Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், எப்படி இருக்கும் ?

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், அந்தப் படத்தின் வியாபா ரத்துக்கு வானமே எல்லையாக இருக்கும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ் வரூபம் படம் விரை வில் வெளி வர உள்ளது. படத்தின் வெள்ளோட்டத்து க்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த மகிழ்ச்சியில் கமல் அளித் துள்ள பேட்டி:

“நான் ஒவ்வொரு படத்தில் பணியாற்றும் போதும் அதை கடைசி படமாகத்தான் பார்ப்பேன். அடுத்த படத்தை செய்வோம் என்று யாருக்கு தெரியும். சினிமாவில் எதுவும் நடக்கலாம். ஆனால் ரசிக ர்களுக்கு ஒவ்வொரு படமும் கடை சி படமாக இல்லை. நடிகர்களு க்கு மட்டுமே கடைசி படம் என்ற நிலை உள்ளது.

நான் ஒவ்வொரு படத்தையும் நல்ல படமாக கொண்டு வர வேண் டும் என்று விரும்புகிறேன். அதற்காகவே உழைக்கி றேன். 200கோடி பட்ஜெட்டி ல் படம் எடுப்பவர்களுக்கு கூட அதே அளவு பிரச்சி னைகள் சுற்றி இருக்கி ன்றன.

ஐம்பது வயதை தாண்டியும் நான் அழகாக இருப்பதாக கூறுகின்றன ர். அதற்காக என் தந்தைக்குதான் நன்றி சொல்ல வேண்டு ம். அழகாக இருப்பதற்கு நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவில்லை. அப்படி செய்ய வேண்டிய நிலை மை ஏற்பட்டால் என் தோற்றத்திற் காக அதையும் செய்யத் தயங்க மாட்டேன்!

விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியை பட மாக்கப் போவதாக செய்திகள் பரவி உள்ளன . அபபடியொரு சிந்தனை பரிசீலனையில் உள்ளது உண்மைதான்.

நான் படங்களை குறைத்து கொண்டதற்கு நல்ல தயாரிப்பாளர்கள் இல்லாததே காரண ம். பணமும் மரியாதையும் ஒருவரை தகுதி யான தயாரிப்பாளராக ஆக்கி விடாது. தயாரி ப்பு என்பது கூட ஒரு டெக்னிக்தான். நடிப்பை போல படங்களை தயாரிக்கவும் திறமை வேண்டும்.

200 படங்களில் நான் நடித்து இருக்கிறேன் என்றால் அதில் 100 தயாரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள். சில தயாரிப்பாளர்கள் படத் தையே கெடுத்து உள்ளனர். மோசமான தயாரிப்பாளர்களைச் சந்தி க்கும்போது நல்ல தயாரிப்பா ளர்களையும் பார்க்கிறேன்.

ரஜினியும் நானும்…

ரஜினியும், நானும் இணைந்து நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நாங் கள் சேர்ந்து நடித்தால் வியாபாரத்தில் அந்த படத்து க்கு வானமே எல்லையாக இருக்கும். ஆனால் எங்கள் இருவருக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். சம்பளம் போக படத்தை எடுப்பவர் களுக்கு என்ன மிச்சம் இருக்கும்?!” -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: