Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னை அண்ணா மேம்பாலத்தில் நெஞ்சை பதற வைக்கும் "கோர‌ விபத்து"

சென்னையில் இன்று மதியம் மனதை பதறவைக்கும் விபத்து நடந்தது. இன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை அண்ணா மேம் பாலத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு: 

சென்னை பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு இன்று மதியம் 17 எம். என்ற தடம் எண் கொண்ட ஒரு பஸ் சென் று கொண்டிருந்தது. அந்த பஸ் அண்ணா மேம்பாலம்  வழியாக தி.நகர் சென்று வட பழனியை சென்றடையும் பஸ் ஆகும். 

அந்த பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். அண்ணா மேம் பாலத்தில் ஏறி தி.நகர் நோக்கி செல்லும் பாதையில் அந்த பஸ் திரும்பிய போது நிலைதடுமாறியது. டிரைவர் கட்டுப்பாட்டை மீறி பஸ் ஒருபக்கமாக சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ் பாலத் தில் இருந்து தடுப்பு சுவரை உடை த்துக் கொண்டு தலைக் குப்புற பாய்ந்தது. 

தலைகீழாக கவிழ்ந்த பஸ்ஸின் இடிபாடுக்குள் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதில் 30 பயணிகள் காயம் அடைந்தனர். 

தகவல் அறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்ப வ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்ப த்திரிக்கு கொண்டு சென்றனர். மீட்பு பணி நடந்து வருகிறது. 

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங் கியது. விபத்து பற்றி பெண் பயணி ஒருவர் கூறுகையில் மேம் பாலத்தில் திரும்பும்போது டிரைவரின் இருக்கை திடீரென கழன்று விட்டது. இதனால் பஸ் அவர் கட்டுப்பாட்டை மீறி பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து விட்டது என்றார். 

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து ச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

news  in malaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: