Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை மலடிகளாக்கும் பி.சி.ஓ.எஸ்

`பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் `பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்’ பாதிப் பு பெண்களிடம் தற்போது பெருகிக் கொ ண்டிருக்கிறது. இதனால் பெண்க ளிடையே குழந்தையின்மை பிரச்சி னைகளும் பெருகி வருகின்றன என்கி ன்றனர் மருத்துவர்கள்.

தாய்மையடைய முடியாமல் தவிக்கு ம் பெண்களில் 60 சதவீதம் பேர் `பி.சி. ஓ.எஸ்` பாதிப்பிற்குள்ளானவர்களாக இருக்கிறார்கள், என்கிறது சமீபத்திய ஆய்வு. பி.சி.ஓ.எஸ். என்றாலே மாத விலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சினைப்பையில் கட்டி இருக்கவேண்டும் என்பதில்லை. இவை இரண்டும் சரியாக இருந்தாலும், பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக் கும். பி.சி.ஓ.எஸ். பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது தாய்மைக்கு தடையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சி.ஓ.எஎஸ் நோயின் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை செய்து கொள்கிறவர்கள் 40 சதவீத ம் என்றால், 60 சதவீதம்பே ர் அறிகுறியை உணராமல் அந்த நோய்த் தன்மையுட னே வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள். மற்ற நோய்களை ப்போல் இதையும் தொடக்க த்திலே கண்டறிந்தால், எளி தாக கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

இந்த நோயாளிகளில் 30 சதவீதத்திற்கு குறைவான வர்களுக்கு மட்டுமே மாத விலக்கு கோளாறு ஏற்படுகிறது. 9-10 வயது சிறுமிக ளாக இருக்கும்போதே பெற் றோர், அவர்களை கவனித்தா ல், பி.சி.ஓ.எஸ்.பாதிப் பை தொ டக்கத்திலே கண்டறிந்து விட லாம். நோய் பாதிப்பை கண்டு பிடித்து, கட்டுப்படுத்தாம லே விட்டால் அது இதய நோய் மற் றும் சர்க்கரை நோய் உருவாகு ம் சூழலை அதிகரிக்கும். குழந் தையின்மைக்கும் இது முக்கி ய கார ணமாகும்.

சிறுமிகளாக இருக்கும்போதே மார்பக வளர்ச்சி அதிகமாக இருப் பது பி.சி.ஓ.எஸ் ன் முக்கி ய அறிகுறியாகும். மேலும் சிறு வயதி லே பூப்படைவது, அதிக எடை, அளவு க்கு அதிகமாக மெலிந்து போதல், எப் போதும் படுக்க வேண்டும் என்று தோன் றுதல், படுத்தால் தூக்கம் வராத நிலை ஏற்படு ம். பின் கழுத்து, கை மூட்டுகள், கையை மடக்கும் பகுதிகளில் கறுப்பு நிறம் பட ருதல், முகத்தில் கறுப்பு படை தோன்றுதல், முகத்தில் எண்ணைத் தன் மை அதி கரித்தல். காலை நேரங்களில் மூக்கில் மட்டும் அதிக எண்ணைத் தன் மை தோ ன்றுதல், ஒற்றைத் தலைவலி போன்ற வையும் பிசிஓஎஸ்ன் அறிகுறி களாகும்.

இவை அனைத்தும் இன்சுலின்- லெப்டின் ஹார்மோன்களின் சமச் சீரற்ற தன்மையால் தோன்றுவதாகும். முகத்தின் கீழ்பாகம் மட்டு ம் குண்டாகுதல், பற்கள் முன்நோக்கி துறுத்துதல், மார்பு பகுதியும்- தோள் பகுதியும் மட்டும் பெரிதாகுதல், கழுத்து குண்டாகுதல் போ ன்றவை ஸ்டீராய்ட் ஹார் மோனால் ஏற்படும் பாதிப்பா கும்.

ஆறு மாதங்கள் வரை மாத விலக்கு வராமல் இருத்தல், வந்தாலும் ஒன்றிரண்டு நாட் களில் முடிந்து போதல், அல் லது நிற்காமல் வெளியாகிக் கொண்டிருப்பது, குழந்தையி ன்மை, 90 நாட்களுக்கு ள் அபார்ஷன் ஆவது, மீசை வளர்தல், தாடி வளர்தல், உடலில் தே வையற்ற இடங்களில் எல்லாம் முடி வளர் தல், மிக அதிகமாக தலை முடி உதிர்தல் போன்றவைகளும் பி.சி .ஓ.எஸ். அறிகுறிக ளாகும்.

பி.சி.ஓ.எஸ் பிரச்சினைக்கு சரியா ன சத்தான உணவுகளை உட் கொள் ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தினசரி 1200 கலோரி அளவுள்ள உணவுகளை சரி விகிதமாக உட் கொள்ள வேண் டும். அதில் 40 சதவிகிதம் கார்போ ஹை டிரேட் உணவுகள் எடுத்துக் கொள்வ து நலம் என்கின்றனர் நிபுணர்கள். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவைகளை உணவில் சேர்த் துக் கொள்ள வேண்டும் என்றும் நிபு ணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மதிய நேரத்தில் கொழுப்பு குறைந் த உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதனுடன் இனிப்பு சேர்க்கா த யோகர்டு எடுத்துக் கொள்ளலாம் என்றும் நிபு ணர்கள் கூறியுள்ள னர்.

இரவு நேரத்தில் பழுப்பு அரிசி, வேக வைத்த மீன், ஆலிவ் ஆயில் சேர்த் துக்கொள்ளலாம். இரவு நேரத்தில் மொத்தம் 330 கலோரி உணவுகளை மட்டுமே உட்கொண்டால் போதும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் பி.சி.ஓ.எஸ் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கள் கூறியுள்ளனர்.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: