Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழ்க்கையில் எதிர்பாராத சோதனை: கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்த நடிகர் ராஜேஷ்

ஆசிரியராக இருந்து நடிகரான ராஜேஷ்: ‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் கதாநாயகன் ஆனார்

ஆசிரியராக பணிபுரிந்த ராஜேஷ், திரைப்பட ஆர்வத் தின் காரணமாக தீவிரமாக முயற்சி செய்து, ‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் கதாநாயகன் ஆனார். 

நடிகர் ராஜேஷின் சொந்த ஊர் பட்டுக் கோட்டை அருகே உள்ள அணைக் காடு ஆகும். தந்தை வில்லியம்ஸ், கல்வித் துறையில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். தாயார் லில்லி கிரேஸ் , பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய வர். திண்டுக்கல், வடமதுரை உள்ளிட் ட பல ஊர்களில் உறவினர் வீடுகளில் தங்கி இருந்து பள்ளிப் படிப் பை ராஜேஷ் முடித்தார்.
 
அதன் பின்னர், 1968-ம் ஆண்டு சென்னையில் இடைநிலை ஆசிரிய ருக்கான பயிற்சியை முடித்தார்.  சென்னை ராயபுரத்தில் உள்ள கண்ணப்ப நாயனார் கழக பள்ளியில், விடுமுறை கால ஆசிரியராக 4 மாதம் பணிபுரிந்தார். அதன் பிறகு, வேப்பேரி செயின்ட்பால் மேல்நிலைப்பள்ளியில், 4 மாதங்கள் ஆசிரியராக பணியாற்றி னார்.
 
தொடர்ந்து, திருவல்லிக்கேணி கெல்லட் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். அங்கு தொட ர்ந்து 7 ஆண்டுகள் ஆசிரியராக வே லை பார்த்தார்.   ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த போ திலும், ராஜேஷ் மனம் சினிமாவைச் சுற்றி ச் சுற்றி வந்தது. எப்படி யாவது சினி மாவிற்குள் நுழைந்து விடவேண்டு ம் என்று முடிவு செய்தார்.  
 
அதற்கு அச்சாரமாக 1978-ம் ஆண் டிலிருந்து நடிகர் ஜெய்கணேஷ் நடத்தி வந்த நாடகக் குழுவில் சேர் ந்து, மேடை நாடகங்களில் நடித்தார். ‘கங்கை புனிதம் அடைகிறது’ உள்பட 50 நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜேஷ் நடித் தார். அதே நேரத்தில் திரைப்பட வாய்ப்புகளையும் தேடிக் கொண்டி ருந்தார். இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது:-
 
‘நான் பள்ளி ஆசிரியராக இருந்தபோதிலும், என் மனம் சினிமாவி ன் மீது பதிந்து இருந்தது. படவாய்ப்புக்காக, யாரை அணுகுவது என் று தெரியாமல் இருந்தேன். முதலில், ‘தை பிறந்தால் வழி பிறக்கு ம்’ படத்தை எடுத்த அருணாசலம் ஸ்டூடியோ அதிபர் ஏ.கே. வேல னை சந்தித்தேன்.
 
அதன் பிறகு, 1973-ம் ஆண்டு ‘மங்கல மங்கை’ என்ற படத்தில் ஸ்ரீ காந்த்தின் நண்பராக நடித்தேன். படம் வெளி வரவில்லை. 1974-ம் ஆண்டு, எனக்கு தெரி ந்த ஆசிரியர் நமச்சிவாயம் மூலம், நடிகை சுகுமாரியிடம் அறிமுகமானேன்.
 
இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் என்னை சுகு மாரி அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த சம யம் பாலசந்தர் தயாரித்து வந்த ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தி ல், ஒரு காட்சியில் நடித்தேன். பிறகு, இயக்கு னர் பாரதிராஜாவை பார்க்கச் சென்றேன்.
 
அந்த சமயம், ’16 வயதினிலே’ படத்தைத் தயாரித்த பட அதிபர் ராஜ் கண்ணுவை சந்தித்தேன். அவர் என்னைப் பற்றி விசாரித்தார். ஆசி ரியராக இருந்து கொண்டு சினிமா சான்ஸ் தேடுவதாக கூறினேன்.   அவர் சிவாஜி ரசிகர். ‘பராசக்தி படத்தில் பார்த்த இளம் சிவாஜியை போல இருக்கிறாய். உனக்கு சான்ஸ் தர ஆசைப்படுகிறேன். கிழக் கே போகும் ரெயில் படத்தில் வாய்ப்பு தருகிறேன்’ என்று என்னிடம் கூறினார்.
 
அந்தப் படத்தின் கதாநாயகனுக்கு 20 வயதுதான் இருக்க வேண்டும் என்பதால், எனக் குவாய்ப்பு கிடை க்கவில்லை.பல போராட்டங்களு க்குப் பிறகு, ‘கன்னிப் பருவத் திலே’ படத்தின் மூலம் திரை உலகு க்குள் புகு ந்தேன்.” இவ்வா று ராஜேஷ் கூறி னார்.  
 
1979-ம் ஆண்டு ராஜ்கண்ணு த யாரித்த ‘கன்னிப் பருவத்திலே’ படத்தில் நடிகர் ராஜேஷ் கதா நாயகனாக அறிமுகமானார். படத்தை பால குரு டைரக்ட் செய்தார். வடிவுக்கரசி கதாநாயகியாகவும், பாக்கியராஜ் வில்லனாக வும் நடித்தனர்.
 
‘கன்னிப் பருவத்திலே’ 275 நாட்கள் ஓடிய வெற்றிப்படம். ‘கன்னிப் பருவத்திலே’ படத்தில் நடிப்பதற்காக, 1979-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல், ஒரு ஆண்டு காலத்துக்கு பள்ளி ஆசிரியர் பணியில் விடுப்பு எடுத்திருந்தார், ராஜேஷ்.
 
இந்தப் படத்தின் அனுபவம் பற்றி நடிகர் ராஜேஷ் கூறியதாவது:-
 
‘மிகவும் உணர்ச்சி பூர்வமான, வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தேன். படத்தை பார்த்தவர் கள். பல படங்களில் நடித்த அனுபவம் பெற்ற நடிகர் போல நடித்து இருப்பதாகக் கூறினார்கள்.   நடிகர் நாசர் கூட சமீபத்தில் இந்தப் பட த்தைப் பார்த்து விட்டு நான் மிக வும் நன்றாக நடித்து இருப்பதாக கூறினார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப்படமானது.’ இவ்வா று நடிகர் ராஜேஷ் கூறினார்.
 
‘கன்னிப் பருவத்திலே’ படத்தைத் தொடர்ந்து, நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. ‘மெட்டி’, ‘ஒருத்தி மட்டும் கரையினி லே’, ‘நான் நானேதான்’, ‘தனிமரம்’, ‘வெளிச்சத்துக்கு வாங்க’, ‘தைப் பொங்கல்’ ஆகிய படங்களில் நடித்தார். 
 
ராஜேஷ் திரை உலக வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்படுத்திய ‘அந்த 7 நாட்கள்’
 
கே.பாக்யராஜ் இயக்கத்தில் ராஜேஷ் நடித்த ‘அந்த 7 நாட்கள்’ மகத் தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘சிறை’, ‘ஆலய தீபம்’ முதலிய வெற்றிப் படங்களில் நடித்து ப் புகழ் பெற்றார்.
 
1981-ம் ஆண்டு ‘அந்த 7 நாட்கள்’ படம் வெளி வந்தது. முக்கோணக் காதல் கதையை, புது மையான முறையில் எழுதி, அருமை யான முறையில் வசனம் எழுதியிருந்தார், பாக்ய ராஜ்.
 
படத்தின் கதாநாயகி அம்பிகா. கேரளாவில் இருந்து வந்து குடியேறிய பாக்கியராஜை அவர் காதலிப்பார். ஆனால், ராஜேஷை மணக்க வேண்டிய கட்டா யம் ஏற்படுகிறது.
 
கணவனா, காதலனா என்ற கேள்வியை எழுப்பி, உணர்ச்சிமயமா ன நிகழ்ச்சிகள் மூலமாக, கணவனுடன் அம்பிகாவை இணைத்து வை ப்பார், பாக்யராஜ்.
 
பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் மூலமாக, சிறந்த குணச் சித் திர நடிகராகப் புகழ் பெற்றார்.
 
‘அந்த 7 நாட்கள்’ பற்றி ராஜேஷ் கூறியதாவ து:-
 
‘இந்தப் படத்தை என்னால் மறக்க முடியாது. காரணம், அது எனது வாழ்க்கையோடு சம்ப ந்தப்பட்டது. படத்தில் எனது தாயார் உடல் நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற காட்சி. அதே சமயம் என து தாயாரும் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந் தார்கள்.
 
இந்தப்படம் வருகிறவரை, ஆசிரியர் பணியில் நீடித்தேன். விடுமு றை எடுத்துக்கொண்டு படத்தில் நீடித்தேன். தொடர்ந்து ஆசிரியர் பணியில் நீடிப்பதா, அல்லது முழு நேரத்தொழிலாக நடிப்பில் ஈடு படுவதா என்று முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
என் நண்பன் ஒருவன், ‘நீ ஒரு தீவை ஆட்சி செய்ய வேண்டுமென் றால், நீ ஏறிச் சென்ற படகை எரித்துவிட வேண்டும்’ என்று கூறினா ன். படகு இருந்தால், மீண்டும் தீவை விட்டு வெளியேறும் எண்ணம் வரும்.
 
எனவே, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த நான், அதுவரை பார்த்து வந்த ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தேன்.’ இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
 
தொடர்ந்து, ‘சங்கநாதம்’, ‘சிவந் த கண்கள்’, ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ போன்ற படங்க ளில் ராஜேஷ் நடித்தார். இரட் டைக் கதா நாயகர்கள் உள்ள படங்கள் பலவற்றிலும் நடித் தார்.
 
அதன்பின்னர், 1984-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் டைரக்ஷனில் வெளியான ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் மூலம், மீண் டும் தனி கதாநாயகனாக ராஜேஷ் புகழ் பெற்றார்.
 
நல்ல குணம் கொண்ட ஒரு வாலிபன் அரசியலுக்கு சென்ற பிறகு எப்படி கெட்டுப்போகிறான் என்பதுதான் இப்படத்தின் கதை. மனை வியே கணவனைக்கொன்று விடுவதுதான் படத்தின் கிளைமா க்ஸ்.
 
தொடர்ந்து, டைரக்டர் ஸ்ரீதரின் ‘ஆலயதீபம்’ படத்தில் நடித்தார்.
 
நிஜத்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த ராஜேஷ், ‘ஆலய தீபம்’ படத்தில் ஆசிரியராகவே நடித்தார்.
 
கதாநாயகி சுஜாதா, மகனை காப்பா ற்ற விளம்பர படத்தில் நடிக்க செல் கிறார். இது குடும்பத்தில் புயலை கிளப்புகிறது. அதனால் கண வனை (ராஜேஷ்) விட்டுப் பிரியும் கதாநா யகி, திரைப்படத்தில் நடித்து பெரி ய நடிகை ஆவதுதான் கதை. இந்த ப்படம், வெற்றி பெற் றது.
 
1984-ம் ஆண்டு ஆர்.சி.சக்தி டைரக் ஷனில் `சிறை’ படம் வெளி வந்த து.
 
அடக்கமான குடும்பப் பாங்கான மனைவி; ஆச்சாரத்துக்கு அடிமை யான கணவன். முரடன் அந்தோணியின் பார்வை அந்தப் பெண் மீது விழுகிறது. அவள் கெடுக்கப்படுகிறாள். சமூகத்தால் புறக்கணி க்கப்படும் அவள், முரடன் வீட்டுக்கே சென்று தங்கி, அவனை திருத் துகிறாள். அதே நேரம் திரும்ப வந்து அழைக்கும் கணவனிடம், கட்டிய தாலியை வீசி எறிந்து விடுகிறாள்.
 
இப்படிப்பட்ட புரட்சிகரமான கதையில் அந்தோணியாக ராஜேஷ் சிறப்பாக நடித்து இருந்தார். கெடுக்கப்பட்ட பெண்ணாக நடித்த லட்சுமியின் நடிப்பு அருமையாக இருந்தது.
 
பின்னர் ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’, ‘உத்தமி’, ‘வேலி’, ‘இது எங்கள் ராஜ்யம்’ போன்ற படங்களில் ராஜேஷ் நடித்தார்.
 
1985-ல், ‘சித்திரமே சித்திரமே’ படத்தில் ராஜேஷ் நடித்தார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்தார்.
 
இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது:-
 
‘சித்திரமே சித்திரமே படத்திற்கு என்னை கதாநாயகனாகப் போடும்படி சிபாரிசு செய்தவர் ரஜினிகாந்த்தான். அந்தப் படத் தில் கவுரவ வேடத்தில் ரஜினி நடித்தார்.
 
ரஜினியுடன் ‘தனிக்காட்டுராஜா’, ‘தாய்வீடு’ ஆகிய படங்களிலும் இணைந்து நடித்துள்ளேன்.
 
ரஜினி எந்த நேரம் பேசினாலும், வரலாறு, பழைய சினிமா ஆகிய வற்றைப் பற்றித்தான் பேசுவார். யார் மனமும் புண்படும்படி பேச மாட்டார்.
 
ஒரு காலத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டபோது ‘பண உதவி ஏதா வது வேண்டுமா?’ என்று கேட்டார். ‘பணம் வேண்டாம்; படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்’ என்று சொன்னேன். உதவி வேண்டுமா என்று அவராகவே அன்று கேட்டதை, என்னால் என்றும் மறக்க முடியாது.’ இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
 
அதன்பிறகு 1988-ம் ஆண்டு பக்தி படங்களில் ராஜேஷ் நடித்தார். அவர் நடித்த ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி’, ‘மேல்மருவத்தூர் அற்புதங்கள்’, ‘சமயபுரத்தாளே சாட்சி’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
 

ராஜேஷ் வாழ்க்கையில் எதிர்பாராத சோதனை: கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்தார்!***

 
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சோதனைகள் ஏற்படுவது உண்டு. அத்தகைய சோத னையால் நடிகர் ராஜேஷ் சொந்தமாகக் கட்டிய வீட்டை விற்று கடனை அடைத்தார்.
 
1984-ம் ஆண்டு வெளியான ‘சிம்ம சொப்பனம்’, ‘எழுதாத சட்டங் கள்’, 1986-ம் ஆண்டு வெளியான ‘மண் ணுக்குள் வைரம்’ ஆகிய படங்களி ல், சிவாஜிகணேசனுடன் ராஜேஷ் நடித்தார்.
 
இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது:-
 
‘சிவாஜிக்கு எங்கள் ஊருக்கு பக்கத் து ஊர்தான். அவர்கள் குடும்பத்திற் கும், எங்கள் குடும்பத்திற்கும் 60 ஆண்டு பழக்கம் இருந்து வந்தது. 1985-க்குப்பிறகு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்த து.
 
சிவாஜி என்னிடம் பேசும்போது, ‘நான் நாடக மேடையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தவன். ஆனால் நீ, நேரடியாக சினிமாவுக்கு வந்திருக்கிறாய். உனக்கும், எனக்கும் வித்தியாசம் உண்டு’ என்பா ர். அவர் மாபெரும் கலைஞர்.
 
ஒரு முறை, ‘உங்க படத்தை பார்த்துதான் நடிக்க கற்றுக் கொண்டே ன்’ என்று கூறி, அவர் நடித்த பல படங்கள் பற்றி விரிவாகக் கூறி னேன். அதற்கு அவர், ‘இவ்வளவு படங்களைப் பார்த்து விட்டு, எப் படி பாடம் படித்தாய்?’ என்று சிரித்தபடி கூறினார்.
 
ஒரு நாள் காக்கி சட்டை, பேண்ட் அணிந்து கொண்டு சிவாஜியைப் பார்க்க சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ‘என்ன? என்னைப் போல் உடை அணிந்து இருக்கிறாயே!’ என்றார். அதுபற்றி கேட்டே ன். அவர் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச் சிகளைக் கூறினார்.
 
‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுங்கள். எல்லோரு க்கும் பயன்படும்’ என்று கூறினேன். அதன் பிறகுதான் தன் வாழ்க் கை வரலாற்றை எழுத ஏற்பாடு செய்தார்.’  இவ்வாறு ராஜேஷ் கூறி னார்.
 
அதன் பின்னர் ‘சத்யா’, ‘மகாநதி’ முதலான படங்களில் கமலஹாச னுடனும், ‘மக்கள் என்பக்கம்’, ‘வாத்தியார் வீட்டுப்பிள்ளை’ போன்ற படங்களில் சத்யராஜ×டனும் ராஜேஷ் நடித்தார்.
 
திரைப்படங்களில் நடித்து வந்த ராஜேஷ், 1988-ம் ஆண்டு தேர்தலி ல் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் கட்சிக்கு ஆதரவாக பிரசா ரம் செய்தார். எம்.ஜி.ஆரிடம் வைத்து இருந்த அன்பின் காரணமாக, அவர் மனைவிக்காக பிரசாரம் செய் தார். இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது:-
 
‘எம்.ஜி.ஆரை சிறு வயது முதலே மாபெரும் சக்தியாகக் கண்டேன். நான் முதன் முதலாக, என் திருமண பத்திரிகையை கொடுப்பதற் காக, எம்.ஜி.ஆரை சந்தித்தேன். காளிமுத்துதான், என்னை எம்.ஜி. ஆரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
 
எனது திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வரவில்லை. அதன் பிறகு, 1987-ம் ஆண்டு எனது தங்கை திருமணத்திற்கு, எம்.ஜி.ஆர். வந்தார். அப் போது நான் எம்.ஜி.ஆரிடம் நடிகர் விஜயகாந்தை அறிமுகப்படுத்தி வைத்தேன்.
 
