஞர்.

சி.பி.எம்., மாநிலக்குழு உறுப்பினர் ஏ.சௌந்தர்ராஜன்:

அய்யா சின்னகுத்தூசியின் எழுத்துகளை தீவிரமாகத் தேடித்தேடிப் படிக்கிறவன் நான். அவரது கட்டுரைகள் சிந்தனை யைத் தூண்டக் கூடியவை. அவர் எங்கள்  இயக்கத்துக்குச் சாதக மாக எழுதினாலும் விமர்சனமாக எழுதினாலும் அதை கவனமாக நாங்கள் பரிசீலிப் போம். அவர் எந்தக் கொள்கையில் ஆழமான நம்பிக்கை வைத்திரு ந்தாரோ, எந்தக் கொள்கைக்காக வாழ்ந் தாரோ அதற்கு எதிரான கருத்து களைச் சொன்னாலும் அனுமதிக் கிற பண்பு கொண்டவராக இருந் தார். தகுதியானவர்கள் தகுந்த உதவிகள் பெற தன்னால் ஆனவைகளை எல்லாம் செய்தவர். ஈர மனதுக்குச் சொந்தக்காரர். அவரது எழுத் துகளை நாங்கள் ஆவணப் படுத்தியிருக்கிறோம். அவ ர் எங்களைப் பற்றி வைக்கும் விமர்சனங்களை வைத்தே நாங்கள் எங்களை சுயவிமர்சனம் செய்து கொள்கிறோம். படித்தாரைப் பிணிக்கும் தகையவாய் அவரது எழுத்துகள் இருந்தன. எழுத்தாள ராகப் புகழ்பெற்ற பிறகும் அதே எளிமையோடு பண்பு கெடாமல் வாழ்ந்தவர் அவர்.

மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர்:

என் தோழமைத் தந்தை மறைந்து விட்டார். அவரது அறிவாற்றலும் நீண்ட நினைவாற்றலும் வியந்து போற்றக்கூடியது. 92-ல் ஒரு பத்தி ரிகையில் நான் பணியாற்றிய போது, தேர்தல் கூட்டணிகள் குறித்து உடனடியாகக் கட்டுரை எழுதும்படி கேட்டார்கள். தகவல்களை எங் கு தேடுவது என திகைத்த நான், நள்ளிரவு ஒரு மணிக்கு சின்னகுத் தூசி அவர்களின் அறைக் கதவைத் தட்டி னேன். எழுந்து வந்தவரிடம் விவரத்தைச் சொன்னதும்… 52-ஆம் வருடத்தில் எந்தெந்த அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொண்டன என்பது தொடங்கி 92 கூட்டணிவரை அத்தனை விஷயத்தையும் கடகடவெனக் கொட்டி னார். அதை வைத்து கட்டுரையை எழுதிக்கொடுத்தேன். அந்த அலு வலகத்தில் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். ஒருமுறை “நக்கீர’னில் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்து சின்னகுத்தூசி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். அதைக் கண்டு வருத் தம் கொண்ட நான், அந்தக் கட்டுரைக்கு மறுப்பாக ஒரு கட்டுரையை எழுதி சின்னகுத்தூசி அவர்களின் கையி லேயே கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு “நல்லா இருக்கு ஜவஹர்’ என்று பாராட்டியவர் அதோடு நிறுத்தாமல், ‘”என் கட்டுரை பிரசுரமான “நக்கீர’னி லேயே இந்தக் கட்டுரை வருவது தான் சரி’ என்று காமராஜ் மூலம் இதை “நக்கீர’னில் பிரசுரம் பண்ண வைத்தார். தனது கட்டுரைக்கான மறுப் புக் கட்டுரைக்கே பரிந்து ரைத்தவர் அவர். எனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி யவர் சின்னகுத்தூசிதான். கடைசி நாட்களில் அவரை நாங்கள் பார்த்தபோது என் கை களைப் பிடித்துக் கொண்டு ‘கண்ணியமாக சாகின்ற உரிமை குறித் தும், கருணைக் கொலை குறித்தும் ஒரு காலத்தில் நாம் விவாதித்து இருக்கிறோம். அந்த வகையில் என்னை முடித்து விடுங்கள் என்று சொன்னால் டாக்டர்கள் கேட்கமாட்டேன் என்கிறார்கள். நீங்கள்தான் இதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டார்கள். நான் அவரது காலை ப் பிடித்துவிட்டு “முயற்சி செய்கிறேன்’ என எனது மறுப்பை உணர்த் தினேன். நானும் கை விட்டதால் அவரது கண்களில் இருந்து கண்ணீ ர் வழிந்தது. அவருக்கு இந்த விஷயத்தில் யாரும் காட்டாத கரு ணையை இயற்கை காட்டியது. என் தோழமைத் தந்தையே, போய் வாருங்கள்.

ஆசிரியர் நக்கீரன்கோபால்:

அய்யா சின்னகுத்தூசி அவர்கள் நடமாடும் பல்கலைக் கழகம் போன் றவர். அப்பேர்ப்பட்ட வருக்கு சேவை செய்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த “நக்கீரன்’ குடும்பத் திற்கே கிடைத்தது. இது நாங்கள் பெற்ற பேறு. அய்யா அவர்களின் இழப்பு திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல; எங்கள் “நக்கீரன்’ குடும் பத்திற்கும் மிகப் பெரிய இழப்பு. அய்யா இறந்த செய்தி கேட்டு அவரு க்கு அஞ்சலி செலுத்துவதற்காக அண்ணன் ஸ்டாலின் அவர்கள் எங்கள் “நக்கீரன்’ அலுவலகத்துக்கு வந்தபோது, “எப்போது எடுக்கி றீர்கள்’ என்று கேட்டார்கள். எடுக்கிற நேரத்தில் கடைசியாக ஒரு முறை அஞ்சலி செய்ய நினைக்கிறார் என்று நினைத்து, “மாலை நாலேமுக்கா லுக்கு எடுக்கலாம் என்று இருக்கி றோம்’ என்றேன். ஸ்டாலினோ நாலேகாலுக்கே வந்துவிட்டார். வந்தவர் “நானும் இடுகாட்டிற்கு வருகிறேன்’ என்றார். “சரி; நீங்கள் முதலில் காரில் இடுகாட்டிற்குப் போயிடுங்கள். நாங்கள் அய்யாவை எடுத்துக் கொண்டு வருகிறோம்’ என்றேன். ஆனால் ஸ்டாலினோ தானும் நடந்து வருவதாகச் சொன்னார். “நக்கீரன்’ அலுவலகத்தில் இருந்து நான்கரை கிலோமீட்டர் தூரமுள்ள மயானத்திற்கு அவர் நடந்தே வந்தார். வழிநெடுக இருபுறமும் நின்ற மக்கள்.. “ஸ்டாலினே நடந்து வர்றார்னா அந்த அளவுக்கு பெரிய ஆளாத்தான் இருப் பார்’ என்று, அய்யா அவர்களை நோக்கி கைகூப்பினார் கள். ஓர் எழுத்தாளரு க்கு- மூத்த பத்திரிகையாளருக்கு மிகப்பெரிய கௌரவத்தைத் தந்தி ருக்கிறார் ஸ்டாலின்.

அய்யா சின்னகுத்தூசி அவர்கள்  அப்பா ஸ்தானத்தில் இருந்து “நக்கீர ‘னை வழி நடத்தியவர். வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது அவரை மீட்டுவர என்னைத் தேடினார்கள். இது சரிப்படாது என்று  நான் அய்யா அறையில் போய் பதுங்கிக் கொண்டேன். அப்போது அங்கு வந்த ஒரு பெரிய காவல்துறை அதிகாரி, “நீங்கள் போகாமல் இருப்பதுதான் உங்களுக்கு சேஃப்ட்டி’ என்றார். நானும் அதே முடிவி ல் இருந்தேன். ஆனால் அய்யா அவர்கள், “நீங்கள் போய் தான் மீட்டு வரவேண்டும்’ என்றார். பதில் பேசாமல் கிளம்பி விட் டேன். அன்று மட்டும் நான் போகவில்லை என்று அறிவித்தி ருந்தால் கர்நாடகாவி ல் வாழும் ஒரு லட்சம் தமிழர்கள் அங்கே கொல்லப்பட் டிருப்பார்கள் என்று தெரிவித்தனர். இப்படி அய்யா அவர்கள் எங்களை சரியாக வழிநடத்தினார். அவரது இழப்பு ஒருவகையில் தேசத்திற்கே இழப்பு.

அய்யா அவர்கள் மறைந்த பிறகு அவரது அறையில் 36 ஆயிரம் ரூ பாய் இருப் பதைப் பார்த்தோம். அதோடு கலைஞர் அவர்கள் கடைசி யாகக் கொடுத்த 50 ஆயிரமும் இருந்தது. இதை ஒரு லட்சமாக ஆக் கி.. அய்யா அவர்கள் பெயரில் ஓர் அறக்கட்டளையை நாங்கள் தொ டங்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதோடு அவர்கள் அறையில் சேமி த்து வைத்திருந்த ஏறத்தாழ 4 ஆயிரம் அரிய புத்தகங்களை அறிவா லயத்தில் இருக்கும் கலைஞர் நூலகத்திற்குக் கொடுக்கவும் முடி வெடுத்திருக்கிறோம். எங்கள் பதிப்பகத்தில் அய்யா அவர்கள் எழுதி ய பல நூல்கள் வந்திருக்கின்றன. அவற்றையெல் லாம் இளம் தலை முறையினர் பயன்படுத்திக்கொள்ளும்வகையில் நாட்டுடமையாக் குகிறோம். இவற்றை யார் வேண்டு மானாலும் எப்போது வேண்டு மானாலும் பிரசுரித்துக்கொள்ளலாம். அய்யா அவர்களது இழப்பால் எங்களுக்கு ஏற்பட் டிருக்கும் வெற்றிடத்தை யாராலும் நிரப்பவே முடியாது.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்:

