தமிழ் சினிமாவின் ராசியான கூட்டணியாக வலம் வந்த சூர்யா – கவுதம் மேனன் கூட்டணி மீண் டும் இணையவிருக்கிறது. இரு வரும் ஏற்கெனவே இணைந்த காக்கா காக்க, வாரணம் ஆயிர ம் என இரண்டுமே மெகா ஹிட் டானது.
இவர்கள் இணையும் புதிய படத்திற்கு துப்பறியும் ஆனந்த ன் என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தை கவுதம் மேனனின் சொந்த நிறுவனமான போட்டான் கதா ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
விஜய் நடிக்கும் ‘யோஹன் அத்தியாயம்-1’ படம் முடிந்ததும் துப்பறியும் ஆனந்தன் படத்தை இயக்குகிறார் கவுதம்.
இப்படம் பற்றி சூர்யா கூறும்போது, கவுதமும், நானும் இணைந்து பணி செய்யும்பட்சத்தில் எங்களிடம் இருந்து இனி மையான பாடல்கள் பிரத் யேகமான ஆக்ஷன் காட்சி களுக்கு மிகுந்த எதிர்பார்ப் பு உண்டு. துப்பறியும் ஆன ந்தன் எல்லாதரப்பு மக்களி ன் ரசனைக்கேற்ப இது வரை வந்திராத வகையி ல் பிரமாண்டமாக அமை யும்’ என்றார்.
கவுதம் மேனன் கூறும்போது, ‘சூர்யாவுடன் மீண்டும் இணைவது உற்சாகமாக உள்ளது. இப்படத்தில் கதைகேற்ற காலக்கட்டத்தின் முக்கியத்துவம் கருதி பிரத்யேக கவனம் மேற்கொள்ளப்பட்டு உள் ளது’ என்றார்.
news in malaimalar