Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (17/06): "உன் கணவன் பிரச்னையை, எடுத்தேன் – கவிழ்த்தேன் என கையாளாதே மகளே!"

 

அன்புள்ள அம்மா —

நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். எனக்கு வயது 30. திருமண மாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். படிப்பு முடிந்த, அடுத்த மாதம் முதல், இன்று வரை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கண வருக்கு, 34 வயது. இரண்டு தங் கைகள்; திருமணமாகி விட்டது. என் கணவர் முன்கோபக்காரர். அவர், வீட்டிற்கு ஒரே பையன் என்பதால், மிகவும் செல்லமாக வும், தவறை சுட்டிக்காட்டி திரு த்தவும் பெற்றோர் முற்படவில் லை. அவரே சரியாகி விடுவார் என்றனர். அதற்கு இடையூறாக நான் வந்தேன். “குடிமகன்’களை க ண்டால், குழந்தை பருவத்திலேயே வெறுப்பவள் நான். என் கணவர், வாரந்தோறும் நண்பர்களுடன் சென்று மது அருந்துவார். இதனால், எங்களுக்குள் சண்டை வரும், பின் சமாதானம் ஆவோம். தற்போது, வார நாட்களிலும் ஆரம்பித்து விட்டார். சண்டை பலமானது, 15 நாட் கள் பேசாமல் இருந்தோம்.

அவருடைய தனிப்பட்ட சந்தோஷத்திற்கு பின் தான், நாங்கள் என்று என்னிடம் கூறுவார் என் கணவர். ஒவ்வொரு முறையும் சண்டை போடும் போது, “இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன்; திட்ட மாட்டேன்…’ என்று மன்னிப்பு கேட்பார். ஆனால், மீண்டும் அதைதா ன் செய்கிறார்.

நான் பல வருடங்களாக, ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். என்னுடைய படிப்பை விட, என் பொறுப்பை நம்பி, நிறுவனம் என் னை மேலாளராக பணியமர்த்தியுள்ளது. என் கணவர் அடிக்கடி நிறு வனத்தை மாற்றுபவர். காரணம், அவரது முன்கோபம். தற்போது, ஏழு மாதங்களாக, ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். என் னை விட, இப்போது அவர் அதிகம் சம்பாதிக்கிறார். அடிக்கடி அவர் எங்களை தனியே விட்டுவிட்டு, அவரது தாய் வீட்டில் தங்குவார். காரணம், அங்குதான் நண்பர்கள் உள்ளனர். அவரது பெற்றோரும், அவர் எது செய்தாலும் கண்டிக்கமாட்டார்கள்..

அவரால், நான் பட்ட துயரங்கள், வேறு எந்தப் பெண்ணிற்கும் வரக் கூடாது. ஆயினும், அவரை பிரிய எனக்கு மனமில்லை. இன்று, நா ளை சரியாகி விடுவார் என்ற நம்பிக்கை.

ஒரு நாள் இரவு 10:30 மணிக்கு, அவருக்கு போன் வந்தது. மெதுவாக ஒரு நிமிடமே பேசினார். எப்போதும் அவர் போனில் பேசுவது, நேரில் பேசுவதுபோல இருக்கும். நான் எழுந்து அவரை பார்த்தேன், போ னை கையில் வைத்திருந்தார். யார் என்றதற்கு, ஆபீசில் இருந்து எ ன்று சொல்லி விட்டார். எனக்கு இதுநாள் வரை, அவர் மீது இல்லாத சந்தேகம் அன்று வந்தது. அடுத்த நாள் போனை பார்த்தேன், அவர் அந்த நம்பரை அழித்துவிட்டு, வேறு ஒரு நம்பரை டயல் செய்திருந் தார். சந்தேகம் வலுத்தது. அன்று மாலை வருவார் கேட்கலாம், என் று நினைக்க, “மாலை 6.00 மணிக்கு நண்பரின் அப்பா இறந்து விட் டார், அங்கு செல்கிறோம், நாளை தான் வருவேன்…’ என்று கூறி சென்று விட்டார். நான் மிகவும் குழப்பமடைந்தேன். நான்கு வருடங் களாக, அவர் மீது இந்த சந்தேகம் வந்தது கிடையாது. ஏதோ, தவறு செய்கிறார் என்று, இரவு 9:30 மணிக்கு போன் செய்து, “தனியே காரி ல் செல்கிறீர்கள் எனக்கு இனம் புரியாத கவலையாக இருக்கிறது…’ என்றேன். அவர் “தைரியமாக இரு, காலையில் வந்து விடுவேன்…’ என்றார். அவர் செல்கிறேன் என்று சொன்ன இடம், வந்த நேரம், சென்ற நேரம், எல்லாம் தவறாக இருந்தது.

நான், அவருடைய நம்பரிலிருந்து சென்ற, போன் கால் லிஸ்ட் எடுக் க சொல்லியிருந்தேன். லிஸ்ட் வந்தது, ஒரு நம்பருக்கு கடந்த, ஐந்து நாட்கள் மட்டும் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்., சென்றிருந்தது. அதன் முகவரியும் கிடைத்தது,

என் போனிலிருந்து அழைத்தால், அது ஒரு பெண், தவறான பெயரை கூறினாள். நான், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். அன்று மாலை என் கணவரை, கோவிலுக்கு அழைத்து சென்று விசாரித்தேன்.

அவர் முதலில் இல்லை என்றார், “என்னிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கிறது’ என்ற பிறகு கூறினார்…

இரவு 11.00 மணிக்கு, பஸ்சில் வரும் போது என்னிடம் நம்பர் கொடுத் தாள். தொடர்ந்து பேசினாள், நானும் பேசினேன். அவள் மற்றும் அவ ளுடன் இரண்டு பேர் சேர்ந்து, அன்று இரவு வெளியில் தங்கினோம். மது அருந்தினோம் தவறு செய்யவில்லை. அவர்கள் கல்லூரி மாண வியர் என்றார்.

“என்னை ஏமாற்றி விட்டாய், எனக்கு துரோகம் பண்ணி விட்டாய், இனி வேண்டாம்…’ என்றேன். அவரும் அழுதார், “இனி, சாகும் வரை உனக்காக வாழ்வேன்…’ என்றார். “உங்களை மன்னிக்க மாட்டேன்; ஆனால், அதை மறக்க முயற்சி செய்கிறேன்…’ என்றேன். சென்ற மாதம், மீண்டும் அனைத்தும் நடந்தது. ஆனால், தற்போது அவர் எங் களை கண்டுகொள்வதில்லை. அவர் சந்தோஷத்தை பெரிதாக நினைக்கிறார். நான் என்ன செய்வது? அவரை, அவர் வழியிலே விடுவதா? நான் மாறுவதா? அவரை பிரிந்து தனியாக வாழலாமா?

என்னைப் பற்றி:

நான் மாதம், 17,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். எனக்கு மூன்று சகோதரிகள். நான் கடைசி பெண், அனைவரும் குடும்பத்துடன் வாழ் கின்றனர், எனக்கு சகோதரர்கள் இல்லை, பெற்றோர் வயதானவர் கள். என் காலம் வரை, நான் தான் என்னை பார்த்துக் கொள்ள வே ண்டும். வேலையிலும், வீட்டிலும் கண்டிப்புடன் செயல்படுபவள். எ தையும் தனியே சமாளிக்கும் தைரியம் உண்டு. அவர் இப்படி ஆனதற் கு என்னிடம் எதுவும் தவறு இருக்கிறதா? அந்த பெண்ணை என்ன செய்வது, அவளுக்கு எதாவது தண்டனை கொடுக்க வேண்டும் என் று நினைக்கிறேன். நீங்கள் ஒரு நல்ல பதிலை எனக்கு சொல்வீர்கள் என்று காத்திருக்கிறேன்.

— இப்படிக்கு அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு —

உன் கடிதத்தை படித்தேன்.

தவறு செய்த கணவனை பிரிந்து வாழலாமா, கணவனோடு கூட்டு சேர்ந்து, தவறு செய்த பெண்ணை தண்டிக்கலாமா போன்ற பல யோ சனைகளை, மனதிற்குள் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாய்.

வீட்டுக்கு ஒரே மகன் என்பதால், செல்லம் கொடுத்து உன் கணவ னை குட்டிச்சுவராக்கி விட்டிருக்கின்றனர் அவரது பெற்றோர். நண்ப ர்களுடன் குடித்துக் கும்மாளம் போட, பெற்றோர் இருப்பிடம் தான் பாதுகாப்பானதாய் இருந்திருக்கிறது உன் கணவனுக்கு. உன் கணவ னோடு சேர்ந்து, உன் மாமனாரும் குடிப்பாரோ, என்னவோ?

உன் கணவனுக்கு, உன் மீதும், குழந்தை மீதும் அன்பிருக்கிறது. வீட் டு சாப்பாட்டின் மீது, நிரந்தர அபிமானமாக இருந்தும், அவ்வப்போது விடுதி சாப்பாடுக்காகவும், நாக்கை தொங்க போட்டுக் கொண்டு திரிகிறான்.

நீ மாதா மாதம் சம்பாதித்துத் தரும், 17 ஆயிரம் ரூபாய் சம்பளம், அவ னுக்கு மிக மிக தேவையான ஒன்று. அதனால் தான், அவனை நீ கோவிலுக்கு கூட்டிச் சென்று விசாரிப்பதற்கெல்லாம் உடன் படுகி றான். மன்னிப்பும் கேட்கிறான். “இனி, சாகும் வரை உனக்காக வாழ் வேன்…’ என, அரசியல்வாதி போல் வாக்குறுதியும் தருகிறான்.

உன் கணவன் விஷயத்தில், என்ன மேல் நடவடிக்கைகள் எடுப்பது என பார்ப்போம்.

நீ இப்போதிருக்கும் கறார் கண்டிப்புடனேயே, உன் கணவனை வழி நடத்து. மகனை நேர்வழிப் படுத்தச் சொல்லி, மாமனார், மாமியாருக் கு நெருக்கடி கொடு.

உன் கணவனுக்கு, முழு உடல் பரிசோதனை செய்து, உயர் ரத்த அழுத்தமிருக்கிறதா என பார். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், முன் கோபம் வரும். தகுந்த மருத்துவம் பார்த்து, அதை கட்டுக்குள் கொ ண்டு வரலாம் நீ.

உன் கணவனோடு சேர்ந்து, தவறு செய்த பெண்களை எல்லாம், தண் டிக்க வேண்டுமெனில், நீ மாவோயிஸ்ட் போல ஆயுதம் தாங்க வே ண்டி வரும். இது தேவையா செல்லம்?

மொத்தத்தில், உன் கணவன் பிரச்னையை, எடுத்தேன் – கவிழ்த்தேன் என கையாளாதே மகளே. உன் அவசர முடிவுகள், மகனையும், உன் வயதான பெற்றோரையும், மூன்று சகோதரிகளின் குடும் பத்தையும், பாதித்து விடக் கூடாது. உன் கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த, அவனை,”டி-அடிக்ஷன்’ சென்டருக்கு அழைத்துச் செல். ஆல்ஹகாலி க் அனானிமஸ் கூட்டங்களில், அவனை கலந்து கொள்ளவை. திரு மண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடுவனுக்கு, எய்ட்ஸ் நோய் வரும் என முன்னெச்சரிக்கை செய்.

உன் வாழ்வில் நீ விரும்பும் மாற்றங்கள் கட்டாயம் நிகழும் மகளே; காத்திரு!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Leave a Reply