Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் . . . ! – பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

1970 ஆம் ஆண்டில் வியட்நாம் வீடு என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற‍ உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டு தடி . . என்ற பாடலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவ ர்களும், நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களும் வாயசை த்து நடித்திருக்கின்றனர்.

இந்த பாடலின் முதல் நான்கு வரிகளை பாரதியாரின் பாடலி ல் எடுத்துக் கொண்டும், மீதமு ள்ள‍ அத்த‍னை வரிகளும் கவி யரசு கண்ண‍தாசன் அவர்களா ல் மேருகேற்ற‍ப்பட்ட‍ வரி களால் ஆனது இந்த பாடல் ஆகும்.

இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ப்ரெ ஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்திரு ப்பார். மேலும் இந்த பாடலில் வரும் வரிகளுக்கேற்ப சிவாஜியின் முக பாவனையும் நடிப்பும் பார்க்கும் போது பாராட்ட‍ வார்த்தைகளே இல்லை எனலாம்.

மேலும் இந்த பாடலுக்கு சிவாஜி அவர்கள் வாயசைத்து நடித்த‍ போது, அவர் அருகிலேயே இருந்துகொண்டு, சிவாஜி வாயசைத்து நடிக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும், பாடலை பாடாமல் நடிகை பத் மினி அவர்கள் மிகுந்த முக பாவனையுடன் நடித்திருப்பது பாராட் ட‍த்தக்க‍தே!

அந்த அற்புத பாடல், வரிகளா உங்களுக்காக

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொண்ணை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆல‌ம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ
என்னை பேதைமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் . . .

– விதை2விருட்சம்
விதை2விருட்சம்
விதை2விருட்சம்

One Comment

 • “கண்ணதாசன் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
  .”நான் பழந்தமிழ் பாடல்களைத் திருடுவதாகப் பலர் கூறுகிறார்கள்..ஆம்,,பழந்தமிழ்ப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கிறேன்
  என்பதில் எனக்கு வெட்கம் இல்லை ,பெருமைப்படுகிறேன் .”
  நமக்கும் தமிழ் தெரியும் .ஆனால் கவியரசைப் போல் உணர்ந்து நாம் அன்றாடம் பயன் படுத்தும் சொற்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதில் கண்ணதாசன், கண்ணதாசன்தான்.
  உன் கண்ணில் நீர் வழிந்தால் ,பாரதியின் பாடலின் முழுவீச்சை உணர வைத்தவர் கண்ணதாசன்…
  மாறாப் புண்ணிற்கும் காலம்தான் மாற்றும் மருந்து என்பர்.
  காலச் சுமை தாங்கி என்று தொடங்கி ,காலம் முழுதும் கண்ணீரைத் துடைப்பவள் என்கிறார்..
  மார்பில் தாங்கி விழும் கண்ணீரை கீழே விழாமல் துடைப்பவள் -இதை விட கணவன் மனைவியின் ஒருமித்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது ?
  “ஆலம் விழுதுகள் “-ஆலம் விழுதுகள் ஓரளவு மரத்தைத் தாங்கினாலும் , அவை மரமாகி மேலும் பல விழுதுகள் விட்டு முன் செல்லும்..
  தாய் மரத்தைத் தாங்கும் திறன் குறையும் .
  அதே போல்தான் மக்களும்..
  அவர்களும் என்ன முயன்றாலும் , அவர்கள் வளர்கையில் அவர்களின் குடும்பத்தைப் பேணும் சுமை வந்து விடுகிறது .
  அவர்களையும் குறை கூற இயலாது.
  இதை நம் கவிஞர் வெளிப்படுத்திய அழகு !
  இறுதில் சொல்கிறார் -’என் தேவையை யாரறிவரர்….தெய்வம் ஒன்றே அறியும் ‘
  சாதாரணக் கவிஞர்கள் ,உன்னைப்போல் தெய்வம் ஒன்றே என்பதற்குப் பதிலாக வேறு வார்த்தையைப் போட்டு இருப்பார்கள் சந்தத்திற்காக!
  கண்ணதாசன் இந்த வார்த்தையினால் மனைவியை தெய்வத்திற்கும் மேல் ஒரு படி உயர்த்தி விடுகிறார் .
  கடவுள் அருள் பெற்ற்வவரராலேதான் இது முடியும்!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: