Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2007-ல் இறந்த ஒரு கைதியின் தண்டனையை 2012-ல் குறைத்த‍ ஜனாதிபதி

பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையா கக் குறைத்து கருணை காட்டியுள் ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீ ல்.

இவரால் கருணை காட்டப்பட்டவர், பிரதீபா பாட்டீல் சார்ந்த மகாராஷ்டி ர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் பாண்டு பாபுராவ் திட்கே. அவர் கடந்த 2002ம் ஆண்டு பகல்கோட்டில் உள்ள ஜூலியால் தாலுகாவில் குடியேறி, சதாசிவ அப்பண்ணா மடத்தில் தங்கியிருந்தார். அவர் மடத்தின் அருகிலுள்ள பள்ளிக் கூடத்திலிரு ந்து 16 வயது சிறுமியை கடத்தி வந்து மடத்தில் வைத்து கற்பழி த்து, கொலை செய்து விட்டு தலைமறைவானார். நான்கு நாட்கள் கழித்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் கொடுத்த தகவலின் படி சிறுமி உடல் கண்டெடுக் கப்பட்டது. தொடர்ந்து ஷீரடி யில் வைத்து பாபுராவை போலீசார் கைது செய்தனர்.

வழக்கை விசாரித்த மாவட் ட நீதிமன்றம் பாபு ராவுக்கு 2005ம் ஆண்டு தூக்கு தண் டனை விதித்தது. இதை எதி ர் த்து அவர் மேல்முறையீடு செய்தபோது உயர்நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. பெல்காம் சிறையில் அடை க்கப்பட்டிருந்த பாபு ராவ் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். கடந்த ஜூன் 20ம் தேதி, குடியரசுத் தலைவரின் பார்வை க்கு கருணை மனு வந்தபோது பாபுராவின் தூக்கு தண்ட னையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அவர் கையெழுத்திட் டார்.

ஆனால் பாபுராவ் பெல்காம் சிறையில் இருந்தபோது எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு 2007ல் தனது 31வது வயதில் இறந்து விட்டார். இந்த தகவலை குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அலுவலகத்துக்கு முறைப்படி கர்நாடக சிறை அதிகாரிகளோ, உள்துறை அலுவலகமோ தெரிவிக்கவில்லை. அத னால் கவனக்குறைவு காரணமாக நடந்த சம்பவம், பிரதீபா பாட்டீலின் முடிவு விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

(முகநூலில் பகிரப்பட்ட‍ தகவல்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: