சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும் (கட்டுக்குள் வைக்கும்) இயற்கை அன்னையின் அற்புத மருந்து சிறுகீரை!
நோய் இல்லாமல் வாழ்வது என்பது இக்காலகட்டத்தில் நடக்குமா என்றால் சந்தேகமே. அவசர உலகத்தில் எல்லா மே அவசரமாக தான் நடக்கவேண்டும். நடையிலும் சரி, செயலிலும் சரி இத னால் பெரியோர்கள் மட்டும் அல்லாம ல் குழந்தைகளும் உடலளவில் பாதிக்க ப்படுகிறார்கள். அதிக டென்ஷன்தான் வியாதிகளுக்கு முதல் படியாக இருக்கி றது. இந்த மனஉலைச்சல்தான் இரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கு வழி வகுக் கிறது.
இந்த நீரிழிவு நோய், பெரியவர்களையும் மட்டும் அல்லாமல், இன் று குழந்தைகளையும் பாதிக்கிறது. இதற்கு காரணம் உணவு பழக்க ம் என்றாலும், முதலில் மன அழுத்தம்தான் காரணமாகிற து. இதை சரியாக தெரிந்து கொ ள்ளாத சிலர், “கட்டுபாடுடன் சாப்பிடும் எங்க ளுக்கு எப்படி நீரிழிவு நோய் வந்தது.?” என்று கேட்கிறார்கள். மருத்துரிடம் கேட்டால், “உங்கள் பரம்பரை யில் யாருக்காவது சர்க்கரை வியாதி இருக்கிறதா என்றும், அல்லது மனஉலைச்சல் அதிக மானால் இருதய பாதிப்பு தவிர, நீரிழிவு நோயும் வர வாய்ப்பிரு ப்பதால், உங்களுக்கு சர்க்கரை நோய் வந்ததற்கு இந்த இரண்டில் ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்” என்பார்கள்.
சர்க்கரைவியாதி வந்துவிட்டால் மருத்துவர் சொல்வதுபோல் மருந்துகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அத்துடன் உணவு கட்டப்பாடும், சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வ தும் அவசியம்.
சிறுகீரை
ஆரோக்கிய உணவுக்கு கீரைகள் மிக முக்கிய இடம் பிடிக்கிறது. கீரை உணவுகள்தான் எல்லா நோய்க ளுக்கும் மருந்தாக இருக்கிறது. அதி ல் சிறப்பாது சிறுகீரை. மதியம் சாப் பிடும் உணவில் சிறு கீரையை ஒரு நாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டு வந் தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக் குள் இருக்கும் என்கிறது இயற்கை வைத்திய ம்.
சிறுகீரை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை யின் அளவை குறைக்கும். பாதிப்ப டைந்த கணையச் சுரப்பியை மீண்டும் உயிர்பித்து செயல் பட வை த்து இன்சுலின் மிகுதியாக சுரக்க உதவுகிறது.
நாம் சாப்பிடும் உணவுகளில் சில வகை உணவுகள் நச்சுத் தன்மை உண்டாகி (Food Poison) பாதிப்பை தரும். “எதனால் இப்படி ஆனது? தினமும் சாப்பிடும் உணவு தா னே” என்ற சந்தேகம் மனதில் எழும். என்ன செய்வது? நேற்று போல இன்று இல்லை, இன்று போல நாளை இருக்குமா என் றால் எப்படி சொல்ல முடியும்? எதுவும் மாறும். வாழ்க்கை மட் டுமல்ல உடல்வாகும் அப்படி தான். இப்படி நஞ்சுத்தன்மை யை உடலில் இருந்து எடுக்கும் சக்தி சீறுகீரைக்கு இருக்கிறது.
அதேபோல மலசிக்கலுக்கு பல மருந்துகள் இருந்தாலும், இயற்கை மருந்தாக சிறுகீரை செயல்படுகிறது. சிறுகீரையை சாப்பிட்டு வந்தால் மலசிக்கலே வராது. மலசிக்கல் இல்லாமல் இருந்தாலே வியாதிகள் நம் உடலில் அண்டாது. மலசிக்கல்தான் உடலுக்குள் பல சிக்கல்களை தூண்டிவிடுகிறது.
சிறுகீரையை ஒருநாள் விட் டு ஒருநாள் இப்படி தொடரந் து இரண்டு மாதங்கள் சாப்பி டலாம் அல்லது சூப்பாக வை த்தும் சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக அவர்களுக்கு சர்க்கரை கட்டுபாட்டுக்குள் வரும் என்ப தை ரத்தத்தை பரிசோதித்து பார்த்தாலே தெரியும்.
சிறுகீரையை எப்படி சமைக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். சிறுகீரையை காம்புடன் கிள்ளி, அதை பொடி பொடியாக நறுக்கிக் கொண்டு, அதி ல் இருக்கும் மண் போகும் அளவுக்கு நன்றாக தண்ணீரில் அலசி விட்டு, சமைக்க வேண்டும். சமையலில், துவரம் பருப்பு, இஞ்சி, பூ ண்டு, வெங்காயம், மிளகு-சீரகம் போட்டு, நெ ய்யில் நன்றாக வதக்கி, அதில் சிறுகீரை சேர் ந்து வதக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் ஊற்றாமல் தேவையான அளவு தண்ணீர் ஊ ற்றி சமைத்து சாப் பிட்டால், நிச்சயம் சர்க்க ரை அளவு கட்டுபாட்டுக்குள் வரும். சர்க்க ரை வியாதி இல்லாதவர்களும் சிறு கீரை சாப்பிடலாம். இதனால் சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும். இயற்கை அன்னையின் அற் புத மருந்து சிறுகீரை.
நன்றி – நிரஞ்சனா, பக்தி ப்ளானெட்
Good advice
useful article , thankyou very much.