Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மெரினாவில் சிக்கிய அபாயகரமான ராக்கெட் லாஞ்சர்

உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது கடற்கரை எனப் புகழ் பெற்றது சென்னையிலுள்ள மெரினா கடற்கரை. தமிழகத்தின் சுற்று லாத் தலங்களில் ஒன்றானதும் சென்னை வாசிகளின் பொழுது போக்கு தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றானதுமான மெரினா கடற்கரை பலரையும் வசீகரிக்கும் இடமாகும்.

மாலை வேளைகளில் காற்று வா ங்கும் இடமாகவும், காதலர்களின் கூடாரமாகவும் திகழும் இந்த கட ற்கரையில் நேற்று மாலை இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொ ண்டிருந்தனர். அப்போது மணலில் ஏதே ஒன்று புதைந்திருந்ததை அந் த இளைஞர்கள் கண்டு பிடித்தனர்.

அது வித்தியாசமான பொரு ளாக இருக்கவே, மெரினா கடற்கரை போலீசாரிடம் தெ ரிவித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில் அது ராக் கெட் லாஞ்சர் கருவி என்பது உறுதியானது. இதனால் அதி ர்ச்சிக் குள்ளான மெரினா கடற்கரை போலீசார், இது குறித்து உயரதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும், அபாயகரமான ராக் கெட் லாஞ்சர் கருவி மக்கள் நடமாட்டம் மிகுந்த மெரினா கடற்கரை க்கு எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

news in malaiamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: