ஈராக்கில் நேற்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 22 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வாசாஷ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்
டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 8 பேர் உடல் சிதறி பலியாயினர். 26 பேர் படுகாயம் அடைந் தனர்.

அடுத்த சில மணி நேரங்க லிலேயே, தெற்கு பாக்தா த்தில் ஒரு இடம், வட மே ற்கு பாக்தாத்தில் 2 இடங் கள், அன்பார் மாகாணத் தில் ரமடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ரமடியில் கார் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவங்களில் மொத்தம் 14பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந் தனர்.
குண்டுவெடிப்புகள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன ர். அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய சன்னி முஸ்லிம்களே இந்த குண்டுவெடிப்புகளை நடத்தியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
news in malaimalar