எனது வீட்டை திறந்து வைத்ததும், எம்.ஜி.ஆர்தான். ஒரு முறை, ‘கடவுள் வாழ்த்துப் பாடும்’ என்ற பாடலில் கத்தி யை அவர் லாவகமாக பிடித்த ஸ்டை லை பற்றி நான் குறிப்பிட்ட போது, அவர் கண் கலங்கிவிட்டார். நான் எம். ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா ஆகியோ ரை ரசித்தேன். அவர்கள் 3 பேரும் என் நடிப்புக்குள்ளும், என் வாழ்க்கைக்குள் ளும் இருப்பார்கள்.’ இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
 
1985-ம் ஆண்டு, ராஜேஷ் சொந்தமாக சென்னையில் ஒரு வீட்டை கட்டினார். கிரகப்பிரவேசத்துக்கு அப் போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். வந்திருந்து, குத்து விளக்கேறற்றி, வீட்டை திற ந்து வைத்தார்.
 
வீட்டை சிறப்பாக கட்டி முடித்த ராஜேஷ், அந்த வீட்டில் ஒரு நாள் இரவுதான் தங்கினார். 6 ஆண்டுகளில் கடன் பிரச்சினை காரணமாக வீட்டை விற்றுவிட்டார். இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது:-
 
‘1968-ம் ஆண்டு நான் சென்னைக்கு வந்தபோது, என் பெற்றோரிடம் ரூ.15 மட்டும் வாங்கி வந்தேன். சென்னையில் சித்தி வீட்டில் தங்கி, அவர்களிடம் கடன் வாங்கி படித்தேன். 2 ஆண்டுகளுக்கான படிப்பு செலவு 850 ரூபாயை திருப்பிக் கொடுத்தேன்.
 
1985-ம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கியும், சிலரிடம் கைமாற் றாகப் பணம் வாங்கியும் வீடு கட்டத் தொடங்கினேன். அந்த நேரத்தில் எனக்கு பட வாய்ப்பும் குறையத் தொடங்கியது. எனது புது வீட்டில் நான் ஒருநாள் மட் டுமே தங்கினேன். அந்த வீட்டில் குடியேறாமல், தொடர்ந்து வாட கை வீட்டிலேயேதான் இருந்தே ன்.
 
நான் புதிதாக கட்டிய வீட்டில் பல திரைப்பட படப்பிடிப்புகள் நடந்து வந்தன. முதலில் `மக்கள் என் பக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்த து. நடிகர் பாலாஜிதான் முதல் ஷூட்டிங்கை ஆரம்பித்து வைத்தார் .
 
இந்த வீட்டில் நடந்த படப்பிடிப்புகளில் சிவாஜி, ரஜினி, ரிஷிகபூர், அம்ஜத்கான் என அனைத்து மொழி நடிகர்களும் நடித்து உள்ளனர். மாதம் 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும்.
 
பிறகு ஒரு கட்டத்தில், படப்பிடிப்பும் குறையத் தொடங்கியது. கடன் பிரச்சினையும் இருந்து வந்தது. அதனால், 6 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டை விற்று விட்டேன். அந்த பணத்தைக் கொண்டு வங்கி கடனையும், சிலரிடம் கைமாற்றாக வாங்கிய கடனையும் அடைத் தேன். 1992-ம் ஆண்டு கடன்களை அடைத்து முடித்தேன்.’ இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
 
150 படங்களில் நடித்த ராஜேஷ்: கை கொடுத்த தொழில் ‘ரியல் எஸ்டேட்’
 
நடிகர் ராஜேஷ் 150 படங்களு க்கு மேல் நடித்தவர். எனினு ம், அவருக்கு தக்க சமயத்தி ல் கை கொடுத்து, அவரைவ ளமான வாழ்க் கைக்கு அழைத்துச் சென்றது வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்கும் ‘ரியல் எஸ்டேட்’ தொழிலாகும்.

