செல்லமே சீரியலில் வில்லத்தனம் காட்டும் சிநேகாவாக வந்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கு கிறார். அதேசமயம் அத்திப்பூக்கள் சீரியலில் போலீஸ் அதிகாரி ரெஜி னாவாக வந்து பாராட்டு பெறுகிறா ர் நடிகை தேவிப்ரியா.
எப்படி ஒரே நாளில் வில்லியாக, நகைச்சுவை நடிகையாக, கண்டிப் பான அதிகாரியாக நடிக்க முடிகிற து என்ற கேள்வியோடு அவரை சந்தித்தோம்.
சினிமாவா சீரியலா என்று கேட்டால் நான் சீரியலுக்குத்தான் முக்கி யத்துவம்
தருவேன். ஏனெனில் சினிமாவை விட சீரியலில்தான் நடிகைகளின் கேரக்டர்கள் அதி கமாகப் பேசப்படுகிறது.
சீரியல் பல கதைகளை வீட்டுக்கு ள்ளேயே கொண்டு செல்வதால் மக்களால் மிகவும் ரசிக்கப்படுகி றது. சினிமாபோல் சீரியல் பொழுது போக்கிற்கா கப் பார்க்கப்படுவதில்லை. சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப் பை உருவாக்குகிறோமே அதுவே பெரிய வெற்றிதான்.
மேலும் சினிமாவை விட சீரியலுக்கான வரவேற்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்குக் கார ணம் சீரியல்களின் புதிய கதைக் களங்கள்தான்.
சீரியலில் பழி வாங்கல், துரோக ம், கணவன் மனைவி தொடர்புக ளில் சிக்கல் இவைகள்தான் சீரி யல்களில் ஆண்டாண்டு காலமா க சொல்லப்பட்டு வருகின்றன என்பது உண்மைதான். மனிதர்க ளின் சராசரி வாழ்க்கைதான் இங் கு சீரியலாக்கப்படுகிறது.
மாமியார்-மருமகள் பிரச்னையை பற்றி சொல்லும்போது பழி வாங் கல், துரோகம் போன்றவற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். சினி மாவை விட பாலியல் தொடர்பான விஷயங்கள் சீரியலில் குறை வுதா
ன். இருந்தாலும் ஒரு கதை சொல்லப்படும் போ து அது தவிர்க்க முடியாத விஷ யமாகி விடுகிறது.
சீரியலை குடும்பமே உட் கார்ந்து பார்க்கக் கூடிய இன்றைய சூழலில் இந்த விஷயங்கள் குறைந்தா ல் கொஞ்சம் நன்றாக இரு க்கும். அதைக் கட்டுப்படு த்தும் வகையில் சீரியலுக் கென தனி சென்சார் வந்தால் வர வேற்கலாம்.
இப்போது ‘செல்லமே’, ‘ அத்திப்பூக்கள்’, போன்ற குறிப்பிடத்தக்க சீரி யல்களில் மட் டுமே நடித்து வருகிறேன். இந்த இரண்டுமே மாறுபட்ட கதாபாத்திரங்களை கொண்டவை. மக்களிடம் நன்றாக ரீச் ஆகியிரு க்கி ன்றன.
சினிமாவில் எனக்கு முக்கியத்துவமான கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறேன். ‘வல்லமை தாராயோ’, ‘நாயகன்’ படங்களில் நல்ல கேர க்டர் கிடைத்தது. அது போல் கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்று கூறி விடை பெற்றார் தேவிப்ரியா.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.