Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம்

அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவி: ஜெயலலிதா உத்தரவு
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியி ட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சென்னை- பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண் டிருந்த மாநகர பேருந்து அண்ணா மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட் டை இழந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பய ணம் செய்த 38 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
 
இந்த துயர சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருத்துவ மனைக ளில்
still by vidhai2virutcham

அனுமதிக்கப்பட்டு சிகிச் சை பெற்று வருபவர்களு க்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்து வமனை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளே ன். மேலும், இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை யும் தெரிவித்துக்கொள்கி றேன்.
 
இந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்த ரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
news in malaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: