தோகைமலை ரோடு, தாயனூர் அஞ்சல், திருச்சியில் இயங்கிவரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் “உதயம் வாழை’ என்னும் ரகத்தினை கண்டுபிடித் துள்ளது. இந்த புதிய ரகம் விவசாயிகள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வருகின் றது. புதிய ரகம் கற்பூரவல்லி ரகத்தை ஒத் தது. மற்றும் வயது ஒரு மாதம் குறைவு. மறுதாம்பிலும் நிலையான மகசூல். இலை ப்புள்ளி நூற்புழு தாங்கி வளரக்கூடியது. சீப்புகளிடையே அதிக இடைவெளி. அதிக சர்க்கரைச்சத்து (31%). ஜுஸ், ஒயின்போன் ற மதிப்புக்கூட்டப்பட்ட வாழை உட்பொரு ட்கள் தயாரிக்க ஏற்றது. ஆராய்ச்சி மையத் தில் பணிபுரியும் முனைவர் உமா விவசா யிகளுக்கு புதிய ரகத்தின் கன்றுகளை கொடுத்து அதன் சிறப்புகளை தெரிந்து கொ ள்ள அரும்பாடு பட்டுள்ளார்.
இவரிடம் கன்றுகளை வாங்கி நட்டு அதன் சிறப்புகளை நன்கு தெரிந் திருப்பவர் பிரபலவாழை வி வசாயி எஸ்.சுந்தரம். (43, க டைவீதி, திருக்காட்டுப் பள்ளி – 613 104, தஞ்சாவூர்) இவர் வாழை ஆராய்ச்சி நிலையத் திற்கு ஒத்துழைப்பு நல்கிய தோடு தானும் விவசாயிக ளை அணுகி உதயம் வாழை யை சாகுபடி செய்யச் சொல் கிறார். இவர் விவசாயிகளை திசு வளர்ப்பு கன்றுகளை சாகுபடி செய்யச் சொல்கி றார். வெளியில் கிடைக்கும் கன்றுகளை வாங்கி நடுவது சரியில்லை என்கிறார். இ தோடு இவர் சில குறிப்புகளையும் கொடுக்கிறார். வாழை நடுவதற் கு ஒரு மாதம் முன் நுண்ணுயிர் கலவை தயார் செய்ய வேண்டும்.
ஏக்கருக்கு 2,000 கிலோ மகசூல். தென் னை நார் கழிவோடு தலா நான்கு கி லோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பா க்டீரியா, சூடோ மோனாஸ், டிரைக்கோ டெர்மா விரிடி கலந்து நிழலில் வைத்து லேசான ஈரப்பதம் இருக்குமாறு தினமு ம் தண்ணீர் தெளித் துவர வேண்டும். இத னால் நுண்ணுயிர்கள் பன் மடங்கு உய ரும். அதேபோல தேர்வுசெய்து இருக்கும் நிலத்தை முன்கூட்டியே உழ வுசெய்து சணப்பு விதைகளை விதைக்க வேண் டும். இது உயரமாக வளரும். இதன் நிழ லில்தான் வாழை நடவுசெய்ய வேண்டு ம். வரிசைக்கு வரிசை 9 அடியும் மரத்தி ற்கு மரம் 9 அடியும் ஒரு கன அடி அளவில் குழி எடுத்து ஏற்கனவே தயார் செய்த நுண்ணுயிர் கலவையை தலா 3 கிலோ வீதம் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவிற்குபின் மண்ணை நிரப்ப வேண்டும். பாசனம் கவனித்து செய்ய வேண்டும். நடவு செய்த
15ம் நாளிலிருந்து ஒரு அடி விட்டு சண ப்பை அறுத்து வாழைக்கன்றுக ளை சுற்றி மூடாக்கு போட வேண் டும். 20 நாட்கள் கழித்து சணப்பு முழுவதையும் மடக்கி உழவு செ ய்ய வேண்டும். வாழைக் கன்றுக ள் வளர்ந்து வரும் போது வாழை நிபுணர்கள் சொல்லும் எரு, உரங் கள் இடவேண்டும். மரங்களின் மேல் நீரில் கரையும் உரங்களையு ம் ஒட்டு திரவத்துடன் தெளிக்க வேண்டும். விவசாயிகள் சிரமப்பட் டு நுண்ணூட்ட சத்து உரங்கள் போட வேண்டும். விவசாயிகள் நிபு ணர்களை அடிக்கடி அணுகி விவரங்கள் பெற்று அதன்படி செயல் பட வேண்டும். இதே போன்று பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடை பிடி த்து வியாதிகள் வராமல் தடுக்க வேண்டும். பழ வெடிப்புகள் வரக் கூ
டாது. உதயம் வாழை சாகுபடி செய்து அனுபவம் பெறவேண்டு ம். புதிய ரகத்தின் சாகுபடி நுட்ப ங்கள் சற்று கடினமானது. உதய ம் வாழையின் தார் ரூ.1,000 வி லைக்கு போகின்றது. ஒரு தார் உற்பத்தி செய்ய மொத்த செலவு ரூ.350 ஆகும். நிகரமாக ஒரு தாருக்கு ரூ.650 கிடைக்கு ம். வியாபாரிகள் பயமில்லாமல் உதயம் வாழைத் தாரினை விற் கலாம். தமிழகத்தில் உயரம் ரக த்திற்கு நல்ல எதிர்காலம் உள்ள து. விவசாயிகள் சாகுபடி முறைகளை கை யாண்டு அதிக உற்பத்தி செய்யவேண்டும். நிபுணர்களிடம் குறிப்புகளை தெரிந்துகொண்டு சாகுபடி செய்ய வேண்டும்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.