புதன் கிரகம் தனது பாதையில் தலை தெறிக்க ஓடுகிறது. அதன் வேகம் சராசரியாக மணிக்கு ஒரு லட்சத்து 72ஆயிரம் கிலோ மீட்டர். எல்லா கிரகங்களும் சூரியனைத் தங்களுக்குரிய பாதையில் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொ ரு வேகத்தில் சூரியனைச் சுற்று கிறது. புதன் கிரகம் சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றுகி றது என்ற கணக்கு தான் மேலே அளிக்க ப்பட்டுள்ளது. இது சுற்று ப்பாதை வேகம் (Orbital Velocity) எனப்படு கிறது. புதன் கிரகத்துடன் ஒப்பிட்டா ல் வியாழன் கிரகம் தனது சுற்றுப் பாதையில் மணிக் கு 47 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. புதன் கிரகம் மிகச் சிறியது. அத்துடன் ஒப்பிட்டால் வியாழன் வடிவில் மிகப்
பெரியது. குண்டு மனித னால் வேகமாக ஓட முடியாது. சின்னப் பையன் வேகமாக ஓடக் கூடியவன் என்பதுபோ ல உருவத்தில் மிகப் பெரியதான வியாழனி ன் வேகம் குறைவாகவு ம் வடிவில் மிகச் சிறிய து என்பதால் புதன் கிரக ம் குடுகுடு என வேகமா கச் செல்வதாகவும் நீங்கள் கருதலாம். ஆனால் அது அப்படி அல்ல. ஒரு கிரகத்தின் சுற் றுப்பாதை வேகத்துக்கும் அதன் அளவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.ஒரு கிரகம் சூரியனிலிருந்து எந்த அளவுக்குத் தொலை
வில் உள்ள தோ அந்த அளவுக்கு அதன்வேகம் குறைவாக இருக்கும். இது பிரபல வானவியல் விஞ்ஞானி கெப்ளர் (1571 -1630) கண்டுபிடித் துக் கூறிய விதி. இதையே மாற்றிச் சொல்வ தானால் ஒரு கிரகம் எந்த அளவுக் குச் சூரியனுக்கு அருகாமையில் உள்ளதோ அந்த அளவுக்கு அதன் வேகம் அதிகமாக இருக்கும். ஆக வே தான் புதன் தலைதெறிக்க ஓடு கிறது.
சிறுவர் சிறுமியர் ஓடிப் பிடித்து விளையாடும்போது பிடிக்கின்றவ ருக்கு அருகே உள்ளவர்கள் வே கமாக ஓடித் தப்பிக்க முயல்வர். ஆ னால் சற்றே தொலைவில் இரு ப்பர்களும் ஓடுவர். ஆனால் மெது வாக ஓடுவர். கிரகங்களின் கதை யும் இப்படித்தான். சூரியனின் ஈர்ப் புப் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டுமானால் புதன் அதிக வேகத்தில் செல்ல வேண்டியிருக்கி றது.புதன் கிரகம் சூரியனை நீள் வட்ட ப்பாதையில் சுற்றி வருகி றது. ஆகவே ஒருசமயம் புதன் கிரகம் சூரியனிலிருந்து 45 மில் லியன் கிலோ மீட்டர் தொலை வில் உள்ளது. அதாவது அருகா மையில் உள்ளது. இன் னொரு சமயம் 67 மில்லியன் கிலோ மீட்டரில் உள்ளது. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமை யில் இருக்கும் போது புதனின் வேகம் ஒரு லட்சத்து 87 ஆயி ரம் கிலோ மீட்டர். சூரிய மண்ட லத்தில் அதி வேகத்தில் செல் கிற கிரகம் என்ற பெருமை புதனுக்கு உண்டு. புதனின் சுற்றுப்பா தை இப்படி அமைந்துள்ள காரணத்தால் புதன் கிரகத்தின் வானில் சூரியன் ஒருசமயம் பெரு த்த வடிவில் இருக்கும், வேறுசமயம் அது ’இளைத்துக்’ காணப்படு ம்.கோயில் வாசலில் சொக்கப்பனை கொளுத்தும்போது அருகில்
செல்ல முய ன்றால் கடும் அனல் தாக்கும். அது மாதிரி புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமை யில் இருப்பதால் புதன் கிரகத்தில் வெயி லின் கடுமை சொல்லி முடியாது. பகலில் வெப்பம் 427 டிகிரி செல்சிய ஸை எட்டும். நமக்குக் கோடைக் காலமாக இருக்கும் போது வானில் 11 சூரியன்கள் இருந்தால் எப்படி இருக்கும்! அந்த மாதிரி புதன் கிரக த்தில் வெயில் உள்ளது. புதன் கிரகத்தில் இரவில் குளிர் மைனஸ் 180 டிகிரி அளவுக்கு இருக் கும். இதில் இன்னும் மோசம் என்னவெ ன்றால் புதனில் பகல் என் பது 88 நாள்கள். இரவு என்பதும் 88 நாள் கள். புதன் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்வதே இதற் குக் கார ணம்.
சுற்றுப்பாதை வேகம் அதிகம் என்பதாலும் அச்சில் சுழலும் வேகம் மிகக் குறைவு என்பதாலும் புதனில் குறிப்பிட்ட சில இடங்களில் சூரியன் உதயமாகிய பிறகு அதே கிழக்கு திசையில் அஸ்தமனமாகும். பிறகு மறுபடி உதிக்கும். சூரிய மண்டலத்தில் இப்படி ஒரே நாளில் இரண்டு தடவை சூரியன் உதிக்கிற அதிசயத் தை புதன் கிரகத்தில் மட்டு மே காண முடியும். விஞ்ஞா னிகள் ஆளில்லா விண் கலங்களை அனுப் பி பல்வேறு கிரகங்க ளையும் ஆராய்ந்துள்ளனர். மனிதன் என்றாவ து குடியேற வாய்ப்பு ள்ள கிரகம் உண்டென்றால் அது செவ்வாய் கிரகமே. ஆகவே செவ் வாய் கிரகத்துக்கு மிக அதிகமான விண் கலங்கள் அனுப்பப்பட்டு ள்ளன. புதன் கிரகம் அவ்வளவாக ஆராயப் படாத கிரகம். புதன் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு சில விண்கல ங்களில் எதுவும் புதன் கிரகத்தில் இறங்கியது கிடையாது. எட்ட
இருந்து அந்தக் கிரகத்தை ஆராய்ந்த தோடு சரி. புதன் கிரகத்தை விரிவாக ஆராய கடந்த 2004-ம் ஆண்டு செலுத்தப்பட்ட மெச ஞ்சர் விண்கல ம், 2011 மார்ச் மாதம் புதன் கிரகத் தை அடைந்து, அதனைச் சுற்ற ஆரம்பித்தது. புதன் கிரகத்தை ச் சுற்றி வருகிற முதல் விண்கலம் இதுவே. புதன் கிரகத்துக்கு ஆளில்லா விண் கலம் ஒன்றை அனுப்பு வது என்பது கிட்டத்தட்ட சூரியன் இருக்கிற பகுதியை நோக்கி விண்கலம் அனுப்புவதற்குச் சமம். ஆகவே பூமி யிலிருந்து கிளம்பு கிற விண்கலம் புதனை நோக்கிச் செல்கையில் சூரியனின் கடும் ஈர்ப்பு சக்தி காரணமாக அது மேலும் மேலும் வே
கம் பெறும். அந்த விண்கலம் புதன் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி, அதைச் சுற்ற ஆரம் பிக்க வேண்டுமானால் விண்கலத் தின் வேகம் பெருமளவுக்குக் குறை க்கப்பட்டாக வேண்டும். அதாவது அதை இழுத்து ப் பிடிக்க வேண்டும். எந்த விண் கலத்திலும் காரில் உள் ளது போன்று பிரேக் கிடையாது. ஆகவே மெசஞ்சர் விண்கலம் புத னை நெருங்குகிற வேளையில் அதன் வேகம் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக விசேஷ உத்திகள் கையாளப்பட்டன . அதாவது மெசஞ்சர் விண்கலம் பூமி யிலிருந்து கிளம்பிய பிறகு பல தடவை சூரிய மண்டலத்துக்குள் ளாக வட்டம் அடித்தது. அது பூமியை ஒரு தடவையும் வெள்ளி கிர கத்தை இரண்டு தடவையும் புதன் கிரகத்தை மூன்று தடவையும் வட்டம் அடித்தது. அது இப்படிச் செய்ததன் விளைவா கவே அதன் வேகம் குறைந்தது. மெசஞ்சர் புதன் கிரகத்தைச் சுற்ற ஆரம்பிக்க ஏழு ஆண்டுகள் ஆனதற்கு இதுவே காரணம்.
புதன் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்படுகிற ஒரு விண்கலத்தை, சூரியனின் வெப்பம் கடுமையாகத் தாக்கும். மெசஞ்சர் விண்கலத்தை உருவாக்கிய போ து இது கருத்தில் கொள்ளப்பட்டு மெசஞ்சர் விண்கலத்துக்கு ஒரு ‘நிழற்குடையை’ உரு வாக்கினர். இந்தக் குடை விசேஷப் பொரு ளால் ஆனது. இதை உருவாக்கவே பல ஆண்டுகள் பிடித்தன. விண்கலத்தில் சூரிய னை எதிர்கொள்ளும் பகுதியில் இரண்டரை மீட்டர் நீளமும் இரண்டு மீட்டர் அகலமும் கொண்ட ‘விரிப்பு’ பொருத்தப்பட்டது. இந்த விரிப்பின் – சூரியனைப் பார்த்த – வெளிப்புறம் பளபளப்பானது. எப்போதுமே பளபளப்பான பகுதியானது வெப்பத்தைத் திருப்பி அனுப்பக்கூடிய து. இந்த விரி ப்பின்மீது படும் வெயிலின் அளவு 370 டிகிரி செல்சி யஸாக இருக் கலாம். ஆனால் விரிப்பின் உட்புறத்தில் வெப்ப அளவு வெறு
ம் 20 டிகிரி செல்சியஸாக உள்ளது. புதன் கிரகத்தின் வெப்பம் மெச ஞ்சர் விண்கலத்தைத் தாக்கி விடக்கூடாது என்பதற் காகவும் விசேஷ ஏற்பாடுகள் செயப்பட் டுள்ளன. இதைக் கருத்தில் கொ ண்டுதான் புதன் கிரகத்தை மெச ஞ்சர் நீள் வட்டப் பாதையில் சுற்றும்படி செய்ய ப்பட்டுள்ள து. மெசஞ்சர் புதன் கிரகம் பற் றிப் புதிய தகவல்களை அளித் து வருகிறது.புதன் கிரகம் எப்போதுமே பிரச்னை பிடி த்தது. இரவு வானில் நம்மால் தகுந்த சமயங்களில் வெள்ளி, செவ்
வாய், வியா ழன், சனி ஆகிய கிரகங்க ளை வெறும் கண்ணால் காண இயலும். ஆனால் புதன் கிரகம் எளிதில் தென் படாது. அது சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதே இதற்குக் காரணம். புதன் கிரகம் ஒரு சமயம் விடியற் காலையில் சூரிய உதயத்து க்குச் சற்று முன்பாக கிழக் கே அடிவானில் மங்கலான ஒளிப் புள்ளியாகச் சிறிது நேரம் தென் படும். அல்லது மேற்கு வானில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு இதே போல சிறிது நேரம் மங்கலான ஒளிப் புள்ளியாகத் தெரியும்.
– என்.ராமதுரை மழைக்காகிதத்தில் கிறுக்கியது