Monday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மொபைல் போனில் பேசும்போது ந‌மது பழக்க வழக்கங்கள்

மொபைல் போன் நம் மூன்றாவது கரமாக மாறிவிட்ட நிலையில், பலரும் அதனை எப்படிப் பயன் படுத்தக் கூடாதோ, அந்த வழிக ளில் பயன்படுத்தி வருகின்றன ர். பலமுறை, அரசு மற்றும் நிறு வனங்களால் எச்சரிக்கை செய் தும், இந்த கூடா பழக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. எடுத் துக்காட்டாக, மொபைல் பேசிக் கொண்டே, ரயில்வே தண்டவா ளங்கள் மற்றும் சாலைகளைக் கடந்து சென்று விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 500க்கும் மேல் இரு ப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காய மடைந்து நிரந்தர ஊனம் முற் றவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகம். 

இந்த இழப்புடன், சமுதாய ரீதியாக மொபைல் போனில் பேசும் போது மேற்கொள்ளப்படும் பழக்க வழக்க ங்கள், பலருக்கும் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது. கீழே தரப்பட்டுள்ள சில பழக்கங் களை நீங்கள் பயன்படுத்தி வருபவராக இருந்தால், உடனடியாக அவற்றை விட் டுவிடுவது நல்லது.

கடை ஒன்றில் பணம் செலுத்தும் கவுண் ட்டர் அருகே சென்ற பின்னர், சாலைகளி ல் டோல் கேட்டில் பணம் செலுத்தக் காத் திருந்து உங்கள் முறை வரும்போது, போ னில் பேசுவதிலும், டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண் டாம். பணம் பெறுபவர் மட்டுமின்றி, உங் களுக்குப் பின்னால், பணம் செலுத்த காத் திருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சில நிமிடங்கள் உங்க ளுடன் பேசுபவரோ, அல்லது உங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் காத்திருக் கலாமே.

டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பது மற்றும் மின்னஞ்சல் செய்திகளை வாசிப்பது போன்ற வற்றை, சாலையில் நடக்கும்போது மேற் கொள்ள வேண்டாம். நிச்சயம் விபத்தில் தான் இது முடியும். காரணமாயி ருப்பவர் நீங்கள் மட்டு மின்றி, சாலையில் செல்லு ம் அப்பாவிக ளையும் இது பாதிக்கும். ஒரு சிலர், தாங்க ள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகையில் இது போல அபாயகரமான செயல்பா டுகளில் ஈடுபடுகின்றனர். இது அறவே தவிர்க்க வேண்டிய ஒன்று.

மொபைல் போனில் கேம்ஸ் விளையாடு கையில், வீடியோ காட்சி களைக் காண்கையில், பொது இடங்க ளில் ஸ்பீக்கர்களை இயக்கிய வாறு இருப்பது மற்றவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஹெட் செட் மாட்டி, உங்க ளுக்கு மட்டும் கேட்கும்படி வைத்துக் கொண்டு விளையாடலாம்; வீடியோ பார்க்கலாம்.

கழிப்பறைகளில் மொபைல் பயன்படுத் துவதனைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் பலர் இருக்கின்றனர். நீங்க ள் எங்கிருந்து, என்ன செய்து கொண்டு பேசுகிறீர்கள் என்பதனை அடுத்த முனையில் உங் களுடன் பேசுபவர் தெரிந்து கொண்டால், உங்களைப் பற்றி நிச்ச யம் தாழ்வாகத்தான் எண்ணுவார். சிறிது நேரம் கழித்து, இந்த அழை ப்புகளை வைத்துக் கொள்ளலாமே.

சிலர், மற்றவர்களுடன் இரு க்கையில், தங்களுக்கு அழை ப்பு வந்த மாதிரி பேசிக் கொ ண்டிருப்பார்கள். இது மற்றவ ர்களிடம் உங்களுக்கு மதிப் பை ஏற்படுத்தாது. நம்மைக் காட்டிலும் வேறு ஒருவரே முக்கியமானவர் என நீங்கள் கருதுவதாக அவர்கள் எண்ணலாம். எனவே, பொய்யான இந்த செயல் பாட்டினைத் தவிர்க்கலாமே.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: