தனக்கு ஒரு ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவனுக்கு 10 ரூபாய் இழப் பை ஏற்படுத்த துடிக்கும் இந்த காலக்கட்டத்தில் வாடகை தர மறுத் 
த பயணி தவறவிட்ட பணத் தை ஒப்படைத்து, போலீசாரை யே மெய் சிலிர்க்க வைத்துள் ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.
த பயணி தவறவிட்ட பணத் தை ஒப்படைத்து, போலீசாரை யே மெய் சிலிர்க்க வைத்துள் ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.
சென்னை போரூரை சேர்ந்த வர் ஆட்டோ டிரைவர் பாலாஜி (54). நேற்று இரவு ராயப்பேட் டையில் சவாரிக்காக காத்திரு ந்தார். நள்ளிரவில் 50 வயதை கடந்த ஒரு பயணி யானைக் கவுனிக்கு செல்ல ஆட்டோவை வாடகை பேசினார். ரூ.80 கட்ட ணம் பேசி பாலாஜி அவ ரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக் கவுனியை சென்றடைந்ததும் நன்றாக போதையில் இரு ந்த அந்த ந பர் வாடகை தரமறுத்து தகரா று செய்தார்.
சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதா க இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி கட்டணம் வாங்காமலேயே பாலாஜி திரும்பி சென்றார்.
ஸ்டாண்டுக்கு சென்றபிறகு ஆட்டோவில் ஒரு மஞ்சள் பையை
பார்த்தார். அந்த பையில் ரூ. 95 ஆயிரம் பணம் இருந்தது. பணத்தை குடிகார பயணி தவறவிட்டு சென்றதை யூகி த்து கொண்ட பாலாஜி வாட கை தரமறுத்ததால் பணத் தை அமுக்க முயலவில்லை .
இன்று காலையில் பணத்தை யானைக்கவுனி போலீசில் ஒப்படை த்து நடந்த விவரங்களை கூறினார். ஆட்டோ டிரைவரின் நேர்மையை நினைத்து மெய்சிலிர்த்த போலீசார் அந்த பயணியை அவர் இறக்கி விட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தேடி கண்டுபிடித்த னர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தான் போதையில் நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரிய அந்த நபர், ஆட்டோ டிரைவருக்கு சன்மானம் தரவும் முன்வந்தார். ஆனா ல் டிரைவர் பாலாஜி தனக்கு வாடகை பணம் ரூ.80 மட்டும் போதும் என்று வாங்கி சென்றார்.
news in malaimalar