Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"என் கன்னத்தில முத்தமிட்டு என்னை வாழ்த்தினாங்க" – நடிகை சுஜிதாவுடன் சூப்ப‍ரா ஒரு பேட்டி

மூன்று மாத குழந்தையாய் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜிதா. இன்றைக்கு மணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையி லும் சின்னத்திரையில் கதாநாய கியாய் நடித்து வருகிறார். சன் தொலைக் காட்சியில் மருதாணி, மெகா தொலைக் காட்சியில் வாழ்வே மாயம், மலையாளத்தில் சீரியல் என சென்னை, கேரளா, ஆந்திரா என பிஸியாக இருக்கி றார். அவரை சிரமப்பட்டு பிடித் து சீரியல் வாழ்க்கை குறித்து கேட்டோம்.

சினிமாவை விட, “டிவி’யே என க்கு சரின்னு பட்டது, இந்த பீல்ட்டு பற்றி நானெடுத்த முடிவு சரியா இருந்ததால வாழ்க்கையும் நல்ல படியா அமைஞ்சு சந்தோஷமா யிருக்கிறேன்” என்று மகிழ்ச்சியோடு பேட்டியை தொடங்கினார்.

சென்னையிலதான் வீடு இருக்கு. ஆனா தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளிலும் சீரியல் இருப்பதால் சென்னையில் தொடர்ந் து தங்க முடியலை. கேரளா, ஆந்திரான்னு பறக்க வேண்டியதா போச்சு.என் கணவர் சென்னையி ல விளம்பர படக்கம்பெனி வச்சி ருக்கார். சீரியல்கள்ல நல்ல வாய் ப்பு கிடைச்சதால ஒர்க் பண்ண அனுமதிச்சிருக்கார். நான் இங்கு ம் அங்குமா பறப்பதை பார்த்துட் டு உனக்கு சிரமாயிருந்ததுன்னா விட்டுடு. டெக்கனிக்கல் அயிட்ட ங்களை கத்துக்க கம்பெனிக்கும் உதவியா இருக்கும், உனக்கு கி டைக்கும் அனுபவம் பயனுள்ளதா இருக்கும்ன்னு சொன்னார். நடிப்பை தவிர வேறு எதிலும் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லாததால சீரியல்களுக்காக ஊர், ஊரா பறந்திட்டிருக்கேன்.

குழந்தையாக இருக்கும் போதே அம்மா என்னை சினிமாவில விட் டுட்டாங்க. நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். என்னோட என் அண்ணன் சுரேஷும் குழந்தை யாக இருக்கும் போதே நடிக்க வந்து ட்டான். ஹீரோயினியா க நடிக்கணும்ங்கிற ஆசை அப் போதே இல் லை. இருந்தாலும் எனக்கு 14 வயதிருக்கும் போது சினிமாவில் நடிக்க சில வாய்ப் புகள் வந்தது. கிளாமரா நடிக்க ணும்ன்னு சொன்னாங்க. முடி யாதுன்னு சொல்லிட்டேன். பட த்தில கூட கிளாமரா நடிக்க வே ண்டாம். பப்ளிசிட்டிக்காக கிளா மரா போஸ் மட்டும் கொடுங்க ன்னாங்க. உறுதியா மறுத்திட் டேன். சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கிய மானது. ஹீரோயினாக நடிக்க ணும்ன்னு நான் ஆசை பட லை. ஏன்னா சினிமாவில் ஹீரோயி னி யாக நடிக்கணும்ங்கிற ஆசையில சினிமாவுக்கு நான் வரலை.?

ஏ.வி.எம்.., நிறுவனத்தின் ஐம்பதாம் ஆண்டுவிழாவுல சிறந்த குழ ந்தை நட்சத்திரத்துக்கான விருது எனக்கும், எனது அண்ணன் சுரே ஷிற்கும் கிடைச்சது. அப்போது அவ ங்க தயாரிச்ச “ஒரு பெண்ணின் கதை’ சீரியலுக்கு 14 வயசுள்ள பெண் தேடிட் டிருந்தாங்க. என்னை பார்த்ததும் நடி க்க அழைச்சாங்க. கதையும் பிடிச்சி ருந்தது. சரின்னு சொல்லிட்டு செஞ் சேன். தமிழ், மலையாளம், தெலுங்கு என சீரியல்களில் நான் நினைச்ச மாதிரி நிறைய வாய்ப்புகள் வந்தன. என்னோட கேரக்டர் நல்ல படியா என க்கு பிடிச்ச மாதிரி அமை ஞ்சதால நடிச்சேன். என்னை பார்ப்பவர்கள் மரியாதையாக பழகுறாங்க. அவுங்க குடும்பத்தில ஒருத்தங்க மாதிரி சினேகம் பாராட்டுறாங்க. சமீ பத்தில ஒரு பாட்டி என்னை சந்திச்சப்ப கன் னத்தில முத்தமிட்டு வாழ்த்தி னாங்க. சந்தோஷமாயிருந்தது.

நம்ம லைப் நம்ம கையில இருக்கு. நாம எப்படி செயல்படுறோமோ அப்படித்தான் லைப் இருக்கும். எதைச் செய்தாலும் யோசித்து செய்யணும். இருக்கும் “பாசிட்’டி வான சூழ்நிலைகளை பயன்படுத் திக்கிட ஆசைப்பட்டு “நெகட்டி’ வான வேலைகள்ல இறங்கிடக் கூடாது. நமக்கு என்ன லிமிட்டோ அத்தோடு நின்னுக்கணும். இந்த நினைப்போடு எந்த வேலைக்கு போனாலும் பிரச்னை ஏதும் வராது. வந்தாலும் தைரியமா நின்னு ஜெயிக்கலாம்ன்னு தைரியம் தன் னால வரும்,” என்று பொறுப்பாக சொன்னார் சுஜிதா. வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

 { { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: