Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் – அதிகரிக்கும் ஆதரவு – ஆய்வு ஒன்றில் பகீர் தகவல்

இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் இளைய தலைமுறையி னரிடையே திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது தவறில்லை என்ற கருத் து நிலவுகிறது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன் றில் திருமணத்திற்குமுந் தைய செக்ஸ்க்கு 40 சத விகிதம் பேர் வரை ஆதர வு தெரிவித்துள்ளனர்.

காமசூத்ரா காண்டம் தயா ரிப்பு நிறுவனம் சமீபத்தி ல் ஒரு வித்தியாசமான கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொண்டது. இதில் சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை உள்ளிட்ட 10 இந்திய நகரங்களில் வசிக்கும் 17 ஆயிரத்து 45 இளை ஞர், இளை ஞிகள் பங்கேற் றனர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப் பட்டன. அதில் அதிர்ச்சிகரமான தக வல்களோடு சில சுவாரஸ்ய மான தகவல்களும் தெரியவந்தன.

திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொண்டது உண்டா என்று கேட்கப்பட்டதற்கு, 49 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். இப்படி கூறியவர்கள் பெரும்பாலோர் 18 முதல் 24 வயது உள்ளவர்கள் என்ப துதான் வேதனை. இதை விடக் கொடுமை என்னவென்றால், இவர் களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஒருவருக்கு மேல் செக்ஸ் உறவு கொண்டுள்ளனர் என்பதும் இந்த சர் வேயில் தெரிந்தது.

சினிமாக்களாலும், டி.வி தொடர்க ளாலும் தான், திருமணத்துக்கு முந் தை செக்ஸ் உறவு பற்றி தெரியவந்தது. அது தான் மக்களை கெடு க்கிறது என்று சொல்வதும் எந்தளவு உண்மை என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது.

பெரும்பாலோர், நண்பர்கள், புத்தகம் படிப்பதன் மூலம், அடுத்து நீலப்படம் பார்ப்பது மூலம் தான் திருமணத்துக்கு முந்தைய செக் ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதாக கூறியுள்ளனர். இது 73 சதவீத ம் என்றால் பார்த்துக் கொள்ளு ங்கள். அடுத்து ஓரினச் சேர்கை யும் சமுதாயத்தில் கணிசமா ன அளவு அதிகரித்துள்ளது என் பதும் சர்வேயில் தெரிய வந்த து. இந்த சர்வேயில், வருந்தத் தக்க விஷயம் என்னவென்றா ல் எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய பயமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது என்பதுதா ன். கருத்தடை சாதனம் பயன் படுத்த வேண்டும் என்பது சிலருக்குதான் தெரிந்துள்ளது.

அதுபோல, காண்டம் பயன்படுத்துவோரில் சர்வேயில் பங்கேற்ற வர்கள் என்று பார்க்கும் போது, சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் தான் அதிகபட்சமாக 17 சதவீத ம் பேர் தைரியமாக தங்கள் கரு த்துக்களை கூறியுள்ளனர். அடு த்து, மார்கெட்டிங், வர்த்தகத் துறைகளில் உள்ள நிர்வாகிக ள், உயர் நிர்வாக பதவியில் உள்ளவர்கள் 13 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.

செக்ஸ் உறவு கொள்ள ஏற்ற இடம் என்றால், அது அவரவர் படுக்கை அறைதான். ஆனால் சிலருக்கு அதிலும் குறிப்பாக இன் றைய இளைய சமுதாயத்தினருக்கு பிடித்த இடம் காரும், பூங்காவு ம் தானாம். அடுத்ததாக பாத்ரூம் சரியான இடம் என்று கூறியுள் ளனர். செக்ஸ் உறவுக்கு ஏற்ற நேரமாக வாரநாட்களில் இரவி லும், வார விடு முறை நாட்களில் பகலிலும் உறவு கொள்வதாக பெரும் பாலோனோர் கூறியுள்ளனர்.

 { { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.- விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply