Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பவர் பாய்ண்ட் ஸ்லைடுகளில் MP3 இணைக்க

மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் பைல் களை உருவாக்கு பவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்னை அதில் எம் பி3 பாடல்களை இணைப்பது தான்.
 
இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம் ஒன்றை அண்மை யில் காண நேர்ந்தது. MP3 AddIn என்ற இந்த புரோகிராமின் மூலம், எம்பி3 பைல்களை, எளிதாக, அவற்றின் பார்மட்டினை மாற்றாமல், ஸ்லைடு களில் பதிந்து கொள்ளலாம்.
 
எம்பி3 பைல்களை, பிரசன்டேஷனில் பதிய வேண்டுமாயின், அவற் றை வேவ் பார்மட்டிற்கு மாற்ற வேண்டும். எனவே பலரும் இதனை வேறு ஒரு புரோகிராம் மூலம் பார்மட்டினை மாற்றிப் பின் அதனை பிரசன்டேஷன் பைலில் இணைப்பார்கள்.
 
MP3 AddIn புரோகிராம் இந்த சிக்கலைத் தீர்க்கிறது. இது பைலில் ஹெடர் ஒன்றை இணைத்து, இதனை வேவ் பைல் போலக் காட்டி, பிரசன்டேஷன் புரோகிராமினை ஏமாற்றுகிறது. வழக்கமாக வேவ் பைலாக மாற்றுகையில், பைலி ன் அளவு பெரிதாகும்.
 
இந்த புரோகிராம் பைலில் ஹெட ர் ஒன்றை மட்டும் இணைப்பதா ல், இந்த பிரச்னை எழுவதில்லை. மொத்த பைலின் அளவும் 2 பைட் மட் டுமே அதிகரிக்கிறது.
 
மேலும் இந்த பிரசன்டேஷன் பை லை மற்றவர்களுக்கு அனுப்புகையில், எம்பி3 பைலையும் தனியே இணைத்து அனுப்ப வேண்டியதில்லை.
 
பிரசன்டேஷன் பைலுடன் இணைந்தே இசைக் கோப்பும் செல்கிறது.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: