Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி

கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. சிறிலங்காவில் வாழும் தமிழர்கள், “கெட்ட குடிக்கு ஒரு கேட்டை” என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பம் கெடப் போ கிறது என்றால் அக்குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழ ந்தை பிறக்கும் என்று கூறி வந்த னர்.இதேபோல், ‘கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும்’ என்ற பழமொழியில் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தது. கேட்டை நட்சத்திரத்திற்கு உரியவர் புதன். ராசி விருச்சிகம்.
உதாரணமாக கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த ஜாதகர் கோட்டை கட்டி ஆள்வார். புதனுக்கு வெகு அருகில் இருக்கக் கூடியது சூரியன். எனவே, சூரியனும், புதனும் வலுவாக அமர்ந்திருந்தால் அந்த ஜாத கர் நிச்சயம் கோட்டை கட்டி ஆள்வார்.
எனது அனுபவத்தில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஐ.ஏ.எஸ். அதி காரிகள் ஏராளமானோரை பார்த்திருக் கிறேன். அரசாணை பிறப்பித்தல், நலத் திட்டங்கள் அறிவித்தல் என அரசை ஆளும் நபர்களாக அவர்கள் இருக்கி றார்கள்.
பொதுவாக கேட்டை நட்சத்திரக்காரர் கள் இளகிய மனதும், நன்றாகப் பழகும் குணமும் உடையவர்களாக இருப்பதா ல் அடுத்தவர்களின் மனக்கோட்டையையும் இவர்கள் ஆள்வார்கள்.
எதையும் ஆட்சி செய்யும் தன் மையைப் பெற்றிருந்தாலும், கொடுங் கோல் ஆட்சி செய்ய இவர்கள் விரும்பமாட்டார்கள் . உபசரிக்கும் குணம், சரித்துப் பேசும் குணம் இவர்களுக்கு இருப்பதால் எப்போதும் அவர் களைச் சுற்று ஒரு நட்பு வட்ட ம் இருந்து கொண்டே இருக்கு ம்.
எனவே, கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த ஜாதகருக்கு புதன் நீச்சம் பெறா மல், பகை வீட்டில் அமராமல், பகைக் கோளுடன் சேராமல், 6/8க்கு உரியவனுட ன் சேராமல், நல்ல ஆதிபத்யம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்தி ருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டையைப் பிடிப்பார்/ ஆள் வார்.
– ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்
***

கேட்டை நட்சத்திர தோஷ வழிபாடு

தெய்வம் விஷ்ணு. கேட்டை நட்சத்திரத்தின் முழு நாழிகை 62 என் கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி. அவர் மேலும் கூறியதாவது:-
 
விஷ்ணு வழிபாடு :
 
இந்துக் கடவுளர்களில் மும்மூர்த்தி கள் என்று அழைக்கப்படுபவர்க ளுள் விஷ்ணுவும் ஒருவர். சிவனும், பிரம் மாவும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்ற து.
 
விஷ்ணு சங்க காலத்திலிருந்தே தமிழில் திருமால் என்றும் அழை க்கப்படுகிறார்.இந்து சமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தி னர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
 
விஷ்ணுவின் அவதாரங்கள் :
 
உலகில் அதர்மம் தலை யெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவத ரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு இவருடைய பத்து அவதாரங்களாக (தசாவதாரம்) கூற ப்படுபவை பின்வருவன, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமனர், பரசு ராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி, வட இந்தியர் சிலர் பல ராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவரா க கருதுகின்றனர். பாகவதபுராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகி றது.
 
புதன் வழிபாடு :
 
கேட்டை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் புதன். புதன் விரதத்தினை மேற்கொள்ளுபவர்களுக்கு கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகுமென்பதால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவ ரும் அனுஷ்டி க்கலாம். புதன் கிழமையன்று நாராயண னை வழிபட்டு பின்னர் நவக்கிரகங்க ளை வணங்கி புத பகவான் முன்
 
மதனநூல் முதல் நான்கு மறைபுகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்பசு பாக்கியம் சுகம்வபல கொடுக்க வல்லான்
புதன் கவிபுலவன் சீர்மமால் பொன்னடி போற்றி போற்றி!
 
என்று தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புகளும் பொருந்தி வரும். நவக்கிரகங்களில் நான்காவதான இடத்தில் இருக்கும் இது வரை பச்சை நிற ஆடையை உடுத்தி வண ங்க வேண்டும்.
 
தீய குணங்களினால் உண் டான பீடைகளை நீக்கும் சக்தி புதன் தேவனுக்கு உண்டு. ஆகையால் கூட இவ னை கிரக பீட காரகன் என்றும் கிரகபதி என்றும் கூறுவர். மது ரை திருக்கடைïர் திருவெண்காடு ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் புதன் அருள் கிடைக்கும்.
 
சந்திரன் ஆதிக்கம் கொண்ட ராசியில் உள்ள புதன் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மீனாட்சி யம்மனை வழி பட்டால் மிகசிறப்பான பலன்களை அடைய முடியும்.
 
ஆடை வகைகளில் பச்சை நிற ஆடை அணிவ தாலும் ரத்தினங்களி ல் மரகத கல் அணிவதாலும் பித்தளை பொருட்களை உபயோகப்படு த்து வதாலும் உணவு வகைக ளில் உவர்ப்பு சுவைகளை விரு ம்பி உண்ணுவதாலும் மாது ளை பேரிச்சை, திராட்சை, மு ந்திரி, கேப்பை கூழ் செய்து சாப் பிடுவதாலும் பாசிப்பயறு வகை களை உண்பதாலும் புதனின் ஆதிக்கம் பெறலாம்.
 
வாயு கிரகத்தை வழிபாடு செய் வதாலும் நாயுருவி சமித்துகளா ல் பூஜை செய்வதாலும் மூங்கில் மரத்துக்கு நீர் ஊற்றுவதாலும் பச் சை கற்பூரம் தூபம் போடுவதாலும் புதனின் அருள்பெறலாம். புதன் ஆதிக் கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி வடக்கு வட கிழக்கு திசைகளில் வசிக்கலாம். வீடுகள் கட்டலாம்.
 
மேலும் தொழில் அதிக பணம் ஈட்ட நினைப்பவர்கள் விந்திய மலை முதல் கங்கா நதி தீரம் வரை உள்ள பிரதேசங்களில் வசிக்கலாம். புதன் தோஷம் நீங்க வங்யங்நசிமசி என்று மந்திரம் ஜெபித்தால் புதன் தோஷம் நீங்கும். காக்கும் கடவுளின் திருவரு ளை நமக்கெல்லாம் வழங்கும் ஆற் றல் படைத்த புதனை இதயத்தில் இரு த்தி வழி படுவோம்.
 
வரதராஜப்பெருமாள் கோவில் :
 
ராமானுஜர் அவரது குரு பெரிய நம்பி கள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். ராமானுஜர் புகழ் பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவ ரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினரு க்கு ராமானுஜரை அடையாள ம் தெரியாது.
 
வரதராஜப்பெருமாள் கோவில்

எனவே, சீடர் கூரத்தாழ் வார். ராமானுஜர் போல வெண்ணி ற ஆடை அணிந்து, சோழ படையின ரிடம் நானே ராமானுஜர் என்று சொல்லி அவர்களு டன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்ற னர். பெரியநம்பியிடமும், கூர த்தாழ்வாரிடமும், தன து மதமே உயர்ந்தது என எழுதித் தரும்படி மன்னன் சொன்னா ன்.
 
அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறி னான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந் தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள்.
 
இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105 தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப் போது அருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்தி லேயே மோட்சம் கொடுத்தா ர். இவர் வரதராஜ பெருமாள் எனப்படுகிறார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கி றாள்.
 
பெரிய நம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித் தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும். மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர் தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
 
இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம் வடை நைவேத்தியம் செய் கின்றனர். மருதாணி இலை, கரி சலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்ந்த எண்ணையில் தீப மேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை.
 
இந்த எண்ணை கோயிலிலேயே கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத் துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப் பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழவாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
 
இருப்பிடம் :
 
தஞ்சாவூரில் இருந்த கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பசுபதிகோவில் பஸ் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது  என்கிறார் விஜய்சுவாமிஜி.

One Comment

Leave a Reply