Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தை பாதிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்க ப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் கேடுற்று ‌விரை வில் சிதைந்து விடுகிறது. இதனால் விரைப்புத்தன் மை இல்லாமை, விந்தணு க்களில் குறைபாடு ஏற்படு தல், விந்து முந்துதல், செக் ஸ் உணர்ச்சி குறைந்துவி டுதல்,

பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொ ள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல் வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.

பாதிக்கப்படுவோர்!அதிகம் 

நடு‌த்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை நோ ய் வருவது பரவலாக அதிகரித்து வரு கிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல்திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க் கரைநோயால் மேலும் பல் வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளா கிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொ ள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடு த்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவு க்கு ஆளாகிறார்கள்.

ஆண்கள் அதிக பாதிப்புக்கு ஆளா வது எப்படி?

பெண்களின் பாலுறுப்புகள் அவர்களுடை ய உடலின் உட்புறத்தில் அமைந்துள்ளது. அவர்களுக்குத்தோன்றும் கிளர்ச்சி நிலை களும், எழுச்சிகளும் வெளியே தெரிவதி ல்லை. ஆனால் ஆண்களுக்கு அவ்வாறி ல்லை. பாலுறுப்பு வெளியே உள்ளது. அந் த உறுப்பும் விரைப்படைந்தால் மட்டு மே பாலுறவு கொள்ள இயலும். இயலாவிட்டால் பாலுறவு கொள்ள முடியாது.

விரைப்பை ஏற்படுத்தும் கார ணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப் படுகிறது என்பது பொதுவான விஷயம். ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற் றும் மது போன்ற பழக்கங்களி ல் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிக மாக மன இறுக்கம், வேலைச் சுமை, டென்ஷன், அதிக சொகுசாக வாழ் தல் போன்ற பல காரணிக ளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட் டத்தைக் காட்டுகிறார்கள்.

இதனால்தால் ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்பு கள் உண்டாகின்றன.

நன்றி – இளமை (அமிர்தா)

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: