“ரம்பையா, ஊர்வசியா, மேனகையா’ என்று இளம் நாட்டிய தாரகை செல்வி சுதர்மாவை நடனம் முடிந்ததும், நிருத்ய சூடாமணி சித்ரா விஸ்வேஸ்வரன், பாராட்டிப் பேசினார். அழகு என்பது ஆடு பவருக்கு அமையவில்லை என்றால் நடனம் சோபிப்பதி ல்லை. இது நிதர்சனமான உண் மையும் கூட. அந்த நடனத்தை கண்டவர்கள் சித்ரா கருத்தை ஆமோதிப்பர். ஆடுவதற்கு ஏற்றாற்போல், உடலை வைத்து பேணி காப்பது என்பது, அரங் கேற்றம் முதல், அத்துறையில் நிலைத்த பின்பும் 100 சதவீதம் முக்கியத்துவம் பெறுகிறது.
உடல் சிறிது பருமனானால் கூட உட்கார்ந்து ஆடுவது கடினம். முகமும் பருத்து காணப்பட்டால் நாம் என்ன பாவங்களை காண் பிக்க முயலுகிறோமோ அத்தனையும் விழலுக்கு இரைத்தநீர் போல் ஆகி விடும். சபாவில் நடைபெற்ற சுதர்மாவின் நடனத்திற்கு, பக்க பல மாக ஹரிபிரசாத் குரலிலும், எம்.எஸ்.கண்ணன் வயலினி லும், நெல்லை கண்ணன் மிருதங்கத்திலும் நட்டுவாங்கம் சுபஸ்ரீ ரவி சுதர் மாவின் குரு எஸ்.லட்சுமணன், ஹரிபிரசாத் இயற்றிய, புஷ் பாஞ்ச லி சிம்மேந்திர மத்யம ராகத்தில் அமைந்ததை, ஆடி, தனது நிகழ்ச்சி யைத் துவக்கினார்.
அடுத்து, செம்பனார் கோவில் சண்முகம் இயற்றிய, தண்டை முழங் கும் என்ற மிக அருமையான அதிகம் ஆடிக் காணாத சப்தம் நமக்கு கிடைத்தது. முருகனைப் போற்றும் விதத்தில் அமைந்த பாடலுக்கு, முருகனின் சிறப்புகளை எடுத்துக் கூறும்போது, தேனும், தினைமா வும் கிடைக்கும் இடத்தில் வள்ளியின் வளைக்கரம் பிடிக்க கந்தன் வந்து அதை ஏற்றது முதல் காவடி எடுத்து முடித்து வரை சுதர்மா அழகாக ஆடினார். அடுத்து, நடனத்தின் இதயமாக விளங்கும் வர் ணம் சீதாராம அய்யர் இயற்றிய ராக மாளிகை வர்ணம் ரூபக தாளத் தில் அமைக்கப்பட்டதற்கு, சுதர்மா ஆடிய விதம் தான் அவரை புகழி ன் உச்சாணிக்கு கொண்டு வைத்தது.
பொதுவாக வர்ணத்தில்தான் பாடுபவர்கள் எப்படி மனோ தர்ம பிரி வில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனரோ, அதுபோல, சஞ்சாரியில் பல புராணக் கதைகளை இணைத்து ஆடி தங்களது அபிநயத் திறனையும், அனைத்து கால ஜதிகளில் குருவிற்கு சிறப் பான பெயரும் கிடைக்கும். அதற்காக, அரும்பாடுபட்டு, குருவும், சிஷ்யையும் உழைத்து, தங்களுக்கான பெருமையை தக்க வைத்துக் கொள்வர். அந்த வழியில் யாரும் அதிகமாக ஆடிப் பார்க்காத வர்ண ம்; மிக அருமையான பொருள் பொதிந்த வர்ணம், சஞ்சாரி என்று தனியாக செய்ய வேண்டிய, அவசியமே இல்லாமல் பாடலின் முதல் பல்லவி, வார்த்தையிலிருந்து சரண ஸ்வரங்களின் கடைசி சாகித்ய வார்த்தை வரை எல்லா சொற்களுக்கும் அபிநயித்து ஆடும்படி அமைந்திருந்தது வர்ணம் என்றால் அது மிகையில்லை.
“நித்ய கல்யாணி நிகமார்த்த’ என்ற பல்லவியின் வரிகளில் சங்கரா பரண வேணியாகவும் அடுத்து வந்த தோடி ராக தோமுபாளம்ப ஜால வரிகளைத் தொடர்ந்த பஞ்சம வர்ஜ சிட்டை ஸ்வரம்மிக அழகாக அமைக்கப்பட்டதை லயித்து ஆடினார். மது கைடபர்களை வதம் செய்து, சிம்ம வாஹினியாய் கபாலத்தை கையில் ஏந்தியவளாகவு ம், மதுராபுரி வாசினி மகேஸ்வரி ஆதி சக்தி அகிலாண்டேஸ்வரி யாக அருள்பாலித்ததை விளக்க பாண்டிய மன்னனின் மகளாகப் பிறந்த மீனாட்சியாய் மதுராபுரியை ஆள தன்னை கல்வி, கேள்வி, கலைகளிலும் சண்டைப்பயிற்சி ராஜ்ய பரிபாலனத்திற்கு வேண்டிய அனைத்தையும் கற்று முப்புறம் திக் விஜயம் செய்ததை ஆடியவிதம் அருமை. சுந்தரேசனுடன் போரில் வெல்ல முடியாமல் பெண்ணுக் கே உரிய நாணத்துடன் வில்லம்பை கீழே போட்டு தன் நாயகனை காதல் மொழிகளால் கண் பேசி கரம் பிடித்த காட்சிகளை சுதர்மா விவரித்து ஆடும்போது ரசிகர்கள் கைத்தட்டல்கள் குவிந்தன.
மதுரை மீனாட்சியாக யார் ஆடினாலும் பார்ப்பவர் கண்களுக்கு பரவ சமாகி விடும்போல, சுதர்மாவும் அதற்கு விதி விலக்கல்ல. இதைப் பார்த்துவிட்டுதான் சித்ரா விஸ்வேஸ்வரன் மனதில் அப்படி யொரு கேள்வி எழுந்திருக்கும் போல, வர்ணமே நம்மை திக்கு முக்காட செய்தது. அடுத்த பாடலாக, சுதர்மா எடுத்துக்கொண்டது பெரியசாமி தூரனின் பெஹாக்ராக தொட்டு தொட்டு பேச வரான் கண்ணன். அவன் துடுக்குத்தனத்தை அடக்குவாரில்லை என்று யசோதையின் மகனான கண்ணனின் சாகசத்தை மொத்தமாக வளர்த்து கொடுத்த பாடலில், சுதர்மா ஆட, கேட்கவா வேண்டும். கரும்பு தின்ன கூலியா என்பது போல், நம்மனதில் கண்ணனின் நினைவுகளை பட்டாம்பூச்சி போல் பறக்க விட்டுவிட்டார்.
டி,கே.கோவிந்த ராவ் இயற்றிய, தில்லானா கம்பீர வாணி ராகத்தில் அமைந்ததற்கு, மிக விறுவிறுப்பாகவும், நேர்த்தியாகவும் ஆடி, அழ கு சிற்பமாய் நின்றார். ரசிகர்களின் கண்களில் மொத்தத்தில் சுதர் மாவின் நடனம் செல்லாவின் வீடியோ கேமராவிற்குள் செயற்கை யாக புகுந்தாலும் ரசிகர்களின் மனதில் இயற்கையாக நுழைந்து நீங்கா இடம் பெற்று விட்டார். சுதர்மாவிற்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பது அவரது நடனத்தைப் பார்த்தவர்கள் கண்டிப்பாக சொ ல்வர் .
– ரசிகப்ரியா