 
பட உலகில் புகழ் பெற்று விளங்கியபோதே, எதிர்பாராமல் ஏற்பட்ட கடன் தொல்லையால், பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து கட்டிய வீட் டை விற்று, கடனை அடைத்தார், ராஜேஷ்.
 
கடனை தீர்த்தபின், மீதி இருந்த சிறு தொகையை ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்ய விரும்பினார். `எந்தத் தொழிலை தேர் ந்து எடுக்கலாம்’ என்று அவருக்குள் ஒரு மனப்போராட்டமே நடந் தது.
 
அந்த சமயத்தில் ராஜேசுக்கு கைகொடுத்தது ‘ரியல் எஸ்டேட்’ தொ ழில்தான். 1992-ம் ஆண்டு ‘ஜே.எஸ்.ஆர்’ என்கிற பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலை ராஜேஷ் ஆரம்பித்தார். நடிகர் கமலஹாசன் குத்துவிளக்கு ஏற்றி, அந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். தற்பொழுது ரியல் எஸ்டேட் பிசினசில் ராஜேஷ் புகழ் பெற்று விள ங்குகிறார். இதுபற்றி ராஜேஷ் கூறியதாவது:-
 
‘நான் வீட்டை விற்றதும் என்னைப் பார்த்து பதறியவர்கள் நடிகர் கமலும், ஜேப்பியாரும்தான். கமல் என் னிடம் வந்து, ‘படம் எடுங்கள். நான் நடித் து தருகிறேன்’ என்றார். ஆனால், ‘இயக்குனராக வேண்டும் என்ற ஆசை தான் எனக்கு இருக்கிறது’ என்று கூறி னேன்.
 
அந்தச் சமயத்தில், நான் எம்.ஜி.ஆருடன் பழகியதன் காரணமாக, என்னை சந்தித்த ஜேப்பியார், ‘ரியல் எஸ்டேட்’ தொழில் தொடங் கும்படி கூறினார். நான் இன்று நன்றாக இருக்க அவர்தான் காரணம். அவர்தான், தனியார் வங்கிகளில் எனக் காக கையெழுத்துப் போட்டு, கடன் வாங் கிக் கொடுத்தார்.
 
ரியல் எஸ்டேட் தொழில் வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கி றது.’இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
 
ரியல் எஸ்டேட் தொழிலுடன், தொடர்ந்து நடிப்பில் முத்திரை பதி த்து வரும் நடிகர் ராஜேஷ், ‘ஆட்டோகிராப்’ படத்தில் சேரனின் தந் தையாக நடித்து இருந்தார். படமும் மிகப்பெரிய வெற்றிப்படமா கியது.
 
தொடர்ந்து ‘பரமசிவன்’ படத்தில் நடித்தார். அதுமட்டுமின்றி தொ லைக்காட்சித் தொடர்களிலும் ராஜேஷ் நடித்து வருகிறார்.
 
இதுபற்றி அவர் கூறியதாவது:- ‘நான் 1982-ம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் டெலிவிஷன் தொடரில் நடித்தேன். தொடர்ந்து நடி த்து வருகிறேன். அப்போது, ‘சினிமா வில் நடித்து விட்டு, டெலிவிஷன் தொ டரில் நடிக்கிறாயே !’ என் று பலர் என் னிடம் கேட்டார்கள் .
 
அதற்கு நான், ‘சினி மாவின் குழந்தை தான் டெலிவிஷன். அது எதிர் காலத்தி ல் ஒரு பெரிய இட த்தைப் பிடிக்கும். சினிமாவுக்கு போ ட்டியாக வரும்’ என்றேன். அதுதான் தற்பொழுது நடந்து கொண்டு இரு க்கிறது.’ இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
 
ராஜேசுக்கு வாஸ்து ஜோதிடம், நாடி ஜோதிடம், ஜாதகம் போன்ற வையும் தெரியும்.ராஜேசுக்கு தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும், நடிகர் சங்கத்தின் ‘கலை செல்வம்’ விருதும் கிடைத்து உள்ளன.
 
1984, 1985-ம் ஆண்டுகளி ல் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடை த்தது.
 
ராஜேஷின் மனைவி பெயர் ஜோன்செல்வியா. மகள் திவ்யா, மகன் திலீ ப் பார்ட்டகஸ். இயக்குனர் மகேந்திரன், நடிகர் ராஜே ஷின் அத்தை மகன் ஆ வார்.
நன்றி – மாலை மலர் மற்றும் கூகுள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: