விளையாட்டு வீராங்கனை பிங்கி ஆணா??பெண்ணா? அவர் தன்னை கற்பழித்ததாக மற்றொரு பெண் கூறி உள்ளார்.
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிரமானிக் உண்மையில் பெண்ணா அல்லது ஆணா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத் கார புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து பிங்கி கைது செய்யப்பட் டுள்ளார்.
கடந்த 1986ல் மேற்குவங்கத்தில் உள்ள புருலியாவில் பிறந்தவர் பிங்கி பிரமானிக். சிறந்த தடகள வீராங்கனையான இவர், 2006ல் நடந்த ஆசிய விளையாட்டின் 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். பின் 2006ல் மெல்போர்னில் நடந்த காமன் வெ ல்த் 4*400 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்றார். தொடர்ந்து இதே ஆண்டு கொழும்புவில் நடந்த தெற்காசிய விளையாட்டில் 3 தங்க ம் (400 மீ., 800 மீ., 4*400) கைப்பற்றினார். 2010ல் கார் விபத்தில் சிக்கி காயமடைந்த இவர், தடகள போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்தினார்.
கொலை மிரட்டல்:
இந்தச் சூழலில் பர்கனாஸ் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் பகுயிட்டி போலீஸ் ஸ்டேஷனில் பிங்கி மீது பாலியல் பலாத்கார புகார் ஒன்றை கொடுத்தார். அதில்,””பெண் வீராங்கனை என்று சொ ல்லும் பிங்கி உண்மையில் ஒரு ஆண். நாங்கள் கணவன் மனைவி போல பல மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார். பின் மறுத்து விட்டார். என் னிடம் இருந்த பணத்தையும் பறித்துச் சென்று விட்டார். என்னை கொடுமைப்படுத்திய அவர், கொலை செய்வதாக மிரட்டினார் ,என, குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண் தான்:
இந்தப்புகாரின் அடிப்படையில் பிங்கியை நேற்று போலீசார் கைது செய்தனர். அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் மேற் கொண்ட பாலின சோதனையில் பிங்கி ஒரு ஆண் என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,””அரசு மருத்துவமனையில் பிங்கிக்கு சோதனை மேற்கொள்ள இருக்கிறோம். இதன் அறிக்கை கிடைத்த பின் அவ ரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்,என்றார்.
பதக்கம் பறிக்கப்படுமா:
பிங்கி நிஜத்தில் ஒரு ஆண் என்று நிரூபிக்கப்பட்டால், அவர் பெற்ற பதக்கங்கள் பறிக்கப்படும் என இந்திய தடகள சங்கம் எச்சரித்துள் ளது.
இப்பிரச்னை குறித்து மேற்கு வங்க தடகள சங்கத்தின் மூத்த அதிகாரி தேபாசிஷ் பானர்ஜி கூறுகையில்,””பிங்கியிடம் ஆண் “ஹார்மோன் அளவு வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. ஆனா லும் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற் றார். அதற்குப் பின் சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்கவில் லை. திருத்தப்பட்ட விதிமுறையின்படி ஆண் “ஹார்மோன் அதிக மாக உள்ளது என்பதற்காக போட்டிகளில் பங்கேற்க வீராங்கனை களுக்கு தடை விதிக்க முடியாது என்றார்.
பையில் துப்பாக்கி
பிங்கி ஏற்கனவே துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக 2004ல் கைது செய்யப்பட்டார். நாடியா மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத் தில் உள்ளூர் இளைஞர்கள் சிலர், இவரது கையில் இருந்த பையை பறித்துச் சென்றனர். அதில் துப்பாக்கி இருந்ததாக போலீசாரிடம் புகார் செய்ய, பிங்கி ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டார். இது குறித்து நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட இளைஞ ர்கள் பிங்கிக்கு தொல்லை கொடுத்ததோடு, வேண்டுமென்றே அவ ரது பையில் துப்பாக்கியை வைத்ததை சாட்சிகள் உறுதி செய்த னர். இதையடுத்து அப்போது பிங்கி விடுவிக்கப்பட்டார்.
மிகப் பெரும் சதி
பிங்கி மீது புகார் கொடுத்துள்ள பெண் ஏற்கனவே விவாகரத்து பெற் றவர். ஒரு குழந்தையும் உண்டு. இவரது குற்றச்சாட்டை நிராகரி த்த பிங்கி, அரசு மருத்துவமனையில் பாலின சோதனை செய்து கொள்ள மறுத்து வருகிறார். தற்போது கிழக்கு ரயில்வேயில் டிக் கெட் பரிசோதகராக பணியாற்றி வரும் இவர் கூறுகையில்,””பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். அப்போது நடந்த சோ தøயில் எனது பாலினம் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவி ல்லை. தற்போது எனக்கு எதிராக மிகப் பெரும் சதி நடக்கிறது, என்றார்.
Video By Ramani
News By Dinamalar