திராவிட இயக்கத்துக்கு மிகப் பெரிய இழப்பு தேர்தல் முடி வல்ல; அந்த இழப்பை ஐந்து ஆண்டுகளில் சரிசெய்துவிடலாம். ஆனால் திராவிட இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு அய்யா சின்னகுத்தூசி அவர்களின் இழப்புதான். திராவிட இயக்கத் திற்கே கொடையாக இருந்தவர். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் வரவேற்புரையும் இல்லை; நன்றி யுரையும் இல்லை. எல்லோரும் நாம்தான் என்ப தால் நமக்கு நாமே ஏன் வரவேற்புரையும் நன்றியுரையும் சொல்லி க்கொள்ள வேண்டும் என்றுதான் விடப்பட்டிருக்கிறது. தந்தைபோல் பாவித்து நக்கீரன் கோபால், அய்யா அவர்களுக்குச் செய்திருக்கும் கடமையை இந்த சமூகத்திற்குச் செய்த கடமையாகத்தான் பார்க்கி றேன். சின்ன குத்தூசியின் வலிமை அவரது தன்னல மறுப்பு. இந்த சமூகத்தில் சாதியை மறுப்பார் எவருமில்லை; ஆனால் ஆழமாய்- அழுத்தமாய் சொல்லமுடியும் சாதியை மறுத்து வாழ்ந்தவர் சின்ன குத்தூசி. பார்ப் பனராகப் பிறந்தவர், பார்ப்பன எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். பெரியாரின் பெருமையைப் பேசுவதிலேயே சுயத்தை மற ந்தவர். ஆண்டுக்கொரு தடவை புதுச்சட்டை வாங்கி அணிந்து கொ ள்வார். அது அவரது பிறந்த நாளன்று அல்ல; அய்யா பெரியாரின் பிறந்த நாள் அன்று. கடைசிவரை திராவிட இயக்கச் சிந்தனையாள ராகவும், படைப்பாளராகவுமே வாழ்ந்தார். உங்களையெல்லாம் பார் க்கும்போது, அவர் மறைந்த தாக நான் கருதவில்லை. அவர் வாழ் கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவள வன்:

பார்த்திருக்கிறேன்; பழகியதில்லை. நேசித்திருக்கிறேன்; நெருங்கி யதில்லை. அய்யா சின்ன குத்தூசியை திராவிட இயக்கத்தின் போரா ளியாகத்தான் நான் பார்க்கிறேன். தமிழகத்தில் பெரியாரின் இயக்க த்தை அழிக்க வேண்டும் என்கிற முயற்சி நடக்கிறபோதெல்லாம், அதை முறியடிக்க வாளேந்தும் போராளியாகத்தான் இருந்திருக் கிறார் சின்னகுத்தூசி. குத்தூசி என்றால் எதிரிகளை குத்திக் கிழிப்ப தல்ல; சொரணையற்ற வர்களை குத்தி சொரணையுள்ளவர்களாக விழிப் புணர்வு பெறவைப்பது. அந்தப் பணியை மிகச்சிறப்பாக செய் தார் சின்னகுத்தூசி. சுருங்கச் சொல்வ தானால் சின்னகுத்தூசி அக்ர ஹாரத்து பெரியார்.  அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொட்டுத் தொடர்வோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

சின்னகுத்தூசி அவர்கள் முதுபெரும் திராவிட இயக்கச்சிந்தனையா ளர். அவருக்கு குடும்பம் இல்லை என்று சிலர் சொல்லலாம். மிகப் பெரிய சுயமரியாதை குடும்பம் அவருக்கு இங்கே இருக்கிறது. மிகப் பெரிய பத்திரிகையாளர் கூட்டம் அவருக்கு குடும்ப உறவாக இருக் கிறது. பகுத்தறிவுக் கொள்கையில் ஊறித்திளைத்தவர்கள் எல்லோ ரும் அவருக்கு குடும்ப உறவினர்களாக இருக்கிறார்கள். அவர் தனி மனிதரல்ல; இயக்கம். அவரது இழப்பு திராவிட இயக்கத் திற்கும் திராவிட இனத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். முரசொலி அறக் கட்டளையில் எனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி யைக் கொண்டு, ஓர் அறக்கட்டளையை உருவாக்கி, பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கு அய்யா சின்ன குத்தூசி அவர்கள் பெய ரால் விருதுகள் வழங்கப்படும்.

சின்னகுத்தூசி அவர்கள் மறைய வில்லை; நம்மோடு வாழ்கிறார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: