Monday, June 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டெபாசிட் வாங்கிய தேமுதிக : பீதியில் அதிமுக அமைச்சர்கள்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தேர்தல் பொறுப்பி ல் இருந்த அமைச்சர்கள் மற்றும் நிர் வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
 
பிரச்சாரத்திலும் அதிமு கவை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசி ட் இழக்க வேண்டும் என்று வலியுறுத் தி பேசினார். ஆனால் 18வது சுற்று முடிவில் அதிமுக 82187 வாக்குகள் பெற்றது. தே.மு. தி.க 24759 வாக்குகள் பெற்றது. 57428 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தாலும், தேமுதி க தனது டெபாசி ட்டை பெற்றுவிட்டது.
 
இதனால் தேமுதிகவினர் உற்சா கம் அடைந்தனர். வெடி வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி யதுடன், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த னர்.
 
தேமுதிக டெபாசிட் வாங்கியதால், அ.தி.மு.க. அமைச்சர்கள் கட்சி பொதுச்செயலாளரை நேரில் சந்திக்க நடுங்குகின்றனர். புதுக்கோட் டையில் தங்கியுள்ள அமைச்சர்களும்,அதிமுக நிர்வாகிகளும் பீதியில் உள்ளனர்.
vizhiye pesu

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: