Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவாஜி கணேசனை அறிமுகம் செய்த காகா ராதாகிருஷ்ணன்" – – – – – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதா கிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச் சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்ப த்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3-30 மணிக்கு மரணம் அடைந்தார்.

காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப் படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந் து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என். எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண் ட காலம் நடித் தார்.

மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித் திருந்தார். அதில் இருந்து அவர் `காகா ராதாகிருஷ்ணன்’ என்று அழைக்கப்பட்டார்.

துவரை 600-க்கும் மேற்பட்ட படங்க ளில் நடித்துள்ளார்.

சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுட ன் நடித்த குணா, தேவர் மகன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத் தேடி, விஜய்யுடன் நடித்த காத லுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

மாயி படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை.

அவரது சொந்த ஊர் திண்டுக்கல். ஆனால் திருச்சி சங்கிலியாண்ட புரத்தில்தான் வளர்ந்தார்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும் , 4 மகள்களும் உள்ளனர். 2-வது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக் கிறார்கள். 16 பேரன் பேத்திகள் உள்ள னர்.

 

அவர் நடித்த‍ குறிப்பிடத்தக்க‍ திரைப்படங்கள்
1949 நல்லதம்பி
1951 வண்ணசுந்தரி
1954 மனோகரா வசந்தன்
1991 குணா
1992 தேவர் மகன்
1997 இருவர், காதலுக்கு மரியாதை
1998 உதவிக்கு வரலாமா
1999 உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, ஹலோ , ரோஜா வனம்
2001 விண்ணுக்கும் மண்ணுக்கும், மனதை திருடிவிட்டாய்
2004 மானஸ்தன், வசூல் ராஜா MBBS
2006 இதய திருடன்
2010 என் உயிரும் மேலான

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: